கேள்வி-1, ஐயா, நீங்கள் பிரதமராகப் பதவி ஏற்று ஓராண்டாகிவிட்டது. உங்கள் அனுபவத்தை சுருக்கமாக சொல்லமுடியுமா?
பதில்- நான் பதவி ஏற்ற போது நாட்டின் ஆட்சிப் பணியாளர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) சேவை முற்றிலும் சீர்பட்டு ஒழுங்கீனமாகவும் முடிவெடுக்க பயப்படுபவர்களாகவும் இருந்தனர். அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியின் செயல்பாட்டினாலும், அமைச்சரவைக்கு உள்ளே இருந்த ‘கோஷ்டிகளாலும் அமைச்சரவை முறையும் பாழ்பட்டிருந்தது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான உறவில் இடைவெளி இருந்தது. அதிக அளவில் நம்பிக்கையின்மை இருந்தது. வெளிநாட்டினரும், இந்தியர்களும் அரசு மீது அவநம்பிக்கையுடன் இருந்தனர். இந்தச் சூழலை மாற்றுவது பெரும் சவாலாக இருந்தது. நம்பிக்கையை உருவாக்கி அரசு எந்திரத்தைச் சீர்படுத்துவதற்கு நான் பல கஷ்டங்களை எதிர்கொண்டேன்.
கேள்வி 2,. நீங்கள் பிரதமராக பதவி ஏற்றதும் தில்லி உங்களுக்குப் புதிது என்பதால் தில்லியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் என்றீர்கள். இப்போது புரிந்துகொண்டுவிட்டீர்களா?
பதில்- நான் தில்லி என்று சொன்னது மத்திய அரசை பற்றியது. தில்லி தலைமை அதற்குரிய நிலையில் இருக்க வேண்டும் என்ற அனுபவத்தை எனக்கு கொடுத்தது. எங்களது குழு (பா.ஜ.க அரசு) அரசு எந்திரத்தை சாதகமாகவும் தொழில்நிபுணத்துவத்தையும் கொண்டுவரவும், வேலைகளைச் செய்தது. நான் பிரதமராகப் பதவி ஏற்றபோது ஆட்சி அதிகாரத்தின் வாராந்தாவில் குப்பைகளும்,
துதிபாடிகளும் அதிகம். இதனைச் சுத்தப்படுத்தத்துவது முக்கியம் என்பதால் அதைச் செய்தோம். அரசு நிர்வாகம் மேம்பாடு அடைந்தது. சுத்தமான அரசு நிர்வாகத்தை அது நீண்டகாலம் பயன்தரும் வகையில் மாற்ற சிறிது அவகாசம் எடுத்தது.
கேள்வி 3. நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
பதில் –நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி (காங்கிரஸ்) மத்தியில் எதிர்க்கட்சியானதும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதை வேண்டுமானால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்லலாம்
கேள்வி -4, ஓராண்டு ஆட்சி செய்துவிட்ட பின் நீங்கள் செய்த ஒரு பணியை இப்படி செய்ததற்குப் பதிலாக மாற்றி இப்படி செய்திருக்கலாமே என்று எண்ணியதுண்டா-?
பதில் – என்னிடம் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று என்னவென்றால் அரசு எந்திரத்தைச் செம்மைபடுத்தி தீமைகளையும் குறைகளையும் களைந்து சுத்தமான, நியாயமான சிறந்த செயல்படும் அரசை உருவாக்குவதாகும். அடுத்த வாய்ப்பு மக்கள் எங்களுக்கு அளித்த தீர்ப்பைப் பயன்படுத்தி மக்களைச் சமரசப்படுத்தும் கவர்ச்சி திட்டங்களை தினமும் அறிவித்து ஊடகங்களுக்கு செய்திகளை தந்து மக்களை முட்டாளாக்குவது. இதில் இரண்டாவது சொன்ன முறையில் ஆட்சி நடத்துவது சுலபம், ஆனால் மக்கள் ஏமாறுவார்கள். அதனால் அந்தப் பாதையை நான் தேர்ந்தடுக்கவில்லை. கடினமான பாதையான அரசு எந்திரத்தை சீர்ப்படுத்தி நீண்டகாலம் பயன்தரும் திட்டத்தினைத் தேர்ந்தெடுத்தேன். நான் மக்களைக் கவரும் கவர்ச்சி திட்டத்தினை கையில் எடுத்திருந்தால் அது மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணடிப்பதாகும்.
