Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் மற்றும் அவரது தாயாரை பல்லடத்தில் சந்தித்துப் பேசினார்.

மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் பற்றிப் பிரதமர்  குறிப்பிட்டிருந்தார். பல இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை, குறிப்பாக பக்திப் பாடல்களை  அவர் பாடுகிறார்.

இன்று பிரதமர் திரு  மோடி முன்னிலையில் அச்சுதம் கேசவம் மற்றும் தமிழ்ப் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

எங்கள் கலந்துரையாடலில் காணப்படுவதைப் போல இந்தியா மீதான கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனின் அன்பு அற்புதமானது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.

***

(Release ID:2009609)

ANU/PKV/BR/AG/KRS