Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடியுடன் டிஜிட்டல் உரையாடல்


‘கண்டறிதல், கற்றுக்கொள்ளுதல், கண்டுபிடித்தல் மற்றும் செயல்படுத்துதல்’ ஆகியவற்றின் ஒரு வழிமுறையே தொழில்நுட்பம் என பிரதமர் திரு.நரேந்திர மோடி விளக்கம் அளிக்கிறார். டிஜிட்டல் உரையாடல் நிகழ்ச்சியில், தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர், நமக்கு அதிகளவில் பயன்படும் தொழில்நுட்பம் குறித்தும், அதற்கான விளக்கங்கள் குறித்தும், நம்முன் உள்ள வழிகள் குறித்தும் பேசினார்.

தொழில்நுட்பம் குறித்த கருத்துகள்:
‘‘அது (தொழில்நுட்பம்) 3 எஸ்களான வேகம், எளிமை மற்றும் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. தொழில்நுட்பம் வேகமானது, தொழில்நுட்பம் எளிதானது, தொழில்நுட்பம், மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு புத்திச்சாலியான வழி. மேலும் அது ஒரு மிகச்சிறந்த ஆசிரியரும் கூட. நாம் தொழில்நுட்பம் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாக இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும், அதுவே நல்லது.’’

‘‘குறைந்த அளவு அதிகாரம் படைத்தவர்களை தொழில்நுட்பம் பலப்படுத்துகிறது. விளிம்பு நிலையில் வாழும் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய வலுவான சக்தி என்றால் அது தொழில்நுட்பம் தான்.’’

டிஜிட்டல் இந்தியா தொடக்கம் குறித்து அவர் பேசியது:
‘‘டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நனவாக்க இந்த ஒட்டுமொத்த தேசமும் கைகோர்த்து இணைந்துள்ளது. இளைஞர்கள் ஆர்வமுடன் உள்ளனர், தொழில் நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன மற்றும் அரசும் செயல்திறத்துடன் இருக்கிறது. டிஜிட்டல் புரட்சிக்காக இந்தியா ஏங்கிக் கொண்டிருக்கிறது.

‘‘டிஜிட்டல் இந்தியாவை நோக்கி தொழில் நிறுவனங்கள் அளித்துள்ள முதலீடு செய்துள்ளது அவர்களின் நம்பிக்கையை குறிக்கிறது. மேலும் இதனால் பல தலைமுறைகளாக நேர்மறை விளைவுகள் உணரப்படும். குறிப்பாக, நம் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.’’

சமூக ஊடகங்கள் குறித்து பிரதமரின் கருத்து:
‘‘எதிர்காலமே சமூக ஊடகங்களுக்கு சொந்தமானது. அது சமத்துவத்தை உள்ளடக்கி உள்ளது. சமூக ஊடகம் என்பது எந்த ஒரு நாட்டை பற்றியோ, மொழியை பற்றியோ, நிறத்தை பற்றியோ, சமூகத்தை பற்றியோ விளக்குபவை அல்ல. அவை மனித மதிப்புகள் பற்றி கூறுபவை. மனித நேரம் அதன் அடித்தளத்திலிருந்து இணைந்து பிணைந்திருக்கிறது’’

மொபைல் கவர்ன்ஸ் குறித்து பிரதமர்:
‘‘எம்&கவர்ன்ஸ் என்பது அரசுக்கு அதிகாரத்தை அளிப்பதாகும். உண்மையில் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய சாத்தியமாகும் இது, முழுமையான மக்கள் இயக்கமாகும். அது அனைவரையும் எட்டும் ஒரு ஆட்சியை முன்வைக்கிறது. மேலும், உங்கள் கையில் 24/7 ஆட்சியை கொண்டு வருகிறது.’’

‘தொடங்கிடு’ குறித்து:
‘‘தொடங்கிடுதல் என்பது அதிவேக வளர்ச்சியின் இயந்திரங்களாகவும், கண்டுபிடிப்பு சக்தியின் வெளிப்பாடாகவும் உள்ளது. இன்றைய பெரிய நிறுவனங்கள் நேற்றைய தொடக்கங்கள் தான்.’’

‘‘தொழில்நுட்ப சக்தியின் உந்துதலால், அடுத்த பெரிய சிந்தனையின் வெளிப்பாடாக கண்டுபிடிப்பு தளமாக இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.’’

கடந்த சனிக்கிழமை, ஜூலை 4ம் தேதி, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது டுவீட்டில், தொழில்நுட்ப ஆர்வலர்கள் டிஜிட்டல் உரையாடலில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். #DigitalDialogue என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி, மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார். அதில் பல ட்வீட்கள் மற்றும் இடுகைகள் பகிரப்பட்டன. அதே நேரத்தில், முந்தைய ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த கடிதங்களும் வந்துள்ளன. அவைகளுக்கும், டுவீட்களுக்கும் பிரதமர் அளித்த

பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
கேள்வி 1: டிஜிட்டல் இந்தியா வாரம் தொடங்கப்பட்டது குறித்து சமூக ஊடக தளங்களில் (டுவிட்டர், பேஸ்புக், லிங்க்டுஇன்) ஒரு பொதுவான கேள்வியாக இருந்து வருகிறது. அதற்கு கிடைத்த வரவேற்பு உங்களை ஊக்குப்படுத்துவதாகவும், உங்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாகவும் அமைந்ததா?

டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நனவாக்க இந்த ஒட்டுமொத்த தேசமும் கைகோர்த்துள்ளது. இளைஞர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். தொழில் நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன மற்றும் அரசும் செயல்திறத்துடன் இருக்கிறது. டிஜிட்டல் புரட்சிக்காக இந்தியா ஏங்கிக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் இந்திய தொடங்கப்பட்டத்தில் இருந்து, கற்பனைக்கு எட்டாத, முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உற்சாகம் பிறந்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவை நோக்கி தொழில் நிறுவனங்கள் அளித்துள்ள முதலீடு செய்துள்ளது அவர்களின் நம்பிக்கையை குறிக்கிறது. மேலும் இதனால் பல தலைமுறைகளாக நேர்மறை விளைவுகள் உணரப்படும். குறிப்பாக, நம் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இது போன்ற மிகப்பரந்த திட்டமிடல் முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை. இந்த கனவானது, வெறும் மத்திய அரசு மற்றும் தனியார் துறை மூலம் மட்டும் முழுமை அடைந்து விடாது. அனைவரும் (மத்திய, மாநில அரசுகள், கூட்டமைப்புகள், பெரும் வர்த்தக நிறுவனங்கள், மக்கள்) இணைய முன்வர வேண்டும். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி உழைக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி அனைத்து மக்களையும் அடையும் என பலரும் கேட்டு கடிதம் எழுதுகிறார்கள். அவர்கள், பஞ்சாயத்து முதல் நாடு முழுவதிலுமான மக்கள்-அரசு சேவை குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள். @RishiBagree கழிவு மேலாண்மை செயலி குறித்து முன்னிலைப்படுத்துகிறார். @kumawatraj பொது விநியோக சேவையை தரம் உயர்த்துவதல் குறித்தும் எலக்ட்ரானிக் ரேஷன் கார்டு குறித்தும் பேசியிருக்கிறார். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, டிஜிட்டல் இந்தியா தேடலில் அனைத்தும் சூழ்ந்திருக்கிறது. அது பல வழிகளிலும் உங்கள் வாழ்வை அடைந்த, எளிதாக்கப் போகிறது.

உதாரணமாக, டிஜிட்டல் லாக்கர், மின் கையொப்பம் மூலம் அனைத்து முக்கிய ஆவணங்களையும் எளிதாகவும், செயல்திறத்துடனும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த தொந்தரவும் இல்லாமல், ஒரே கிளிக்கில் ஆவணங்களை அணுக முடியும். சுகாதாரத் துறையில் இ-ஆஸ்பிடலை எடுத்துக் கொண்டால், மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்று உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம், ஆன்லைனில் அறிக்கை பெறலாம். @microrao, மருந்து, மாத்திரைகளின் கட்டணம் மற்றும் அதன் தகவல்களை அறிய தனி ஆன்லைன் தளம் பற்றி கேள்வி கேட்டார். அது தொடர்பாக DeitY ஏற்கனவே செயல்திறத்துடன் செயல்படுவதைப் பற்றி அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தேசிய உதவித்தொகை தளமானது, அனைத்து உதவித்தொகை திட்டங்களையும் ஒரே விண்ணப்படிவத்தின் கீழ் கொண்டு வந்துவிடும். எனவே படிவங்களை பூர்த்தி செய்வதற்கு பதிலாக, ஒரே வழிமுறையில் சரியான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, விண்ணப்பத்தின் மீதான அதிகாரிகள் மேற்கொள்ளும் அடுத்தடுத்த கட்ட பணிகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் உண்மையான பலம், விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளும்போதுதான் தெரியவரும். அதிகப்படியான பயன்பாடு முதிர்ந்த ஒரு நிலைக்கும், உலகத்தரம் வாய்ந்த சேவைக்கும் வழிவகுக்கும். அதனால் ஒவ்வொரவரும் முடிந்தவரையில் புதுமையான சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சியுங்கள். உதாரணமாக, உங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு மொபைல் போன் மூலமாக அவர்களின் ஜன் தன் வங்கி கணக்குக்கு சம்பள பணத்தை அனுப்புங்கள். இதுபோல், முடிந்தவரை பல வழிகளில் இதுபோன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி-2: @BGMahesh (பி.ஜி.மகேஷ்) – உங்களின் வழக்கமான தொழில்நுட்ப பயன்பாடுகள் என்ன? எந்தெந்த வழிகளில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக தொழில்நுட்பம் உள்ளது?

இந்த கேள்வியைத்தான் நிறைய மக்கள், நான் அவர்களை சந்திக்கும் போது கேட்கிறார்கள். அவர்கள் என்னிடம் தொழில்நுட்பங்கள் பற்றியும், எந்த மொபைல் போனை நான் பயன்படுத்துகிறேன் என்றும், எப்படி அடிக்கடி இமெயில் பார்க்கிறேன் என்றும் கேட்கிறார்கள்.