கேள்வி -5-– முதல் ஆண்டில் ஸ்வாச் பாரத், பள்ளிகளுக்குக் கழிப்பறை, ஜன்தன், ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் என்று பல திட்டங்களை அறிவித்தீர்கள். எதிர்காலத்திற்கு என்ன திட்டத்தினை வைத்திருக்கிறீர்கள்?
பதில்– ஸ்வாச் பாரத்தும் (தூய்மை இந்தியா திட்டம்), பள்ளிகளில் கழிப்பறை கட்டும் திட்டமும் சுத்தத்தினை மேம்படுத்துவதற்கானது அல்ல. என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். கழிப்பறை என்பது பெண்களின் குறைந்தபட்ச தேவை அவர்களின் கண்ணியத்திற்கு அது தேவை. துரதிருஷ்டவசமாக நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இத்தனை நாள்களாகியும் அந்த தேவையை நாம் நிறைவேற்ற வில்லை.
அடுத்ததாக எங்களது எதிர்கால நோக்கம், பெண்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள், மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்ததாக இருக்கும். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தேவையானவர்களுக்கு உதவி செய்து மேம்படுத்துவோம். சுத்தமான இந்தியாவை உருவாக்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கையோடு, நதிகளை சுத்தப்படுத்துதல், குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கவும் கவனம் செலுத்துகிறோம். வீடுகள் இல்லாத 50 மில்லியன் பேருக்கு வீடு கட்டி கொடுக்க உள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளையும் குறிப்பாக வடகிழக்கு பகுதிகளிலும் வளர்ச்சியைக் கொண்டுவர விரும்புகிறோம்.
நமது நிறுவனங்கள், ஊழியர்கள், தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நமது வழக்கமான நடைமுறைகள் ஆராய்ச்சி, தொழில் தொடங்குதல், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாக அமையவில்லை. இதனை போக்கும் வகையில் அடல் பிகாரி வாஜ்பாய் புத்தாக்க திட்டத்தினை கொண்டுவந்தோம். சுயதொழில் மற்றும் திறன்பயன்பாட்டையும் கொண்டுவந்தோம். பொதுவான தேவைகளாக இவை இருந்தன. இந்த திருத்தங்களை எல்லாம் நமது நிர்வாக மற்றும் கொள்கை கலாசார முறையில் கொண்டுவந்தோம்.
கேள்வி.-6- நீங்கள் பொருளாதார சீர்திருத்தத்தை விரைவாக கொண்டுவர விரும்புகிறீர்கள். ஆனால் நிலம் கையகப்படுத்துதல், ஜிஎஸ்டி மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறதே. இந்த எதிர்ப்பு கொள்கைவாதிகளுக்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?
பதில் – ஜிஎஸ்டியும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவும் நாட்டிற்கு நன்மை அளிக்கும் மசோதாக்களாகும். இந்த மசோதாக்களின் பிரதான நோக்கத்தினை அனைத்துக் கட்சிகளுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொண்டுள்ளன. நீண்டகால தேச நலனே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜிஎஸ்டி மசோதாவை ஏற்பதாக மாநில அரசுகள் கூறியிருப்பது நமது கூட்டாட்சி தத்துவத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்டது. இனி இவை சட்டமாவதற்கு சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்ளும்.
கேள்வி-7- பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக இல்லை என்றால் அது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எந்த செய்தியைக் கொண்டு செல்லும். குறிப்பாக நீங்கள் அதிகபட்ச வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது இது எப்படி இருக்கும்?
