Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் டிசம்பர் 4-ம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார். மாலை 4.15 மணியளவில் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் செல்லும் பிரதமர், ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கிறார்.

அதன் பிறகு, சிந்துதுர்க்கில் கடற்படை தினம் 2023கொண்டாட்டங்களைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். சிந்துதுர்க், தார்கர்லி கடற்கரையில் இருந்து இந்திய கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகளின் செயல்பாட்டு செயல்விளக்கங்களைபிரதமர் பார்வையிடுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. சிந்துதுர்க்கில் கடற்படை தினம் 2023கொண்டாட்டங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றன.

முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை கடந்த ஆண்டு பிரதமர் தொடங்கி வைத்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட அதன் முத்திரை புதிய கடற்படைக் கொடிக்கு ஊக்கமளித்தது.

ஒவ்வொரு ஆண்டும், கடற்படை தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகளால் செயல்பாட்டு செயல்விளக்கங்கள்நடத்தப்படும் பாரம்பரியம் நடைமுறையில் உள்ளது.

இந்த செயல்பாட்டு செயல்விளக்கங்கள்இந்தியக் கடற்படையால் மேற்கொள்ளப்படும் பன்முக நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களைக் காண மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இது பொதுமக்களுக்கு தேசிய பாதுகாப்பில் கடற்படையின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதுடன், மக்களிடையே கடல்சார் விழிப்புணர்வையும் தூண்டுகிறது.

*******

ANU/AD/BS/DL