என்னை பொறுத்த வரையில் தொழில்நுட்பம் என்பது ‘கண்டறிதல், கற்றுக்கொள்ளுதல், கண்டுபிடித்தல் மற்றும் செயல்படுத்துதல்’ ஆகும்.
அது 3 எஸ்களான வேகம், எளிமை மற்றும் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. தொழில்நுட்பம் வேகமானது, தொழில்நுட்பம் எளிதானது, தொழில்நுட்பம், மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு புத்திச்சாலியான வழி. மேலும் அது ஒரு மிகச்சிறந்த ஆசிரியரும் கூட. நாம் தொழில்நுட்பம் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாக இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும், அதுவே நல்லது.
தொழில்நுட்பமானது உலகத்தை ஊக்கப்படுத்துகிறது. பரந்து விரிந்த கடல் போன்ற தொழில்நுட்பத்தில் ஒரு சிறு துளியைத்தான் என்னால் அடைய முடிந்தது. இன்னும் அதிகமாகவும், அதிமாகன நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் அறிய விரும்புகிறேன். ஆனால் எனக்கிருக்கும் பணியில் அது மிகவும் கடினமான காரியமே.

பொதுமக்களுக்கு நல்லது செய்யும் வசதிகள் ஏதாவது வந்தால், இன்னும் நான் வினோதமான மனநிலையிலேயே இருக்கிறேன். அதனால், நான் மேலும் நிறைய கற்க வேண்டியுள்ளது. தொழில்நுட்பம் மூலம் பொதுமக்களின் நலனை எவ்வாறு உறுதி செய்வது என கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். நான் அதைப் பற்றியே சிந்தித்து, முடிந்தவரை அதிகம் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

வெகுஜன மக்களைப் போல நானும், என்னுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்க முயற்சிக்கிறேன் (ஆனால் என் சொந்த நெறிகளின்படி, நான் இன்னும் மெதுவாக செயல்படுகிறேன்). தொழில்நுட்பம் மிக வேகமாக தகவல்களை அணுகச் செய்கிறது. நான் எங்கு சென்றாலும் செய்திகளை அணுக முடியும். மலைப்பாதையாக இருந்தாலும், வடகிழக்கின் பின்தங்கிய சத்திஸ்கர் மாநிலமாக இருந்தாலும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள எனக்கு உதவிவரும் தொழில்நுட்பத்துக்கு நன்றி கூறுகிறேன்.

நான் கட்சிப் பணியை தொடங்கிய காலத்தில் இருந்தே என்னுடைய வேலைகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஒரு முதலமைச்சராக, அரசு நிர்வாகத்துடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டேன். தற்போது தில்லியிலும் அதே முயற்சிகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு, பிரகதியை நாங்கள் தொடங்கி வைத்தோம். இது தொழில்நுட்பம் சார்ந்த பல்நோக்கு மற்றும் பல முடிச்சுகளுக்கான இயங்குதளம். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளை அடையாளம் காணவும், திட்டங்களை கண்காணிக்கவும் முடியும். ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன்கிழமை, பிரகதி அமர்வில், உயர் அதிகாரிகளுடன் பரவலான துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை பணிகள் குறித்து நான் கலந்துரையாடுகிறேன். இதன் மூலம், மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். வறுமையை தணிப்பதிலிருந்து செயல்முறைகளை எளிமைப்படுத்துவது, சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவது வரை தொழில்நுட்பம் நீக்கமற நிறைந்துள்ளது. அது மனித முன்னேற்றத்தின் ஒரே ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது.

தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது. தொழில்நுட்பத்தின் எதிர்காலமானது அதன் மனிதமயமாக்கலில் அடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பமானது, மனித உணர்வுகளை, விருப்பங்களை மற்றும் தேர்வுகளை தகவமைத்து வருகிறது. தொழில்நுட்பத்தை புத்திச்சாலித்தனமாக பயன்படுத்துவது, நமது வாழ்கையில் மாற்றத்தை கொண்டு வரும் வினையூக்கியாக இருக்கும்.

கேள்வி-3: @ramyavenugopal (ரம்யா வேணுகோபால்) கேட்கிறார் & லிங்க்டுஇன் தளத்தில் நீங்கள் சுறுசுறுப்பாகவும், துடிப்பாகவும் செயல்பட்டு வருகிறீர்கள். எப்படி சமூக ஊடகங்கள் மக்களுடன் உங்களை இணைக்க உதவி செய்து வருகின்றன?

எதிர்காலமே சமூக ஊடகங்களுக்கு சொந்தமானது. அது சமத்துவத்தை உள்ளடக்கி உள்ளது. சமூக ஊடகம் என்பது எந்த ஒரு நாட்டை பற்றியோ, மொழியை பற்றியோ, நிறத்தை பற்றியோ, சமூகத்தை பற்றியோ விளக்குபவை அல்ல. அவை மனித மதிப்புகள் பற்றி கூறுபவை. மனித நேரம் அதன் அடித்தளத்திலிருந்து இணைந்து பிணைந்திருக்கிறது.

இதற்கு உதாரணமாக, சமீபத்திய #SelfieWithDaughter டிரெண்ட்டை குறிப்பிடலாம். அரியானாவின் ஒரு மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை பற்றி சமூக ஊடகம் மூலமாக படித்தேன். உடனே இதைப் பற்றி எனது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் மகள்களுடன் செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றும் செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கருதினேன். உடனே உலகளவில், இந்தியா முழுவதிலும் ஒரு டிரண்ட்டாக மாறியது. ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மக்களும், அமெரிக்கர்களும், தெற்காசிய அண்டை மக்களும் அவர்களின் மகளுடன் செல்பி எடுத்து பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு செல்பிக்களை மக்கள் பகிர்ந்து கொள்வது, வெறும் பிரதமரின் அழைப்புக்கு அளிக்கும் பதில் அல்ல. இது, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மனிதர்களை இணைக்கும் செயலாகும். அந்த இணைப்பு தான் நம் அனைவருக்கும் இந்த உலகத்திற்கும் முக்கியமானது.