பதில்– சீர்திருத்தம் என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களையும் சார்ந்ததுதான். மிகமுக்கியமான சீர்திருத்தங்களை எல்லாம் சட்டத்திருத்தங்களை செய்யாமல் கொண்டுவர முடியாது.. அனைத்து மட்டத்திலும் நடைமுறைகளிலும், இத்தகைய திருத்தங்கள் அவசியம். அந்த வகையில் நாங்கள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதாவது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து டீசல் விலையை நிர்ணயிக்கும் முடிவைக் கைவிட்டுள்ளோம். சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு கொடுத்தோம். அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை உயர்த்தினோம். ரயில்வே உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்தோம். உண்மை என்னவென்றால் நாட்டில் சீர்திருத்தம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2014 முதல் பிப்ரவரி 2015 வரையிலான கால கட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்.
கேள்வி-8- எதிர்காலத்தில் என்ன வகையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரப்போகீறீர்கள்?
பதில் – நாங்கள் ஏற்கெனவே எடுத்த நடவடிக்கைக்கு நாடுமுழுவதும் மக்கள் மத்தியில் சாதகமான நிலை உள்ளது. முதல் ஆண்டில் எங்கள் செயல்பாடு எதிர்பார்ப்புக்கும் மேலானதாக உள்ளது. எங்களது நோக்கம் பி2ஜி2தான். அதாவது சாதகமான செயல்பாடு, மக்களுக்கு சாதகமான நிலை, நல்ல நிர்வாகம், சீர்திருத்தம் ஆகியவைதான். அடுத்த திட்டம் என்னவென்றால் மத்திய அரசும், மாநில அரசும் ஓரணியாக செயல்படு சீர்திருத்தங்களை இன்னும் வேகமாக சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கேள்வி-9-– அன்னிய நேரடி முதலீட்டுக்காக நீங்கள் ஏற்கெனவே பல துறைகளை திறந்துவிட்டுள்ளீர்கள்.. இன்னும் எத்தனை துறைகளில் இதை விரிவுபடுத்தப்போகிறீர்கள்.
பதில்– ஏற்கெனவே நாங்கள் எடுத்த நடவடிக்கையால் இந்தியா முதலீட்டு இலக்கு என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். நம்பிக்கையும் மேம்பட்டுள்ளது. எங்கெல்லாம் வேலைவாய்ப்பு அதிகரிக்குமோ உள்ளூர் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்குமோ, உதாரணமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நாங்கள் ஏற்கெனவே தேசிய கட்டமைப்பு முதலீட்டு நிதியத்தினை உருவாக்கியுள்ளோம். இது அனைத்து கட்டமைப்பு துறைகளிலும், ஒவ்வொரு துறை ரீதியிலான அணுகுமறை இன்றி அன்னிய முதலீட்டை அதிகரிக்க உதவுகிறது.
கேள்வி-10, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் நிதி அமைச்சகத்துடன் ரிசர்வ் வங்கி ஒரே முகத்துடன் பயணிக்கிறதா? நிதி அமைச்சகத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் முரண்பாட்டுடன் இருப்பதாக தெரிகிறதே?
பதில் நம்பிக்கைக்கு உரிய செய்தி நிறுவனமான பிடிஐ இப்படிப்பட்ட ஒரு ஆதாரமற்ற முரண்பட்ட கருத்துக்களுடன் கேள்வி கேட்பது எனக்கு அதிர்ச்சியை தருகிறது. ரிசர்வ் வங்கி என்பது தன்னாட்சி அமைப்பு. அதில் அரசும், நிதி அமைச்சகமும் அதற்கான மரியாதைக்கு உரியது.
கேள்வி-11. இந்த நிதியாண்டில் என்ன வளர்ச்சி இலக்கை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்– கடந்த ஆண்டின் அனுபவம் மற்றும் 125 கோடி இந்தியர்களின் ஊக்குவிப்பு மற்றும் ஆதரவால் நான் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளேன். தற்போதைய பொருளாதார அறிகுறிகள் எல்லாம் எதிர்பார்க்கும் இலக்கை மிஞ்சிவிடும் என்றே தோன்றுகிறது. அரசின் முயற்சி மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணை இலக்காக வைத்து குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அது குறைவாக இருந்துவிடவும் நான் தயாராக இல்லை.
