Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார்


பிரதமரின் முதன்மைச் செயலாளரான திரு நிருபேந்திர மிஸ்ரா, இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். அவரை இரண்டு வாரங்கள் பதவியில் தொடருமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு செயல் அதிகாரியாக 77 ஆம் ஆண்டு உ.பி. கேடரான ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திரு பி கே சின்ஹாவைப் பிரதமர் நியமித்தார்.

திரு நிருபேந்திர மிஸ்ரா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கீழ், நாட்டுக்கு சேவை செய்வது ஒரு கவுரவமான பணியாக இருந்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்ததற்காகவும், தம்மீது முழுமையான நம்பிக்கை வைத்ததற்காகவும் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் ஆவேன்.

திருப்திகரமான இந்தப் பயணத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக எனது ஒவ்வொரு மணி நேரத்தையும் அர்ப்பணிப்போடு செயலாற்றி நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். தற்போது அதிலிருந்து விடுபடும் காலம் வந்துள்ளது. இருப்பினும், மக்கள் சேவைக்கும், தேச நலனுக்கும் என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன். அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும், நண்பர்களுக்கும் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தாருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாட்டினை வழிநடத்திச் செல்லும் நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**************