Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தான் மேற்கொள்ளவிருக்கும் கர்நாடகா பயணத்தின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்


பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடகாவில் பயணம் மேற்கொள்கிறார்

இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“நான் நாளை, மார்ச் 12ஆம் தேதி, கர்நாடகாவில் இருப்பேன். ரூ. 16,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளைத் துவக்கி வைக்கவும் அடிக்கல்நாட்டவும், மாண்டியா மற்றும் ஹுப்பள்ளி-தர்வாட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1905535

மாண்டியாவில், நாளை, மார்ச் 12, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். மைசூரு-குஷால் நகர் நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டங்கள் இணைப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஹுப்பள்ளி- தார்வாட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. ஐஐடி தார்வாட் மற்றும் ஸ்ரீ சித்தாரூட சுவாமிஜி ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும்.”

கர்நாடகாவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்  பிரதாப் சிம்ஹாவின் ட்வீட்டிற்குப் பதிலளித்த பிரதமர், ‘எங்களது அரசு  இணைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்கச் செயல்படுகிறது. மைசூரு மற்றும் பெங்களூரு இடையேயான விரைவுச் சாலை வளர்ச்சிக்கான பாதையில் ஒரு படியாகும்’, என்று கூறியுள்ளார்.

அவர் ட்வீட்டர் பதிவில்,

ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಸಂಪರ್ಕ ಮತ್ತು ಆರ್ಥಿಕ ಪ್ರಗತಿಗೆ ಉತ್ತೇಜನ ನೀಡುವತ್ತ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಿದೆ. ಮೈಸೂರು ಮತ್ತು ಬೆಂಗಳೂರು ನಡುವಿನ ಹೆದ್ದಾರಿ ಮಾರ್ಗ ದಿಕ್ಕಿನತ್ತ ಹೆಜ್ಜೆಯಾಗಿದೆ.”

மறுவடிவமைக்கப்பட்ட ஹோசப்பேட்டை ரயில் நிலையம் குறித்து தூர்தர்ஷன் செய்திப் பிரிவு வெளியிட்டுள்ள ட்வீட்டிற்குப் பதிலளித்துப் பிரதமர் பின்வருமாறு ட்வீட் செய்துள்ளார்:

ஹோசப்பேட்டை மக்களுக்கு வாழ்த்துகள். இணைப்பு மற்றும் வர்த்தகத்திற்கான ஊக்கம், அதிலும் கூடுதலாகக் கலாச்சார இணைப்புடன் வளர்கிறது.” 

தார்வாட் தொடர்பான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷியின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் ட்வீட்டரில்,

ஹுப்பள்ளி-தார்வாட் மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும்புதிய பணிகள் நாளை தொடங்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

***

SRI/CJL/DL