பிரதமர் திரு நரேந்திர மோடி, பாலஸ்தீனிய அதிபர் மேன்மைமிகு திரு முகமது அப்பாஸுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
வரும் புனித ரமலான் மாதத்தையொட்டி அதிபருக்கும், பாலஸ்தீனிய மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதித்த இரு தலைவர்களும், இந்த சூழலைக் கட்டுப்படுத்த தத்தமது நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தனர்.
வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க பாலஸ்தீனிய அதிகாரிகள் எடுத்த முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்தியா தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாலஸ்தீனத்திற்கு செய்யும் என்று உறுதியளித்தார்.
இந்த சவாலான காலகட்டத்தில் இரு தரப்பும் தொடர்பில் இருக்கவும், ஒத்துழைக்கவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
****
Discussed the COVID-19 situation with Palestinian President H.E. Mahmoud Abbas. India will provide all possible support to the friendly Palestinian people in their fight against the pandemic. https://t.co/y9ZqCoGOW1
— Narendra Modi (@narendramodi) April 14, 2020