Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருக்கும் இந்தோனேஷிய அதிபருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்தோனேசிய அதிபர் மேதகு ஜோகோ விடோடோவுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

தங்களது பகுதியிலும், உலகம் முழுவதிலும் பரவி வரும் கோவிட் 19 நோய் குறித்து இரு தலைவர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தோனேஷியாவிற்கு மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான வசதிகளைச் செய்தமைக்காக, இந்திய அரசுக்கு இந்தோனேசிய அதிபர் நன்றி பாராட்டினார். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மூலமாக, மருத்துவப் பொருட்களும், இதரப் பொருட்களும் வழங்கப்படுவதில், தடை எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்தியா, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

பரஸ்பரம் தங்கள் நாடுகளில் உள்ள இரண்டு நாட்டு குடிமக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும், இரு தலைவர்களும் விவாதித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்வதற்காக, தங்கள் நாட்டின் குழுக்கள் ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அண்டைப் பகுதியில் முக்கியமானதொரு கடல்வழித் துணை இந்தோனேஷியா என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், உலக அளவிலான இந்த நோயை எதிர்ப்பதற்கு, இருநாடுகளுக்குமிடையே நிலவும் வலுவான உறவு, இருநாடுகளுக்கும் உதவும் என்றார்.

இந்தோனேசிய அதிபர் மேதகு விடாடோவுக்கும், நட்புறவுள்ள இந்தோனேஷிய மக்களுக்கும் புனித ரமலான் மாத வாழ்த்துகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார்.