Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்

பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்


பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரானும் இன்று காலை மார்சேயில் உள்ள மசார்குஸ் போர் நினைவிடத்திற்குச் சென்று முதல் மற்றும்  இரண்டாம் உலகப் போர்களில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இரு தலைவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்கள்.

ஐரோப்பாவில் அமைதிக்காகப் போராடிய இந்திய வீரர்களின் வீரம், தியாகத்தின் வரலாற்றை மசார்குஸ் போர் நினைவிடம் விளக்குகிறது. அவர்களின் வரலாறு தொடர்ந்து பலரை ஊக்கப்படுத்துகிறது. இந்த நினைவிடம், இந்தியா-பிரான்ஸ் மக்களிடையேயான ஆழமான  தொடர்பை  நினைவுபடுத்தி  இருநாடுகளுக்கிடையேயான உறவை    தொடர்ந்து வளரச் செய்கிறது.

***

 

(Release ID: 2102330)

TS/IR/AG/KR