கேள்வி 12- நிலம் கையகப்படுத்தும் மசோதா பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நீங்கள் அதை மறுக்கவில்லை, ஆனால், இந்த சட்டம் ஏழைகளின் நலனுக்கானது என்று கூறியுள்ளீர்கள். இன்னமும் எதிர்க்கட்சிகள் அப்படியே சொல்லிவரும்போது அதை நீங்கள் நியாயம் என்று கருதுகிறீர்களா.?
பதில்– அரசியல் புழுதிவாரிதூற்றும் நடவடிக்கையில் ஈடுபட நான் விரும்பவில்லை. சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்களை தங்களுக்கு வேண்டிய பெரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த கட்சியினர் (காங்கிரஸ்) மக்களுக்காக உறுதியான நோக்கத்துடன் செயல்படும் எங்களைப் பார்த்து அத்தகைய குற்றச்சாட்டைச் சொல்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா? 60 ஆண்டு ஆட்சியில் இருந்த கட்சி இப்படி சொல்வது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அவர்கள் இப்படி கேட்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசு நிர்வாகம் பற்றி சரியாக தெரியவில்லை என்றே அர்த்தம். இந்த நாட்டின் மொத்த நிலமும் மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல, மத்திய அரசுக்கு அது தேவையும் இல்லை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். நில உரிமை என்பது மொத்தமாக மாநில அரசின் உரிமையில் உள்ளது. 120 ஆண்டு பழமையான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 120 நிமிட விவாதம் நடத்தி நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு. அந்த மசோதா விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். இதனால் அந்த நேரத்தில் நாங்களும் அதை ஆதரித்தோம். ஆனால், இப்போது அந்த சட்டம் தொடர்பாக ஏராளமான புகார்கள் மாநிலங்களில் இருந்து வருகின்றன. அதனால் மாநிலங்களின் விருப்பத்தை நாங்கள் அவமதிக்கவில்லை. எனவே சட்டத்தில் திருத்தம் என்பதை வேண்டுமென்றே ஒருதரப்பு எதிர்க்கக்கூடாது. எனவே மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் தவறுகளைத் திருத்த நாங்கள் முயற்சித்தோம். இந்த திருத்த மசோதாவை அரசியல் என்ற கண்ணோட்டத்தினோடு பார்க்காத எவரும் மசோதாவை ஆதரிப்பார்கள்.
கேள்வி 13. நில மசோதாவில் முட்டுக்கட்டை நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வுகாண எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நீங்கள் ஏற்கத்தயாராகஇருக்கிறீர்களா?
பதில்.. எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகள் நாட்டில் கீழ் நிலையில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு பயன் அளிக்கும் என்றால் அதை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கேள்வி-14 இந்த ஆண்டு உங்கள் அரசும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் செயலிலும் சிலர் ஈடுபடுகிறார்களே இதுபற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் – எந்த தனிநபர்களுக்கும், தனிப்பட்ட நிறுவனங்கள் மீதும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. அத்தகைய தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை ஏற்கெனவே நான் சொல்லயிருக்கிறேன் .மீண்டும் இப்போது சொல்கிறேன். அதாவது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல் என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். இதில் என் நிலைப்பாடு மிகத்தெளிவானது. 125 கோடி இந்தியர்களுக்கும் பொதுவாகத்தான் நாங்கள் இருப்போம். யார் மீதும் பாரபட்சம் காட்டுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி சார்ந்து நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி-15- நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்வதாகவும் நாட்டில் இருப்பதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனரே-?
பதில்– இன்றைய உலகத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டைச் சார்ந்திருக்கிற நிலை உள்ளது. எனவே, தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா என்பது நமது நோக்கம் அல்ல. நமது அண்டை நாடான நேபாளத்திற்கு 17ஆண்டுகளாக இந்தியப்பிரதமர் போகாமல் இருப்பது நல்ல அறிகுறி அல்ல. நாம் மாறுபட்ட காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்று தீவிரவாதம் சர்வதேசப் பிரச்னையாகிவிட்டது. தீவிரவாதம் தொலைதூர நாடுகளில் இருந்துகூட வருகின்றன. சர்வதேச அமைப்புகள் உலக வர்த்தக அமைப்புகள் இதுதொடர்பாக முடிவுகளை எடுக்கின்றன. அந்த முடிவுகள் நம்மையும் கட்டுப்படுத்தும். அந்த சூழ்நிலையில் நாம் அந்த அமைப்புகளின் மாநாட்டின் பங்கேற்காமல் போய்விட்டால் அது நமக்கு பாதகமாகிவிடும்.
