நமது உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியாகவும், அடித்தட்டு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்பவும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) 10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார், இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உத்தராகண்டை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புடன் கலந்துரையாடிய பிரதமர், இயற்கை விவசாயத்தை தேர்வு செய்தது குறித்தும், இயற்கை விளைப் பொருட்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் அவர்களிடம் கேட்டறிந்தார். இயற்கை உரங்களை எவ்வாறு சேகரிக்கிறோம் என்பது குறித்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பிரதமரிடம் எடுத்துரைத்தன. அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இயற்கை விவசாயம் பரவலாக ஊக்குவிக்கப்படுவதுடன் ரசாயன உரங்களை விவசாயிகள் பெருமளவு சார்ந்திருப்பதை குறைப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்கிறது என்றார்.
பஞ்சாப்பை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பரலியை (பயிர்க் கழிவுகளை) எரிக்காமல் அப்புறப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் சூப்பர்சீடர் மற்றும் அரசு அமைப்புகளின் உதவிகள் குறித்தும் அவர்கள் பேசினர். பரலி மேலாண்மை தொடர்பான அவர்களது அனுபவங்களை அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றலாம் என பிரதமர் பாராட்டினார்.
ராஜஸ்தானை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், தேன் உற்பத்திக் குறித்துப் பேசினர். நாஃபெட் உதவி காரணமாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகளின் வளமைக்கு அடித்தளமிடும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். அமைப்பின் உறுப்பினர்களுக்கு விதைகள், இயற்கை உரங்கள், பல்வேறு தோட்டக்கலைப் பொருட்களை வழங்கி உதவுவது குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் அரசுத் திட்டங்களில் பலன்களை பெறுவது விவசாயிகளுக்கு எவ்வாறு உதவியாக உள்ளது என்பது குறித்தும் அவர்கள் பேசினர். அவர்கள் இ-நாம் வசதிகளையும் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை நிறைவேற்றப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு பதிலளித்த பிரதமர், விவசாயிகளின் மனஉறுதியே நாட்டின் முக்கிய வலிமையாகத் திகழ்கிறது என்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர் பேசுகையில், நபார்டு ஒத்துழைப்பு காரணமாக, அதிக விலை பெறுவதற்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இந்த அமைப்புகள் முற்றிலும் பெண்களுக்கு சொந்தமானதாக, முழுவதும் அவர்களால் இயக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப சூழல் காரணமாக, சோளப் பயிர்களை சாகுபடி செய்வதாக பிரதமரிடம் தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர், பெண்களின் வெற்றி, அசைக்க முடியாத அவர்களது மனஉறுதியின் வெளிப்பாடு என்றார். சிறுதானிய சாகுபடி செய்து பயன்பெறுமாறும் அவர் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டார்.
குஜராத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், இயற்கை விவசாயம் மற்றும் பசுமாடு சார்ந்த விவசாயம், செலவுகளையும், மண்ணின் சுமையை எவ்வாறு குறைக்கிறது என்பது பற்றியும் எடுத்துரைத்தனர். இந்தத் திட்டத்தால் இப்பகுதி பழங்குடியின மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து துணை நிலை ஆளுநர் திரு.மனோஜ் சின்ஹாவுடன் பேசியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இன்று நாம் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், முந்தைய ஆண்டுகளின் சாதனைகளிலிருந்து பெற்ற ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பயணத்தை தொடங்க வேண்டியது அவசியம் என்றார். பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள நாடு மேற்கொண்ட முயற்சிகள், தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் நெருக்கடியான தருணத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான ஏற்பாடுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினருக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக இந்த நாடு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டது. நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அரசாங்கம் அயராது பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், நலவாழ்வு மையங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைக்கும் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. மக்களில் பலர் தங்களது வாழ்நாளை நாட்டிற்காக செலவிட்டு வருகின்றனர், அவர்கள்தான் தேசத்தை உருவாக்குகின்றனர். முன்பே அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்ட போதிலும் தற்போதுதான் அவர்களது பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “இந்த ஆண்டு நாம் நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டைப் பூர்த்தி செய்ய இருக்கிறோம். நாட்டின் உறுதிப்பாடுகளுடன் வலிமையான புதிய பயணத்தைத் தொடங்க இதுவே உரிய தருணம், புதிய வீரியத்துடன் முன்னோக்கிச் செல்வோம்” என்று அவர் தெரிவித்தார். கூட்டு முயற்சிகளின் வலிமை குறித்து விவரித்த பிரதமர், “130 கோடி இந்தியர்களும் ஒரே நடவடிக்கையை மேற்கொண்டால், அது வெறும் ஒரு அடி அல்ல, மாறாக 130 கோடி அடிகளுக்கு சமமானது“ என்று தெரிவித்தார்.
