Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் ரமலான் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி ரமலானை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த நன்னாளில் பல்வேறு அரசுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

“ரமலான் திருநாளன்று எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பான தினம் சமுதாயத்தின் நல்லினக்க உணர்வையும் அமைதியையும் வலுப்படுத்தட்டும்.

மாட்சிமை பொருந்திய மன்னர் சல்மான், மாட்சிமை பொருந்திய அபுதாபி இளவரசர், மாட்சிமை பொருந்திய கட்டார் எமிர் ஆகியோருக்கும் எனது ரமலான் வாழ்த்துகள்.

அதிபர் ரவுஹானி, அதிபர் கனி, பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் ஷேக் ஹசீனா, அதிபர் யாமீன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.