அடுத்ததாக ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் அரசை விமர்சிக்கின்ற உரிமை இருக்கிறது. பொதுவாக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஊடகங்களில் அதிக இடம் கொடுக்கப்படும். மக்களும் அதை விரும்பி பார்ப்பார்கள். நான் ஆட்சிப்பொறுப்பேற்றதும் என்னை எதிர்க்கட்சி நண்பர்கள் என் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆதாரமற்ற முறையில் விமர்சித்தார்கள். இந்த வெளிநாட்டுப் பயணங்களில் பயன் இல்லாமல் போனாலோ, அல்லது அதில் தவறுகள் இருந்தாலோ குறிப்பிட்டு சொல்லி அதைப் பற்றி பேசலாம். எந்த குறிப்பிட்ட பிரச்னைகளும் இல்லாமல் எப்படி கேள்வி எழுப்பலாம். எதிர்க்கட்சிகள் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போது, நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மக்கள் அரசுக்கு ஆதரவாக கருத்து சொல்லி இருக்கிறார்கள். இது நிச்சயம் எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
கேள்வி 16- பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக பிஜேபி அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் தீபக் பரேக் போன்ற தொழில் அதிபர்கள் தொழிற்சாலைகளுக்காக எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதில் உங்கள் கருத்து என்ன?
பதில்– உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் நாங்கள் பெரும்நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்படுவதாக கூறுகின்றன . ஆனால், பெரும் நிறுவனங்கள் எங்களுக்கு எதையும் மத்திய அரசு செய்யவில்லை என்று கூறுகின்றன. நாங்கள் எடுக்கும் முடிவுகளும் செயல்பாடுகளும் தேசத்தின் எதிர்கால நலனையும், மக்கள்நலனையும் கருத்தில் கொண்டவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கேள்வி.17- விவசாயிகள் பிரச்னை குறித்து ராகுல் காந்தி உங்கள் அரசை விமர்சித்திருந்தார். சூட்-பூட்-சர்க்கார் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்– நாடாளுமன்ற தேர்தலில் காஙகிரஸ் படுதோல்லி அடைந்து 50க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஓராண்டுஆகியும் அதை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அவர்கள் செய்த பாவங்களுக்கு மக்கள் அவர்களைத் தண்டித்துள்ளனர். அவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அப்படியில்லை.
கேள்வி 18. அண்மையில் வெளியான மத்திய கணக்குத்தணிக்கை குழுவான சிஏஜி அறிக்கையில் நாட்டின் ராணுவத் தளவாட கையிருப்பு, போர் ஏற்பட்டால் வெறும் 10 முதல் 20 நாள்களுக்கு தேவையான அளவுக்குத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தது. அது 2013ம் ஆண்டு தகவலை அடிப்படையாக கொண்டது. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
பதில்– தேச பாதுகாப்பு என்பது அதிமுக்கிய பிரச்னை. இதுபற்றி ஒரு பொதுவிவாதமாகப் பேசுவது சரியல்ல. ஆனாலும், ஒன்றை நான் நாட்டுமக்களுக்கு உறுதியாக சொல்லுவேன். நாடு நமது முப்படை வீரர்கள் கையில் பாதுகாப்பாக உள்ளது.