யோகா தினத்தன்று உலகெங்கிலும் என்ன நடந்தது என்பதை சமூக ஊடகங்கள் மூலம் உலகமே பார்க்க முடிந்தது. உடல் தூரங்கள் தேவையற்றாகிப் போய்விட்டது. இதே போல், முந்தைய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் போது, #IncredibleIndia பற்றி சில துளிகளை பகிர்ந்து கொள்ளமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு ஒரு லட்சம் பதில்கள் கிடைத்தன. வியட்நாமை சேர்ந்த ஒரு நபர், இந்தியா பற்றிய அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டதன் மூலம், டுவிட்டரில் நான் அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாரணாசி நதிக்கரையை சுத்தம் செய்ய ஒரு நண்பர்கள் குழு முடிவு செய்தால், அது உலகம் முழுவதும் அலையை உருவாக்கும்.

சமூக ஊடகங்களில் என் இருப்பு, பல வழிகளில் என்னை வளமாக்கி உள்ளது. அதிகமான வேலை நாட்களில், சமூக ஊடகத்தில் நுழைந்ததும் அது என் மிக மிக புதுப்பித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ், லிங்க்டுஇன், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடங்களில் நான் செயல்பட்டு வருகிறேன். அவை, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற ஒரு துடிப்பை எனக்கு கொடுக்கின்றன. சமூக ஊடகம் மூலம் நிறைய கருத்துக்களை பெற்றுள்ளேன். உதாரணமாக, நான் ஒரு கூட்டத்தில் மிக வேகமாக பேசியதாக ஒரு நபர் டுவீட் செய்தார். இதுபோல, நமது பரபரப்பான வாழ்வில், சமூக ஊடகங்கள் நம் அனைவருக்கும் ஒரு கண்ணாடி போல செயல்பட்டு வருகின்றன.

சமூக ஊடக பயன்பாடு மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். அது சாதாரண ஒரு மனிதனுக்காக குரல் கொடுக்கிறது. இது ஒரு மேம்பாடுத்தும் தளம். முடிந்தவரை அதை சாதகமாக மற்றும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்த ஊடகத்தின் சக்தியை புரிந்து கொள்ளும் போது, உங்களால் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

கேள்வி-4: ஆந்திர மாநிலத்தில் இருந்து நாராயண் ரெட்டி எழுதினார்: ஏற்கனவே அதிகாரம் படைத்தவர்களுக்கு கூடுதலான அதிகாரமாக தொழில்நுட்பங்கள் இருப்பதாக ஒரு உணர்வு இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கையை தொழில்நுட்பம் மூலம் எப்படி மாற்ற முடியும்? @RupamG (ரூபம் கதக்) கேட்கிறார் & கிராமப்புற இந்தியாவில் சிறந்த இணைய ஊடுருவல் தேவை, அதை எப்படி டிஜிட்டல் இந்தியாவால் அடைய முடியும்?

குறைந்த அளவு அதிகாரம் படைத்தவர்களை தொழில்நுட்பம் பலப்படுத்துகிறது. விளிம்பு நிலையில் வாழும் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய வலுவான சக்தி என்றால் அது தொழில்நுட்பம் தான். இது ஒரு சமநிலையாளராகவும், உந்துசக்தியாகவும் சேவை செய்கிறது.
உதாரணத்துக்கு விவசாயிகளை எடுத்துக் கொள்ளலாம். உற்பத்தி மிகுந்த, வளமான மற்றும் லாபம் தரும் தொழிலாக வேளாண்மையை ஆக்க தொழில்நுட்பத்தால் முடியும். உலக அளவில் அதை நாம் பார்த்துள்ளோம். நம் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் வேளாண் தொடர்பான தகவல்களை எஸ்.எம்.எஸ். வாயிலாக பெற்றுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

சமீபத்தில், வேளாண்&தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிதி மூலம் தேசிய வேளாண் சந்தை ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 585 ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் பொதுவான மின்மேடை மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள், விவசாய பொருட்களை உகந்த விலையில் வெளிப்படையான முறையில் வாங்குவதற்கும் விற்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

எப்போது ஒருநபரால் தனது மொபைல் போன் மூலமாக ஆட்டோ ரிக்ஷாவை அழைக்க முடிவது சாத்தியமாகிறதோ அப்போது அவருக்கு ஏற்ற படியான வாழ்க்கை வசதியாகிறது. ஆனால், அந்த ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் செய்யும் மாற்றத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும். தொழில்நுட்பத்தின் காரணமாக, ரயில் டிக்கெட் உள்ளிட்ட விஷயங்களை பெறுவது எளிதாக மாறிவிட்டன. டிக்கெட் வாங்குவதற்காக நாள் முழுவதும் வேலையை விட்டு, நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அதிக முதலீடு கிடைக்காத சிறு தொழில்முனைவோருக்கு, மதிப்பை உருவாக்க, தொழில்நுட்பம் மூலம் ஒரு வாய்ப்பு கிடைக்கும். பருவகால சுற்றுலா ஓட்டம் நம்பி வாழும் நமது கைவினை தொழிலாளர்கள், இப்போது ஒரே கிளிக்கில் உலகம் முழுவதும் தங்கள் தயாரிப்புகளை விற்க முடியும். பல்வேறு வகையான சேகரிப்பாளர்களால், நாட்டின் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வு புத்துயிர் பெற்றுள்ளது. சில்லரை வணிகம், சுற்றுலா, போக்குவரத்து, உணவு துறை, தொழில்நுட்பம் ஆகியவை நாட்டின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கு புதிய தளத்தை அமைத்து தந்துள்ளன.

