Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ் ஹிப்கின்ஸ்-சை மே 22,2023 அன்று போர்ட் மோர்ஸ்பி-யில் இந்தியப்- பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சந்தித்துப் பேசினார். இரு பிரதமர்களுடனான சந்திப்பு நடைபெறுவது இதுவே முதல் முறை.

இவ்விரு தலைவர்களும் ஏற்கனவே அமலில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முன்னெடுப்புகள் குறித்து விவாதித்ததுடன், தொழில் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் மக்களுடனான தொடர்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ளவும் ஒப்புதல் அளித்தனர்.

****

(Release ID: 1926259)

AP/ES/RR/KRS