Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசிமூலம் ஜோர்டான் மன்னருடன் கலந்துரையாடல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று ஜோர்டான் மன்னர் மேன்மைமிகு இரண்டாம் அப்துல்லாவுடன் கலந்துரையாடினார்.
வரக்கூடிய புனித ரமலான் மாதத்தை ஒட்டி ஜோர்டான் மன்னர் மற்றும் மக்களுக்கு பிரதமர் திரு. மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த்தாக்குதலால் ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றியும், இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். தங்கள் நாடுகளில் கடைபிடிக்கப்படும் சிறந்த செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, தேவையான பொருள்கள் கிடைக்கச் செய்வதில் உதவியாக இருப்பது ஆகியவற்றின் மூலம், முடிந்த வரையில் அதிகபட்ச அளவுக்கு இரு தரப்பிலும் ஒத்துழைப்பு முயற்சிகள் மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஜோர்டானில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்காக மன்னருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கோவிட்-19 தொடர்பான விஷயங்கள் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் தொடர்பாகவும் இரு தரப்பின் பிரதிநிதிகளும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

***

VRRK/KP

(Release ID: 1615122)