நான் ஒரு சிறு கதையை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலமைச்சராக நான் இருந்தபோது, வல்சாத் மாவட்டம் கப்ராடா பழங்குடியின பகுதியில், பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்து வைக்க சென்றிருந்தேன். அந்த மையத்தில், நிகழ்ச்சியை நடத்த போதிய இடமில்லை. அதனால், 3 கி.மீ. தூரம் தள்ளி உள்ள பள்ளி மைதானத்தில் கூட்டம் நடந்தது. அங்கு, 3-40 பழங்குடியின பெண்கள், பால் பெற்றுச் செல்ல வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து திரும்பும் சமயத்தில், 3-4 பெண்கள் சேர்ந்து அவர்களின் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களிடம் சென்று, ‘மொபைல் போனில் போட்டோ எடுத்து அதை என்ன செய்வீர்கள்?’ என கேட்டேன். அதற்கு அவர்கள், இந்த புகைப்படங்களை கம்ப்யூட்டரில் பதவிவேற்றம் செய்து அதை பெரிதாக பிரிண்ட்அவுட் எடுப்போம் என்றார்கள். அப்படிக் கூறிய பெண்கள், மொபைலில் எடுக்கும் போட்டோவை என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள கூட இடங்களில் ஒன்றான பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லாதவர்கள். ஆனால் அவர்களுக்கு, மொபைலில் எடுக்கும் போட்டோவை கம்ப்யூட்டருக்கு மாற்றி அதிலிருந்து பெரிதாக பிரிண்ட்அவுட் எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் மிகவும் வியப்படைந்தேன். இதுதான், விளிம்பு நிலை மக்களையும் தொழில்நுட்பம் எவ்வாறு சென்றடைகிறது என்பதற்கான சிறு உதாரணம்.

கேள்வி-5: ஷாய்லி சோப்ரா – ஒரு இளம் டிஜிட்டல் தொழில்முனைவோராகிய நான் தெரிந்து கொள்ள விரும்புவது, தொழில்நுட்பமும், இந்தியாவின் மக்கள் தொகையும் குறிப்பாக பெண்களும் ஒரே புள்ளியில் சந்திப்பது எப்படி?

இந்த ஒருங்கிணைப்பானது இயற்கையானது என்றே நான் கருதுகிறேன். இதுபோன்ற ஒருங்கிணைப்புகளை இந்தியா இயற்கையாகவே பெற்றுள்ளது. ஆம், உலகின் பல பகுதிகள் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளன. ஆனால் எந்த நாடும் நம்மைப் போல பெரும் மக்கள் தொகையை கொண்டதில்லை. இந்தியா ஒரு முழுமையான தொகுப்பாக இருக்கிறது.

இந்தியாவில் தொழில் புரட்சி என்பது தாமதமாக நடந்திருக்கலாம். ஆனால், நாம் தற்போதைய ஸ்டார்ட்அப் புரட்சியில் வலுவாக உள்ளோம். உலகின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தற்போது நாம் 4வது இடத்தில் உள்ளோம். மிக விரைவிலேயே, அமெரிக்காவுக்கு அடுத்ததாக நாம் 2வது இடத்தை எட்டிப் பிடிப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதில் சிறந்த பங்களிப்பு, இளைஞர்களால் இயக்கப்படுகிறது. இதுதான், உலகத்தின் ஆர்வத்தையும் ஈர்த்து விடும் தன்மையையும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சக்தியூட்டும் தன்மையையும் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு உங்களுக்கானது.

நமது இளைஞர்களின் வளமும், திறமையையும் கண்டறியும் ஒருவடிகாலாக தொழில்நுட்பங்கள் உள்ளன. விரிவடைந்து வரும் நுகர்வோர் சந்தைக்கும், பெருகி வரும் மக்கள் தொகைக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து தொழில்நுட்பம் சேவை புரிந்து வருகிறது. இந்த இடத்தில் மைகவ் அனுபவத்தை குறிப்பிட விரும்புகிறேன். இது, தொழில்நுட்பம் வாயிலாக தேசத்ததை கட்டமைக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி வருகிறது. அறிவுப்பூர்வமான பல யோசனைகள் மைகவ் மூலமாக கிடைத்து வருகின்றன. அதனால், ‘என்னைப் போன்ற இளைஞர்கள் (தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்) எப்படி டிஜிட்டல் இந்தியாவில் பங்கேற்பது?’ என கேள்வி கேட்டும் @Priyanka_1512 (பிரியங்கா அகர்வால்) அவர்களுக்கும், ‘தொழில்நுட்பம்/பொறியியல் படித்து முடித்த மாணவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு அவர்களின் பங்களிப்பை வழங்க எவ்வாறு நீங்கள் ஊக்குவிக்க விரும்புகிறீர்கள்?’ என கேட்டும் @thetakshakpai அவர்களுக்கும் இன்னும் மற்ற பிறருக்கும், நான் கூறிக் கொள்ள விரும்புவது, மைகவ் இணையதளத்துக்கு செல்லுங்கள், உங்கள் பங்களிப்புதுடன் அந்த இயங்குதளத்தை வளப்படுங்கள் என்பதுதான்.

