பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டார்.
ஷாங்காய் உச்சிமாநாட்டிற்கு இடையே சமர்க்கண்டில் இருவருக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய அம்சங்கள் உட்பட இருதரப்பு உறவின் பல அம்சங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் இன்றைய ஆலோசனையில் விவாதித்தனர்.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியில் தீர்வு காண பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜி 20 கூட்டமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ள நிலையில் அதில் இந்தியாவின் முன்னுரிமை செயல்திட்டங்கள் குறித்தும் திரு புதினிடம் பிரதமர் விளக்கினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதையும் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884133
**************
SM/PLM/RS/KRS