பொருளாதாரம் குறித்துப் பேசிய பிரதமர், பல அளவுகோள்களில், இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாகக் காணப்படுகிறது. ‘’இன்று நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 8%-ம் அதிகமாக உள்ளது. வெளிநாட்டு முதலீடும் இந்தியாவுக்கு சாதனை அளவாக வந்துள்ளது. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு சாதனை அளவை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூலில் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியிலும், குறிப்பாக வேளாண் ஏற்றுமதியில், புதிய சாதனையை நாம் படைத்துள்ளோம்’’ என்று ஆவர் கூறினார். 2021-ல் யுபிஐ மூலம் 70 லட்சம் கோடிக்கும் மேல் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இதில் 10 ஆயிரம் கடந்த ஆறு மாதங்களில் வந்தது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கலாச்சாரத்தை வலுப்படுத்திய ஆண்டு 2021 என பிரதமர் கூறினார். காசி விஸ்வநாதர் ஆலய வளாகம், கேதார் நாத் வளாகம் ஆகியவற்றை அழகுபடுத்தி, மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள், ஆதி சங்கராச்சார்யாவின் சமாதியை சீரமைத்தது, களவாடப்பட்ட அன்னபூர்ணா சிலையை மீட்டு அமைத்தது, அயோத்தியில் ராமர் ஆலய கட்டுமானம், தோலாவிரா, துர்கா பூஜைக்கு உலகப் பாரம்பரிய அந்தஸ்து பெற்றது ஆகியவை இந்தியாவின் பாரம்பரியத்தை வலுப்படுத்தியுள்ளதுடன், சுற்றுலாவையும், புனித யாத்திரையையும் அதிகரித்துள்ளது.
மாத்ரா-சக்திக்கும் 2021-ம் ஆண்டு நம்பிக்கையான ஆண்டாகும். பெண்களுக்கு சைனிக் பள்ளிகள் திறக்கப்பட்டதுடன், தேசிய பாதுகாப்பு அகாடமியின் கதவுகளும் திறக்கப்பட்டன. சற்று முன்பு முடிவடைந்த இந்த ஆண்டில், பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக, 21 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய விளையாட்டு வீரர்களும் 2021-ல், நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். விளையாட்டு உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலீடு செய்துள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்ற விவகாரத்தில் உலகுக்கே முன்னோடியாக, இந்தியா 2070-க்குள் கார்பன் உமிழ்வற்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா உரிய காலத்திற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா இன்று ஹைட்ரஜன் இயக்கத்துக்காக பாடுபட்டு வருகிறது. மின்சார வாகனங்களில் முன்னணி நிலையை எடுத்துள்ளது. பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டம், நாட்டின் உள்கட்டமைப்பு கட்டுமாணத்தின் வேகத்தை புதிய அளவுக்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதமர் கூறினார். ‘’மேக் இன் இந்தியா-வுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும் வகையில், சில்லு தயாரிப்பு, செமிகண்டக்டர் போன்ற புதிய துறைகளில் லட்சியமிக்கத் திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
‘’நாடுதான் முதலில்’’ என்ற உணர்வு இன்று ஒவ்வொரு இந்தியருக்கும் வந்துள்ளதாகக் கூறிய பிரதமர், நமது முயற்சிகளில் ஒற்றுமையும், உறுதிப்பாடும் வந்துள்ளதாகத் தெரிவித்தார். சாதிப்பதற்கு பொறுமையின்மை மாறி, நமது கொள்கைகளில் நிலைத்தன்மையும், தொலைநோக்கும் இப்போது வந்திருப்பதாக அவர் கூறினார்.