கேள்வி-19- நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியில் கறுப்புப் பணத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். அப்படி ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
பதில்– நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் முடிவாக கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டுவருவதற்காக சிறப்புக் குழுவை அமைத்தோம். இந்த முடிவைக் கூட முந்தைய அரசு எடுக்காமல் நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான முடிவை எடுத்தோம். அதைத் தொடர்ந்து கறுப்புப் பண மீட்பு மசோதாவை கொண்டுவந்தோம். அதுபோல கறுப்பு பண மீட்புக்காக 2014ம் ஆண்டு நவம்பரில் ஜி-20 மாநாட்டில் வரிஏய்ப்பு தொடர்பான தகவல் பறிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தைக் கொண்டுவர நாங்கள் முயற்சி எடுத்தோம். அது நிறைவேறியது. அதற்கான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவை எல்லாம் கறுப்புப்பணத்தை மீட்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிக்கையாகும். இவை நாங்கள் எடுத்த கடுமையான நடவடிக்கையாகும்
கேள்வி-20- அரசு செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவர நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்.
பதில் முதலில் மத்திய அரசு ஊழியர்களை மக்களின் ஊழியர்கள் என்று நாங்கள் நினைவுபடுத்தியுள்ளோம்.. அவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். அரசு நிர்வாகத்தினை துரிதப்படுத்த சிலநடவடிக்கைகளை எடுத்துள்ளேன். நான் தேநீர் அருந்தும்போது அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வேன். அது என் வேலைபாணி. தத்துவரீதியாக அரசு நிர்வாகம் என்பது குழுவாகச் சேர்ந்து பணியாற்றுவதாகும். பிரதமரும் மாநில முதலமைச்சர்களும் ஓரணியாகும். மத்திய அமைச்சர்களும் மாநில அமைச்சர்களும் மற்றொரு அணியாகும். ஐஏஎஸ் அதிகாரிகளும், மத்திய மாநில அரசு அதிகாரிகளும் அடுத்த அணியாகும். இந்த அணிகள் இணைந்து செயல்படுவதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கான வெற்றிகரமான அரசு நிர்வாகத்திற்கான அடிப்படை. இந்த அடிப்படையில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்தவகையில் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு நிதி ஆயோக் கொண்டுவந்துள்ளோம். இதில் மாநில அரசுகள் முழு பங்குதாரர்களாக உள்ளன. அதன் பரிந்துரைபடியே முடிவுகளை எடுக்கிறோம்.
கேள்வி 21 . எல்லா அதிகாரமும் பிரதமர் அலுவலகத்தில் குவிந்துகிடப்பதாக சொல்லப்படுகிறதே. அதில் உங்கள் கருத்து என்ன-‘?
‘பதில்– நீங்கள் இந்த கேள்வியை முன்வைத்துவிட்டீர்கள். ஆனால் அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்படாத ஒரு சக்தி பிரதமர் அலுவலகத்தில் இருந்திருந்தால் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்பதில் நியாயம் உண்டு. ஆனால், பிரதமரும், பிரதமர் அலுவலகமும் அரசியல் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாயிற்றே. அது வெளி அமைப்பு அல்லவே. பல்வேறு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அதிகரித்து அதுதொடர்பான முடிவுகளை பிரதமர் அலுவலகம் உடனுக்கு உடன் எடுக்கிறது. முன்பு இதற்கெல்லாம் பிரதமர் அலுவலகத்தை நாடியிருக்கவேண்டியதிருந்தது. ஆனால் இப்போது அமைச்சர்களுக்கே அதிகாரம், அளிக்கப்பட்டுள்ளது. நிதி அதிகார அமைப்புகளுக்கும் கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும் அதேபோன்ற உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு நிர்வாகத்தில் பங்கெடுக்கும் வகையில் இப்போது நிதிஆயோக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரகுவியல் ஏதும் இல்லை. அரசு நிர்வாக விதிப்படி என்ன பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளனவோ அதன்படிதான் ஆட்சி அதிகாரம் நடக்கிறது.
‘கேள்வி 22 முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடைசி காலகட்டத்தில் அரசு நிர்வாகம் முடங்கிக் கிடந்தது. நீங்கள் ஆட்சிக்கு வந்து ஒராண்டு ஆகிவிட்டது என்ன செய்திருக்கிறீர்கள்.
