Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் கூகுள் நிறுவன முதன்மை செயலதிகாரி சுந்தர் பிச்சை சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பின் போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து  இருவரும் விவாதித்தனர். 

பிரதமருடனான சந்திப்பு குறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில்;

 “பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து  விவாதித்தோம்.  நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்காகவும், மனிதகுலத்தின் செழுமைக்காகவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து தொழில்நுட்பங்களை உருவாக்குவது இன்றியமையாதது” என தெரிவித்துள்ளார்.

**************

(Release ID: 1884948)

AP/ES/AG/RR