பிரதமர் திரு. நரேந்திர மோடியை, சீன மக்கள் குடியரசின் அரசு ஆலோசகரும், சீனாவின் எல்லை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியுமான திரு.யாங் ஜீச்சி இன்று சந்தித்துப் பேசினார்.
அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரின் வாழ்த்துகளை பிரதமரிடம் திரு.யாங் ஜீச்சி தெரிவித்துக் கொண்டார்.
எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் இடையே இன்று காலை நடைபெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமரிடம் திரு.யாங் ஜீச்சி-யும், திரு.அஜித் தோவலும் விளக்கினர்.
9-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜியாமென் நகருக்கு செப்டம்பர் 2017-ல் பயணம் மேற்கொண்டதையும், அங்கு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதையும் பிரதமர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். இந்தியா மற்றும் சீனாவின் பரஸ்பர நலனுக்கு மட்டுமன்றி, இந்தப் பிராந்தியம் மற்றும் உலகின் நலனுக்கு இந்தியா-சீனா இடையே வலுவான நல்லுறவு இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
***
Mr. Yang Jiechi, State Councillor of the People’s Republic of China, calls on PMhttps://t.co/T1P8jxfyrc
— PMO India (@PMOIndia) December 22, 2017
via NMApp pic.twitter.com/yobhMPGvNU