Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது முதலாவது போட்காஸ்டில், தொழில்முனைவோர் நிகில் காமத்துடன் தமது வாழ்க்கைப் பாடங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்துள்ளார்”

“பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது முதலாவது போட்காஸ்டில், தொழில்முனைவோர் நிகில் காமத்துடன் தமது வாழ்க்கைப் பாடங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்துள்ளார்”


தொழில்முனைவோர் நிகில் காமத் உடனான தனது முதலாவது போட்காஸ்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த ஆரம்ப அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போட்காஸ்ட், பிரதமரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தமது ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் எவ்வாறு தம்மிடம் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதையும், இந்த அனுபவங்கள் “தேசம் முதலில்”  என்ற சித்தாந்தத்திற்கும் அவரது அர்ப்பணிப்புக்கும் எவ்வாறு அடித்தளம் அமைத்தன என்பதையும் அவர் விவரித்தார்.
தன்னலமற்ற சேவைக்கான தனது அர்ப்பணிப்பு பற்றி பிரதமர் மோடி பேசினார், அரசியலில் லட்சியவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர “தேசம் முதலில்” என்ற மனநிலையை ஆதரித்த அவர், இளைஞர்கள் தங்கள் தொழில்களை இலக்கு உணர்வுடன் அணுகுமாறு ஊக்கப்படுத்தினார்.
நவீன ஜனநாயகத்தில் சமூக ஊடகங்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், அவை அரசியல் சூழ்நிலையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளன என்பதையும், குடிமக்களுக்கான செயல்பாட்டில் அவற்றின் தாக்கத்தையும் பற்றிக் கூறினார். குறிப்பிடத்தக்க விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், களத்தில் இருப்பது, நெகிழ்திறன், பெரிய முயற்சியில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
கவலைகளையும்  வாழ்க்கை சவால்களையும் நிர்வகிப்பது குறித்து மதிப்புமிக்க கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, தடைகளை விடாமுயற்சியுடனும்,  நம்பிக்கையுடனும் சமாளிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார். ஒருவர் வேர்களுடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தையும்,  வழிகாட்டிகள் மற்றும் சகாக்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவை நினைவில் கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பிரதமர் மோடி ஆரம்பகாலத்தில் சந்தித்த இன்னல்கள் , பொது சேவைக்கான அவரது பயணம், கூட்டு முயற்சியின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது அசைக்க முடியாத நம்பிக்கை பற்றிய நிகழ்வுகளும் போட்காஸ்டில்  இடம்பெற்றுள்ளன.
கவனச்சிதறல்களும்  மன அழுத்தங்களும் நிறைந்த உலகில், இளைஞர்களுக்கு பிரதமரின் செய்தி தெளிவாக இருந்தது – உறுதியாக இருங்கள், பணியில் கவனம் செலுத்துங்கள், சவால்களை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாக மாற்றுவதற்கு தொடர்ந்து பணியாற்றுங்கள். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091935 

*******

VJ/SMB/KV