கேள்வி- 6: இணையதளத்தின் ஊடுருவல் அதிகளவில் உள்ள போதிலும், பலரும் டிஜிட்டல் கல்வியறிவு இல்லாமல் உள்ளனர். டிஜிட்டல் கல்வியறிவை பரப்ப உங்களின் திட்டம் என்ன?
டிஜிட்டல் கல்வியறிவுக்கு வெறும் வரம்புகளை வைத்து நான் பார்ப்பதில்லை. இதில் முக்கியமான விஷயம், தொழில்நுட்பத்தை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்துவதுதான். சில சந்தர்ப்பங்களில் பிரச்னை அணுகல் உள்ளது. சில நேரங்களில், போதுமான வழிகாட்டுதல் பற்றாக்குறை உள்ளது. சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் நபருக்கு வழங்கப்படும் தொழில்நுட்பமாகக் கூட இருக்கலாம். இந்த அனைத்து சவால்களையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை நாம் அதிகரித்து விட்டால், டிஜிட்டல் கல்வியறிவு சவால்களை தணிக்கை செய்து விடலாம்.
மொபைல் கவர்னஸ் மீதான நமது அழுத்தமே தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என கருதுகிறேன். மொபைல் போன் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். நாம் அதன் பயன்பாட்டை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மிக கவனமாக குறைகளை அளவுதிருத்தம் செய்யக்கூடிய வகையிலான தொழில்நுட்ப உதவியுடன் கூடிய தீர்வுகளை தேர்ந்தெடுக்கும் வகையிலான கட்டமைப்பை நம் மக்களுக்கு தர வேண்டும். ஒரு வலுவான தேர்வு கட்டமைப்பை வழங்குவதன் மூலம், உற்பத்தியாளர்கள் புதுமைகளை தொடர்ச்சியாக புகுத்துவார்கள். மேலும் பொருட்கள் மற்றும் சேவை மீதான விவாதத்தின் அடிப்படையில் சிறந்ததை நுகர்வோர் தேர்வு செய்து கொள்வார்கள். அதன் மூலம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும்.

மொத்தத்தில் தொழில்நுட்பத்தின் பணியை நிலைநிறுத்துவதே முக்கியம். கடந்த காலங்களில் தொழில்நுட்பம் பயன்பாடு தனிமைப்படுத்தப்பட்டிருந்ததை நாம் பார்த்துள்ளோம். கவனத்தை ஒருங்கிணைக்கும் சக்தி தொழில்நுட்பத்துக்கு உள்ளது. ஒருங்கிணைப்பானது பல்வேறு வசதிகளையும், பயன்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் தனிப்பட்ட டிஜிட்டல் அடையாளத்தை வழங்க விரும்புகிறோம். கடந்த காலங்களில் ஒவ்வொரு நபருக்கும் பல்வேறு விதமான டிஜிட்டல் அடையாளங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு சேவைக்கும் அதற்கான தனி தகுதியையும் ஒவ்வொரு சேவையும் அதற்கென தனி தகவல்களஞ்சியத்தையும் கொண்டிருக்கின்றன.

இன்று நம் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் அனைத்துமே ஒரு மாற்று தொழில்நுட்பத்தினால்தான். வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தை தழுவிக் கொண்டு இருக்கும் 2வது நாடாக இந்தியா வரும் காலங்களில் நிச்சயம் மாறும் எந்த நம்பிக்கை உள்ளது.

கேள்வி-7: பீகாரிலிருந்து சந்தன் குமார் கேட்கிறார் – அடிப்படையில் மிகக்குறைந்த திறமை கொண்டதாக சிந்திக்கப்படும் இந்தியாவில் தொழில்நுட்பமும், தன்னியக்கமாக்கலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஒட்டுமொத்த புதிய தலைமுறைக்கும் வேலைவாய்ப்பையும், தொழில் நிறுவன வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வாய்ப்புகளும், கால அவகாசமும் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறது. உலகம் முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் ஆர்வமுடன் படித்து வருகிறேன். புதிய தலைமுறை இயந்திரங்கள் வருகையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தது இயந்திரங்களின் காலம் என்றும் சிலர் கூறுகின்றனர். 3டி பிரிண்டிங், இணையதள விஷயங்கள், நுண்ணறிவு இயந்திரங்கள், ரோபோக்கள் இனி பல தொழில் நிறுவனங்களில் தானியங்களாக இருக்கும். அதை சிலர் அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள், நான் அதை ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.
அது ஏன் என விளக்குகிறேன் – மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வலிமையாக உள்ள இந்தியாவுக்கு இயற்கையான அந்த சாதகம் அமைந்துள்ளது. தொழில்நுட்பமும், தன்னியக்கமாக்கலும் சில துறைகளில் திறமை குறைந்த வேலைகளை அடியோடு நீக்கி விடலாம். ஆனாலும் நாம் புதிய திறன்களை கற்றுக் கொள்வதை இயற்கையாக பெற்றுள்ளோம். எனவே, நவீனகால தானியங்கி மாற்றத்தை சமாளித்து புதிய தலைமுறை வேலைவாய்ப்புகளை நம்மால் பெற நிச்சயம் பெற முடியும்.
எனவே, எனது மந்திரம் & ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’, ‘டிசைன் இன் இந்தியா’, ‘திறன் இந்தியா’ ஆகிய திட்டங்களில் உள்ள பாதகங்களை பற்றி பேச வேண்டாம். இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை அனைத்தும் ஒத்திசைந்து, 21ம் நூற்றாண்டில் வாய்ப்புக்காக இந்தியா காத்திருக்கிறது.

