Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி — மேன்மை பொருந்திய எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி தொலைபேசி உரையாடல்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடியபோது, எகிப்து அதிபர் மேன்மை பொருந்திய அப்தெல் ஃபட்டா அல் சிசி அவர்களுக்கும், எகிப்து மக்களுக்கும், ஈத் (Eid-ul-Fitr) திருநாளையொட்டி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த எகிப்து அதிபர், எகிப்தும் இந்தியாவும் உலகின் மிகப் பழமையான நாகரீகங்களை உடைய நாடுகளில் ஒன்றாக இருந்தன என்றும், விரைவாக விரிவடைந்து வரும் இரு தரப்பு உறவுகள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.. கோவிட் 19 நெருக்கடி காலத்தின் போது எகிப்தில் உள்ள இந்தியக்குடிமக்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும், எகிப்து அதிகாரிகள் அளித்த ஆதரவிற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த ஆண்டு திட்டமிட்டபடி எகிப்துக்கான தமது பயணம் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட நேரிட்டது குறித்து குறிப்பிட்ட பிரதமர், சூழல்கள் அனுமதிக்கும்போது எகிப்து அதிபரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

VRRK/KP