Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரிய குடியரசின் ஃபெடரல் அதிபர் மேன்மை பொருந்திய (டாக்டர்) அலெக்சாண்டர் வான் டெர் தொலைபேசி உரையாடல்


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரிய குடியரசின் ஃபெடரல் அதிபர் மேன்மை பொருந்திய டாக்டர் அலெக்ஸாண்டர் வான் டெர் உடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

அம்பான் புயலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆஸ்திரிய அதிபர் வருத்தம் தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளை எவ்வாறு தத்தமது நாடுகள் எதிர்கொள்கின்றன என்பது பற்றி இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கோவிட் நோய்க்குப் பிந்தைய உலகில், இந்திய -ஆஸ்திரிய உறவுகளை வலுப்படுத்துவது, பன்முகப்படுத்துவது ஆகியவற்றுக்கான தங்கள் விருப்பத்தை இரு தலைவர்களும் மீண்டும் பகிர்ந்து கொண்டனர். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஆய்வு, புதுமை, சிறு மற்றும் நடுத்தரth தொழில் பிரிவுகள் ஆகியவற்றில் மேலும் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மொத்த சுற்றுச்சூழலின் நலன் போன்ற நீண்டகால விஷயங்களுக்கு கவனம் செலுத்தக் கூடிய வகையில், தற்போதைய சுகாதார நெருக்கடியிலிருந்து உலகம் விரைந்து மீளும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

VRRK/KP