கேள்வி-8: மொபைல் கவர்ஸ் குறித்தும் என்.எம். மொபைல் அப்ளிகேஷன் குறித்தும் பிரதமரின் பார்வை குறித்து ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன?
எம்-கவர்னஸ் என்பது அரசுக்கு அதிகாரத்தை அளிப்பதாகும். உண்மையில் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய சாத்தியமாகும் இது, முழுமையான மக்கள் இயக்கமாகும். அது அனைவரையும் எட்டும் ஒரு ஆட்சியை முன்வைக்கிறது. மேலும், உங்கள் கையில் 24/7 ஆட்சியை கொண்டு வருகிறது.

நமது வேலைகள் மொபைலை முன்வைத்தே நோக்கியிருக்க வேண்டுமென, நான் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கூறி வருகிறேன். நீங்கள் நமது அனைத்து இணையதளங்களையும் பார்க்கலாம், அவையாவும் மொபைலுடன் சார்ந்த சேவையை அதிகரித்து வருகின்றன. மொபைல் அப்ளிகேஷன் கண்டுபிடிப்புகள் மேம்படுத்தப்பட்டு, கடைசி கட்டம் வரை அதன் சேவையை வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முடிவுகளை நாம் எடுக்கும் போது, மொபைல், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும்.

அதே நேரத்தில், மொபைல்கள் கற்றுத் தருவதற்கும் எளிதான ஒரு வழிமுறையாகும். இதே புதிய இயங்குதளத்தில் ஒருநபர் ஒருவிஷயத்தை கற்றுக்கொள்ள அதிக நேரமாகும். உதாரணத்துக்கு வாட்ஸ் அப்பில் இப்போது நாம் மிக வேகமாக தகவல்களை பரிமாறிக்கொண்டிருக்கிறோமே.
பத்தாண்டுக்கும் அதற்கு முன்னும், அதிக மக்கள் மொபைல் போன்கள் இல்லாமல் இருந்ததால், அதை வைத்து முயற்சிகள் மேற்கொள்வது சவாலாக இருந்தது. இன்று, நாட்டில் பெரும்பாலான மக்கள் மொபைல் போன் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம். எனவே, மொபைல்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் மட்டும் இருந்த கவனம் அப்பாற்பட்டு மாற்றப்பட்டுவிட்டது.

மொபைல் போன்கள் மூலமாக மக்களை சென்றடையும் ஒரு சிறு முயற்சியாக ‘நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷன்’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு தொடங்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், எனது தரப்பு சமீபத்திய செய்திகள் மற்றும் மேம்படுத்துதலை ஒரே இடத்தில் நிலைநிறுத்தப்படும் முயற்சியாகும். இது, மக்களை நேரடியாக என்னுடன் தொடர்பு கொள்ள உதவுவதுடன், அவர்களின் கருத்துகளை நான் அறிவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. மேலும் முந்தைய செய்திகள், எனது வலைப்பதிவுகள் மற்றும் அரசின் நல்லாட்சி முயற்சிகள், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சிகள் சேமித்து வைக்கும் களஞ்சியமாகவும் உள்ளது. மன் கீ பாத் நிகழ்ச்சிகளை 16 மொழிகளில் கேட்கலாம். மேலும் அந்த வானொலி நிகழ்ச்சியை, ஆப் மூலமாக செய்யப்படும் நேரடி ஒலிபரப்பையும் கேட்கலாம். அதே அப்ளிகேஷன் மூலம் மக்கள் எனது தரப்பு செய்திகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மொபைல் அப்ளிகேஷனுக்கான வரவேற்பு என்னை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.

கேள்வி-9: அங்கிதாஸ் & உங்களுடன் உரையாடுவதற்கு மேற்கொள்ள வேண்டியிருந்த பல அடுக்குகளை குறைத்து, நேரடியாக பேசுவதற்கு வழிவகை செய்த உங்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனி பல்வேறு டிஜிட்டல் உரையாடலுக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். டிஜிட்டல் இந்தியாவின் உச்சகட்ட முன்னுரிமை என்ன? டிஜிட்டல் இந்தியாவில் உலகளாவிய அணுகல் மற்றும் இணையத்தின் பங்காக நீங்கள் எதை பார்க்கிறீர்கள்?

டிஜிட்டல் இந்தியாவின் முக்கியமான 3ஏக்கள் & அணுகல், சேர்க்கை, மலிவு. அதில் அணுகல் மிக முக்கியமாக உள்ளது. நமது 125 கோடி குடிமக்களும் டிஜிட்டல் அதிகாரம் பெற வேண்டும் என விரும்புகிறோம். நாம் ஏற்கனவே, நாடு முழுவதும் பிராட்பேண்ட் பயன்பாடு 63% ஆக கடந்த ஆண்டு உயர்த்தி உள்ளோம். இதை மேற்கொண்டு முடுக்கி விட வேண்டும். மற்ற பங்குதாரர்களின் உயிர்ப்பான ஒத்துழைப்பு மற்றும் ஒத்த ஆற்றலால் மட்டுமே அரசின் முயற்சிகள் முழுமை அடையும். எனவே நாடு முழுவதும் பிராண்ட்பேண்ட் இன்டர்நெட்டை பரவச் செய்ய தனியார் துறை நிறுவனங்களும் இதில் பங்கேற்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