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவாக உள்ளது என்று தெரிவித்த பிரதமர், இன்றைய ஒதுக்கீட்டையும் சேர்த்தால், 1.80 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம், கூட்டு வலிமையின் அதிகாரத்தை சிறு விவசாயிகள் உணர்ந்துள்ளனர் என பிரதமர் தெரிவித்தார். இந்தப் பயன்கள் பேர வலிமை, விற்பனை, புத்தாக்கம், அபாய மேலாண்மை, சந்தை நிலையை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றை அதிகரித்துள்ளன. எஃப்பிஓ-க்களின் (விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள்) பயன்களைக் கருத்தில் கொண்டு, அரசு அதனை ஒவ்வொரு மட்டத்திலும் மேம்படுத்தி வருகிறது. இந்த எஃப்பிஓ-கள் 15 லட்சம் ரூபாய் வரை உதவியைப் பெற்று வருகின்றனர். இதன் பயனாக, இயற்கை எஃப்பிஓ-கள், எண்ணெய் வித்துக்கள் எஃப்பிஓ-கள், மூங்கில் தொகுப்புகள், தேன் எஃப்பிஓ-கள் போன்றவை நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ‘’இன்று ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ போன்ற திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். உள்நாட்டு மற்றும் உலக சந்தைகள் அவர்களுக்காக திறக்கப்பட்டுளன’’ என்று பிரதமர் கூறினார். 11 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டுடனான தேசிய பனை எண்ணெய் இயக்கம் போன்ற திட்டங்கள் இறக்குமதி மீதான சார்பை குறைத்துள்ளதாக அவர் கூறினார்.
வேளாண் துறையில் கடந்த சில ஆண்டுகளில், பல சாதனைகள் எட்டப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், உணவு தானிய உற்பத்தி 300 மில்லியன் டன்னை எட்டியது, இதேபோல, தோட்டக்கலை மற்றும் மலர் உற்பத்தி 330 மில்லியன் டன்னை எட்டியது, கடந்த 6-7 ஆண்டுகளில், பால் உற்பத்தி 45 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாகக் கூறினார். நுண்ணீர் பாசனத்தின் கீழ், சுமார் 60 லட்சம் ஹெக்டேர் நிலம் கொண்டு வரப்பட்டுள்ளது; பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வெறும் 21 ஆயிரம் கோடி பிரிமியம் மட்டும் பெற்று, ஒரு லட்சம் கோடிக்கும் மேற்பட்டத் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் எத்தனால் உற்பத்தி 40 கோடி லிட்டரில் இருந்து, 340 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. உயிரி எரிவாயுவை மேம்படுத்தும் கோபர்தான் திட்டம் பற்றி பிரதமர் விளக்கினார். பசுஞ்சாணத்துக்கு மதிப்பு இருக்குமானால், பால் தராத விலங்குகள் விவசாயிகளுக்கு பாரமாக இராது. மத்திய அரசு காமதேனு ஆணையத்தை உருவாக்கி, பால் பண்ணைத் துறை கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
பிரதமர் மீண்டும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவது பற்றி வலியுறுத்தினார். ரசாயனம் அற்ற விவசாயம் மண் வளத்தைப் பாதுகாப்பதற்கான பெரிய வழி என்று அவர் கூறினார். இந்த திசையை நோக்கிய முக்கிய நடவடிக்கை இயற்கை வேளாண்மை என்று கூறிய அவர், இதன் முன்னேற்றம் மற்றும் பயன்கள் பற்றி ஒவ்வொரு விவசாயியும் அறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகள் வேளாண்மையில் தொடர்ந்து புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், தூய்மை போன்ற இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
*****
Releasing the 10th instalment under PM-KISAN scheme. https://t.co/KP8nOxD1Bb
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
मैं माता वैष्णो देवी परिसर में हुए दुखद हादसे पर शोक व्यक्त करता हूं।
