உத்தராகண்ட் மாநிலம் தேவ்ஸ்தலில் 3.6 மீட்டர் ஒளித் தொலைநோக்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பெல்ஜியம் பிரதமர் திரு சார்ல்ஸ் மைக்கேலும் கூட்டாக இன்று துவக்கி வைத்தார்கள்.
இந்தியாவின் ஏரீஸ் என்ற ஆரியபட்டா ஆராய்ச்சி நிறுவனமும் பெல்ஜியத்தின் அமோஸ் என்ற எந்திரவியல் மற்றும் ஒளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து தயாரித்த ஒளித் தொலைநோக்கி உத்தராகண்ட் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இது அதிநவீன உலகத்தரம் வாய்ந்த தொலைநோக்கி ஆகும். பல்வேறு முன்னணி அறிவியல் செயல்பாடுகளுக்கும் தேவையான மதிப்பீடுகளை வழங்க உதவக் கூடிய தொலைநோக்கி ஆகும்.
இமயத்தில் நிறுவப்பட்டு முற்றிலும் பயன்படக்கூடிய இந்த அதி நவீன தொலைநோக்கியை உருவாக்கியதற்காக இரு நாட்டு விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். இது இருநாட்டு அரசுகளின் முயற்சி மட்டும் அல்ல. இந்தியாவின் தன்னாட்சி நிறுவனமான பெற்ற ஏரீஸ் நிறுவனமும் பெல்ஜியத்தின் தனியார் அமோஸ் நிறுவனமும் இதில் பங்களிப்பைச் செலுத்தி உள்ளன. 6000 கிலோ மீட்டருக்கு அப்பால் பிரசல்ஸ் நகரில் இருந்தபடியே இதனை இயக்கி வைத்திருப்பது ஒன்றுபட்டு முயன்றால் சாத்தியமற்றது எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் வானமே எல்லை என்றும் குறிப்பிட்டார்.
PM Michel & I activated India's largest optical telescope, an example of what India-Belgium partnership can achieve. https://t.co/j9hciAsp2v
— Narendra Modi (@narendramodi) March 30, 2016