நமது டிஜிட்டல் இந்தியா முயற்சி பற்றிய மதிப்பு கூடுதலாக உள்ளது. அது மக்கள் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். இது அனைவருக்கும் தனித்துவமான, சாதகமான மாற்றத்தை வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் நிதித்திறன் 3வது முக்கியமாக உள்ளது. ஒரு தயாரிப்பானது அணுகக்கூடியதாகவும், எளிதில் சேரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அது மலிவு விலையில் கிடைத்தால் மட்டுமே நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஏனெனில் நாம் யாருக்காக உழைக்கிறோம்? இந்த முயற்சிகளால் அதிக பலன் அடையப்போவது யார் தெரியுமா? ஏழைகளும், விளிம்பு நிலையில் நிற்கும் மக்களும், நடுத்தர மக்களும்தான்.
அளவு, அளவீடு, செல்வாக்கு என்ற வகையில் நமது டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் பாதைகளை உடைத்து, அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்து, 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான கதையை வடிவமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் விதமாக அமைய வேண்டும்.

கேள்வி-10: ‘மன் கீ பாத்’ கடிதத்தில், ராஜ்கோட்டிலிருந்து கிஷோர் திரிவேதி எழுப்பிய கேள்வி & பிரதமர் அவர்களே, டிஜிட்டல் இந்தியாவை எட்டும் திட்டவரைவில் உள்ள முக்கிய சவால்களாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்?

நாம் எப்போது இதுபோன்ற லட்சிய முயற்சிகளையும், மிகப்பெரிய அளவிலான ஒரு திட்டத்தை தொடங்கும் போதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அந்த சவால்களை நாம் குறைத்து மதிப்பிடவும் கூடாது, அதில் மூழ்கிவிடவும் கூடாது. நமது திட்டத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் நுண்ணிய கவனத்துடன் இருக்க வேண்டும்.

நான் ஏற்கனவே அணுகுதல் பற்றியும், எளிதான அணுகுதல் பற்றியும் பேசியிருக்கிறேன்.

நமது 2வது சவால், திறன்கள் மற்றும் அறிவு. டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் திறன், அறிவுடன் கூடிய அதிகாரத்தை நம் மக்களுக்கு தர வேண்டும். மேலும், சமீபத்தில் டிஜிட்டல் அதிகாரம் பெற்ற மக்கள் சக்திவாய்ந்த இந்த ஊடகத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, இந்த ஊடகத்தின் அதிகபட்ச பயன்பாட்டை எவ்வாறு பெறுவது என்பது குறித்து சக குடிமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக தன்னார்வலர்களாக நேரத்தையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

மூன்றாவது சவால், அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவையும், ஆட்சி செயல்முறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்வது. ஆட்சிமுறையில் டிஜிட்டலை நுழைப்பதன் மூலம் செய்திறனும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு வருவது மட்டுமல்ல, அதன் மூலம் உடனடியாக ஊழலையும் குறைக்க முடியும்.

நான்காவது சவால், நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதும், அதை விரைவுபடுத்துவதும். தினந்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன, அதே நேரத்தில் பழைய தொழில்நுட்பம் வழக்கற்று போய்க் கொண்டிருக்கிறது. இது வேகமாக மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப சூழல். எனவே, டிஜிட்டல் இந்தியா இலக்குகளை நாம் கட்டாயம் உணர வேண்டும்.

கேள்வி-11: @sbikh (சஞ்சீவ் பிக்சாந்தனி) கேட்கிறார் – தொழிலை தொடங்கியிருக்கும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு உங்களது செய்தி என்ன?

தொடங்கிடுதல் என்பது அதிவேக வளர்ச்சியின் இயந்திரங்களாகவும், கண்டுபிடிப்பு சக்தியின் வெளிப்படாகவும் உள்ளன. இன்றைய பல பெரிய நிறுவனங்கள் நேற்றைய தொடக்கங்கள் தான். அவர்கள் கடின உழைப்பு, விடாமுயற்சியால் தொழில்துறையின் ஆன்மாவாகவும், சாகசத்துடனும் உதயமாகி, கண்டுபிடிப்பு சுழல்விளக்காக மின்னுகின்றனர்.

புதுமையை புகுத்துங்கள் – இதுவே என்னுடைய செய்தி. புதுமையான கண்டுபிடிப்புகள், நாம் மிக வேகமாக வளர்ச்சி அடைய உதவி செய்யும். இந்த உலகம் முன்பை விட மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் அதை அலட்சியப்படுத்தி இருக்கக் கூடாது. நாம் புதுமைகளை கண்டுபிடிக்காவிட்டால், சிறப்பான பொருட்களை நாம் கொண்டு வராவிட்டால் தேக்க நிலை ஏற்பட்டு விடும்.

இந்த அரசு முழு ஆதரவு அளிக்கும் என்பதை நான் உறுதிபடுத்திக் கொள்கிறேன். தொழில்துறையும், புதுமை கண்டுபிடிப்புகளை எளிமையாக்க தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம். இதற்காக கடந்த 14 மாதங்களாக அடிப்படை கட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நாங்கள், எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக செய்து தரவே விரும்புகிறோம். தொழில்நுட்ப சக்தியின் உந்துதலால், அடுத்த பெரிய சிந்தனையின் வெளிப்பாடாக, கண்டுபிடிப்பு தளமாக இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.