Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் சத்தீஸ்கர் பயணம், வன சுற்றுலாவை தொடங்கி வைத்தார், பண்டிட் தீனதயாள் உபாத்யாய் சிலையை திறந்து வைத்தார், ராஜ்யோத்சவ் விழாவை தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கரில் நயா ராய்ப்பூருக்குச் சென்றார். வன சுற்றுலாவை தொடங்கி வைத்த அவர், சிறிது நேரம் அங்கு பார்வையிட்டார். பண்டிட் தீனதயாள் உபாத்யாய் சிலையை அவர் திறந்து வைத்து, மத்திய பெருவழியை, ஏகாத்ம பாதையாக அர்ப்பணித்தார். மேலும் புதிய ராய்ப்பூர் BRTS திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

“ஹம்மர் சத்தீஸ்கர் திட்டத்தில்” பங்கேற்றுள்ளவர்களையும் பிரதமர் சந்தித்தார். ராஜ்யோத்சவ் விழாவை தொடங்கி வைத்த பிரதமர், ODF பிரச்சாரத்தில் சிறந்து விளங்கியமைக்காக இரண்டு மாவட்டங்கள் மற்றும் 15 ஒன்றியங்களின் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகளையும், சாவர் உஜாலா திட்டத்தின் தொடக்கமாக, சிலருக்கு சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்களையும் வழங்கினார்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று புதிய மாநிலங்கள் அமைதியான மற்றும் நல்லிணக்கமான முறையில் உருவாக்கப்படுவதை முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயி உறுதி செய்தார் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

ஒப்பீட்டளவில் சிறியதாக உள்ள ஒரு மாநிலம், வளர்ச்சியில் எவ்வாறு புதிய உச்சங்களைத் தொட முடியும் என்பதைக் காட்டியதற்காக சத்தீஸ்கர் முதல்வர் டாக்டர் ரமன் சிங் மற்றும் மாநிலத்துக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். சத்தீஸ்கரில் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு, இந்த வளர்ச்சி முயற்சிகள் பலன் தருவதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். பரம ஏழைகளுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டு வருவதாக சுற்றுலா துறை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் மதிப்பை கூட்டும் வகையில் முயற்சிகள் எடுப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

***