Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை என்றென்றும் மாற்றியமைத்த முன்முயற்சி என்று பிரதமர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்


பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றி அடைவதற்காகப் பணியாற்றிய அனைவரது தளர்வறியாத முயற்சிகளையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில்,

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை என்றென்றும் மாற்றியமைத்த முன்முயற்சியான பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் ஏழு ஆண்டுகளை இன்று நாம் குறிக்கிறோம். எண்ணிலடங்காத இந்தியர்களுக்கு நிதி உள்ளடக்கம், மற்றும் கண்ணியமான வாழ்க்கையுடன் அவர்களது மேம்பாட்டையும் இது உறுதி செய்துள்ளது. ஜன்தன் யோஜனா திட்டம், வெளிப்படைத்தன்மைக்கு மேலும் உதவிகரமாக இருந்துள்ளது.

பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றியடைவதற்காகப் பணியாற்றிய அனைவரது தளர்வறியாத முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். இந்திய மக்களின் மேம்பட்ட வாழ்க்கை தரத்தை அவர்களது முயற்சிகள் உறுதி செய்துள்ளன”, என்று தெரிவித்துள்ளார்.

*****************