புதுதில்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகத்தை அனைவரும் நேரில் சென்று காணுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர்களின் அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தது பற்றி மறைந்த முன்னாள் பிரதமர் திரு சந்திர சேகரின் மகன் திரு நீரஜ் சேகர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதிலளித்து கூறியதாவது:
“சந்திரசேகர் அவர்களைப் போன்ற தலைசிறந்த ஆளுமைகளுடன் பழகி, ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டது, எனது அதிர்ஷ்டம். சந்திரசேகர் அவர்களுடன், அனைத்து பிரதமர்களும் நாட்டின் நலனிற்காக வழங்கிய பங்களிப்பை இந்த பிரதமர்களின் அருங்காட்சியகத்தில் மக்கள் காணலாம். இந்த இடத்திற்கு வருகை தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”
*****
(Release ID: 1917493)
AD/RB/RR
यह मेरा सौभाग्य था कि चंद्रशेखर जी जैसे महान व्यक्तित्व के साथ मुझे समय बिताने का मौका मिला और बहुत कुछ सीखने को मिला। प्रधानमंत्री संग्रहालय में देशवासी चंद्रशेखर जी के साथ ही अपने सभी प्रधानमंत्रियों के योगदान को देख पाएंगे। मैं हर किसी से अनुरोध करूंगा कि वो यहां जरूर जाएं। https://t.co/8Mm2z4Dpzl
— Narendra Modi (@narendramodi) April 18, 2023