Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார்


இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு ரிஷி சுனக், திரு மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது பதவிக்காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரதமர் திரு சுனக்கின் அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, பல்வேறு துறைகளில் இந்தியா-இங்கிலாந்து இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவதற்கான தது உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து பிரதமர் தது நல்வாழ்த்துகளைத்  தெரிவித்தார்.

***

(Release ID: 2022969)

PKV/AG/RR