பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவரது போதனைகளும் வாழ்க்கை முறைகளும் வளமான தேசத்திற்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. தில்லியில் அண்மையில் தொடங்கப்பட்ட நமோ பாரத் ரயில் சேவையையும், தில்லி மெட்ரோ ரயில் திட்டங்களையும் குறிப்பிட்ட அவர், ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு பிராந்தியங்களுக்கான நவீன போக்குவரத்து இணைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். அனைவரும் ஒன்றிணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்பைடயில் வளர்ச்சியைடந்த இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க இவை உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். இத்தகைய முன்னேற்றங்களுக்காக மாநிலங்களின் மக்களுக்கும், இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடம் போன்ற நவீன ரயில் கட்டமைப்பு பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த சிறப்பு வழித்தடங்கள் வழக்கமான தடங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்திடும் என்றும், அதிவேக ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவிடும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் ரயில்வே துறை மேம்பாடு அடைந்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறினார். மெட்ரோவுக்கும் இதர ரயில் போக்குவரத்துக்கும் தேவையான நவீன ரயில்பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ரயில் நிலையங்களில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் நிறுவப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ என்ற அடிப்படையில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். இந்த முயற்சிகள் அனைத்தும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கடந்த பத்தாண்டுகளில், லட்சக்கணக்கான இளைஞர்கள் ரயில்வே துறையில் நிரந்தரப் பணிகளைப் பெற்றுள்ளனர். புதிய ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களுக்கான தேவை பிற துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
நாட்டின் முதலாவது விரைவுசக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ரயில்வே போக்குவரத்து கட்டமைப்பு விரிவடைவதால், ஜம்மு, காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், லே-லடாக் போன்ற பகுதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய பிரிவுகள், தலைமையகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில்பாதை மூலம் ரயில்வே உள்கட்டமைப்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலம் லே-லடாக் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. இந்த மேம்பாலம் பிற பகுதிகளுடன் இப்பகுதியை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
நாட்டின் முதலாவது கேபிள் அடிப்படையிலான ரயில்வே பாலமான அஞ்சி காட் பாலமும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். செனாப் பாலமும், அஞ்சி காட் பாலமும் இந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், வளத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும். பொறியியல் துறையின் இணையற்ற எடுத்துக்காட்டுகளாக அவை அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.
ஒடிசா மாநிலம் ஏராளமான இயற்கை வளங்களையும், பெரிய கடற்கரையையும் கொண்டுள்ளது என்றும், சர்வதேச வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 70,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல ரயில்வே திட்டங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழு விரைவு சக்தி சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களை நிறுவுவதுடன், அவை வர்த்தகம் தொழில்துறையை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார். ஒடிசாவில் ராயகடா ரயில்வே பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார், இது அம்மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் மேம்படுத்தும். ஒடிசா மாநிலத்தில் தென்பகுதியில் குறிப்பாக பழங்குடியின குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகள் மேம்படும்.
தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய ரியல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர், வெளிவட்டச் சாலையை இணைப்பதன் மூலம் மண்டல வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான அதன் திறனை எடுத்துரைத்தார். வெளிவட்ட சாலையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், இப்பகுதியில் வளர்ச்சியை கணிசமாக அதிகரிக்கும், என்று அவர் கூறினார். நிலையத்தின் நடைமேடைகள், மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகள், சூரிய சக்தி பயன்பாடு உள்ளிட்ட நவீன வசதிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். இது நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முன்னோக்கிய படியாகும் என்றார். இந்த புதிய முனையம் செகந்திராபாத், ஹைதராபாத், கச்சிகுடாவில் தற்போதுள்ள ரயில் நிலையங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும், மக்களுக்கு பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
இத்தகைய திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமின்றி, இந்தியாவின் விரிவான உள்கட்டமைப்பு இலக்குகளுடன் இணைந்து, எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். விரைவுச் சாலைகள், நீர்வழி போக்குவரத்துகள், மெட்ரோ கட்டமைப்புகள் உள்ளிட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு விரிவாக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில் 74-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 150-க்கும் மேலாக உயர்ந்துள்ளது என்றும், நாடு முழுவதும் 5 நகரங்களில் இருந்து 21 நகரங்களுக்கு மெட்ரோ சேவைகள் விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது தற்போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை தெரிவித்த பிரதமர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய ரயில்வே, தகவல், ஒளிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர், பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அமைச்சர் திரு வி.சோமன்னா, இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், ஒடிசா ஆளுநர் திரு திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, தெலங்கானா ஆளுநர் திரு ஹரிபாபு கம்பம்பதி ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, தெலங்கானா முதலமைச்சர் திரு ஏ ரேவந்த் ரெட்டி ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்துத் தொடர்பை மேலும் அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டப் பிரிவை பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
பதான்கோட் – ஜம்மு – உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா, போக்பூர் சிர்வால் – பதான்கோட், படாலா – பதான்கோட் மற்றும் பதான்கோட் முதல் ஜோகிந்தர் நகர் வரை 742.1 கிலோமீட்டர் நீளமுள்ள ஜம்மு ரயில்வே கோட்டத்தை உருவாக்குவது, ஜம்மு காஷ்மீர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கணிசமாக பயனளிக்கும். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன், இந்தியாவின் பிற பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்தும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்குதுடன், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாவை மேம்படுத்துதல், இப்பகுதியின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
தெலுங்கானாவின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி புதிய முனைய நிலையம் சுமார் 413 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய பயிற்சி முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான நல்ல வசதிகளைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முனையம், நகரில் தற்போதுள்ள செகந்திராபாத், ஹைதராபாத், கச்சிகுடா போன்ற பயிற்சி முனையங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே கோட்ட கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
—–
(Release ID 2090539)
TS/SV/KPG/KR
The launch of rail infrastructure projects in Jammu-Kashmir, Telangana and Odisha will promote tourism and add to socio-economic development in these regions. https://t.co/Ok7SslAg3g
— Narendra Modi (@narendramodi) January 6, 2025
आज देश विकसित भारत की संकल्प सिद्धि में जुटा है और इसके लिए भारतीय रेलवे का विकास बहुत महत्वपूर्ण है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 6, 2025
भारत में रेलवे के विकास को हम चार पैरामीटर्स पर आगे बढ़ा रहे हैं।
— PMO India (@PMOIndia) January 6, 2025
पहला- रेलवे के इंफ्रास्ट्रक्चर का modernization
दूसरा- रेलवे के यात्रियों को आधुनिक सुविधाएं
तीसरा- रेलवे की देश के कोने-कोने में कनेक्टिविटी
चौथा- रेलवे से रोजगार का निर्माण, उद्योगों को सपोर्ट: PM
आज भारत, रेल लाइनों के शत प्रतिशत electrification के करीब है।
— PMO India (@PMOIndia) January 6, 2025
हमने रेलवे की reach को भी लगातार expand किया है: PM @narendramodi
बीते 10 वर्षों में रेलवे इन्फ्रास्ट्रक्चर में आए बड़े बदलाव से जहां देश की छवि बदली है, वहीं देशवासियों का मनोबल भी बढ़ा है। अमृत भारत और नमो भारत जैसी सुविधाएं अब भारतीय रेल का नया बेंचमार्क बन रही हैं। pic.twitter.com/1qD5rMEBTN
— Narendra Modi (@narendramodi) January 6, 2025
आज जिस नए जम्मू रेलवे डिवीजन का लोकार्पण हुआ है, उसका लाभ जम्मू-कश्मीर के साथ-साथ हिमाचल प्रदेश और पंजाब के कई शहरों को भी होने वाला है। pic.twitter.com/IeP5LBgv4r
— Narendra Modi (@narendramodi) January 6, 2025
The recent years have been very beneficial for Odisha as far as rail infrastructure is concerned. Particularly gladdening is the positive impact on areas dominated by tribal communities. pic.twitter.com/ELoDlWQ8Wv
— Narendra Modi (@narendramodi) January 6, 2025
The new Charlapalli Railway Station in Telangana will boost 'Ease of Living' and improve connectivity, benefiting people especially in Hyderabad and surrounding areas. pic.twitter.com/G0kYJnFr9X
— Narendra Modi (@narendramodi) January 6, 2025