பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஸ்ரப் கனியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரு தலைவர்களும் நவ்ரோஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதோடு, இந்த பண்டிகை இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார தொடர்புகளையும் பாரம்பரிய உறவையும் பறைசாற்றுவதாகத் தெரிவித்தனர்.
கொவிட்-19 பெருந்தொற்றால் இந்த பிராந்தியத்தில் உண்டாகியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததோடு மட்டுமில்லாமல், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதி ஏற்றனர்.
*****