பதில் -21ம் நூற்றாண்டு இந்தியாவினுடையது. அதில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டம் மோசமான கருத்துகளுடனும், மோசமான செயல்பாடுகளுடனும் முடிந்துவிட்டது. அதனால் நாடு மிகவும் பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மோசம், தினம் ஒரு ஊழல் செய்தி என்ற நிலையால் மக்கள் கொதிப்படைந்திருந்தனர். இன்று ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் நமது எதிர்க்கட்சிகள் கூட அரசின் செயலில் தவறு இருப்பதாக குறை கூற முடியவில்லை. இந்த மக்கள் ஆட்சியில் ஏதாவது ஒரு முறைகேட்டை நீங்கள் சொல்ல முடியுமா.?
கேள்வி 23- நாடு தற்போது விவசாயிகள் பிரச்னை பற்றி பேசுகிறது. குறிப்பாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. அது அரசியல் சவாலாகவும் உள்ளது. அதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்னும் என்ன செய்யப்போகிறீர்கள்.
பதில்– விவசாயிகள் தற்கொலை என்பது நீண்டகாலமாக நடந்துவரும் துயரம் தரும் நிகழ்வாகும். அரசியலுக்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்து யாருடைய ஆட்சியில் அதிக தற்கொலை நடந்துள்ளது என்று பேசுவது பிரச்னைக்கு பலன்தராது. ஒரு தற்கொலையாக இருந்தாலும் அது எல்லோருக்கும் கவலை தரக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த பிரச்னைக்காக ஆளும் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது தேவையில்லாதது என்று நாடாளுமன்றத்தில் நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதைக் கண்டுபிடிக்குமாறு நான் கூறினேன். நாடாளுமன்றத்தின் புனிதத்தை காக்க வேண்டும். என்பதால் அனைவரும் ஒன்றுபட்டு பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது. ஏன் இத்தனை ஆண்டுகளாக தீர்வு காண முடியவில்லை என்று நாம் சிந்திக்க வேண்டும். நமது விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான யோசனைகளை சொல்லுமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி 24. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குப் படுதோல்வி ஏற்பட்டுள்ள நிலையில் அரசுமீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் உங்களது அரசை தனிநபர் ஆட்சி என்று விமர்சிக்கிறார்களே? உங்கள் பதில் என்ன-
பதில்– அவர்கள் சொல்வது உண்மைதான். ஏனென்றால் முந்தைய ஆட்சியில் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையம் இருந்தது. அது இப்போது இல்லை. அரசியல் சட்டத்தினால் கொடுக்கப்பட்ட அதிகார மையம்தான் இருக்கிறது. அந்த அரசியல் சாசனப்படி நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் ,கூடுதல் அதிகார மையத்தினைப் பற்றி தெரிந்தவர்கள் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.
கேள்வி-25 – தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக உங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக குற்ச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவும் இதுபற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளது- இந்தக் குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்.
பதில்– தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு நன்கொடை சட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அதாவது 2010ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆகவே, முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை நடைமுறைப்படுத்தியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தேசபக்தி உள்ள எவரும் இதை ஆட்சேபிக்க மாட்டார்கள்.
கேள்வி-26- நீங்கள் கூட்டுறவு கூட்டாட்சி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கும் மாநில முதல்வர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது. உங்களது கருத்தைச் செயல்படுத்த அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
பதில் – ஏற்கெனவே பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசு உறவுகள் என்பது பரஸ்பரம் நம்பிக்கை இல்லாததாக இருந்தது. ஒரு தடவை கடித்தால் முறை வெட்கப்படவேண்டும் என்பார்கள். பரஸ்பர சந்தேகம் சட்டப்வூர்வபோராட்டங்களுடன் முன்பு இருந்தது. ஆனால் இப்போது பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளோம். மத்திய மாநில உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைக்கு ‘நிதி ஆயோக்’ கிரியா ஊக்கியாக இருக்கிறது. அது நாட்டை முன்னெடுத்து செல்லும். இந்த பரஸ்பர பங்களிப்பு உணர்வு படிப்படியாக முன்னேறி வரும் ஆண்டுகளில் நல்ல பலனை கொடுக்கும் என்று நம்புவோம்.