— PMO India (@PMOIndia) January 1, 2022
जिन लोगों ने भगदड़ में, अपनों को खोया है, जो लोग घायल हुए हैं, मेरी संवेदनाएं उनके साथ हैं: PM @narendramodi
केंद्र सरकार, जम्मू-कश्मीर प्रशासन के लगातार संपर्क में है। मेरी लेफ्टिनेंट गवर्नर @manojsinha_ जी से भी बात हुई है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
राहत के काम का, घायलों के उपचार का पूरा ध्यान रखा जा रहा है: PM @narendramodi
आज जब हम नव वर्ष में प्रवेश कर रहे हैं, तब बीते साल के अपने प्रयासों से प्रेरणा लेकर हमें नए संकल्पों की तरफ बढ़ना है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
इस साल हम अपनी आजादी के 75 वर्ष पूरे करेंगे।
ये समय देश के संकल्पों की एक नई जीवंत यात्रा शुरू करने का है, नए हौसले से आगे बढ़ने का है: PM @narendramodi
कितने ही लोग देश के लिए अपना जीवन खपा रहे हैं, देश को बना रहे हैं।
— PMO India (@PMOIndia) January 1, 2022
ये काम पहले भी करते थे, लेकिन इन्हें पहचान देने का काम अभी हुआ है।
हर भारतीय की शक्ति आज सामूहिक रूप में परिवर्तित होकर देश के विकास को नई गति और नई ऊर्जा दे रही है: PM @narendramodi
आज हमारी अर्थव्यवस्था की विकास दर 8% से भी ज्यादा है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
भारत में रिकॉर्ड विदेशी निवेश आया है।
हमारा विदेशी मुद्रा भंडार रिकॉर्ड स्तर पर पहुंचा है।
GST कलेक्शन में भी पुराने रिकॉर्ड ध्वस्त हुए हैं।
निर्यात और विशेषकर कृषि के मामले में भी हमने नए प्रतिमान स्थापित किए हैं: PM
2021 में भारत ने करीब-करीब 70 लाख करोड़ रुपए का लेन-देन सिर्फ UPI से किया है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
आज भारत में 50 हजार से ज्यादा स्टार्ट-अप्स काम कर रहे हैं। इनमें से 10 हजार से ज्यादा स्टार्ट्स अप्स तो पिछले 6 महीने में बने हैं: PM @narendramodi
2021 में भारत ने अपने सैनिक स्कूलों को बेटियों के लिए खोल दिया।
— PMO India (@PMOIndia) January 1, 2022
2021 में भारत ने नेशनल डिफेंस एकेडमी के द्वार भी महिलाओं के लिए खोल दिए हैं।
2021 में भारत ने बेटियों की शादी की उम्र को 18 से बढ़ाकर 21 साल यानि बेटों के बराबर करने का भी प्रयास शुरू किया: PM @narendramodi
क्लाइमेट चेंज के खिलाफ विश्व का नेतृत्व करते हुए भारत ने 2070 तक नेट जीरो कार्बन एमिशन का भी लक्ष्य दुनिया के सामने रखा है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
आज भारत हाइड्रोजन मिशन पर काम कर रहा है, इलेक्ट्रिक व्हीकल्स में lead ले रहा है: PM @narendramodi
पीएम गतिशक्ति नेशनल मास्टर प्लान देश में इंफ्रास्ट्रक्चर निर्माण की गति को नई धार देने वाला है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
मेक इन इंडिया को नए आयाम देते हुए देश ने चिप निर्माण, सेमीकंडक्टर जैसे नए सेक्टर के लिए महत्वकांक्षी योजनाएं लागू की है: PM @narendramodi
‘राष्ट्र प्रथम’ की भावना के साथ राष्ट्र के लिए निरंतर प्रयास, आज हर भारतीय का मनोभाव बन रहा है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
और इसलिए ही,
आज हमारे प्रयासों में एकजुटता है, हमारे संकल्पों में सिद्धि की अधीरता है।
आज हमारी नीतियों में निरंतरता है, हमारे निर्णयों में दूरदर्शिता है: PM @narendramodi
देश के छोटे किसानों के बढ़ते हुए सामर्थ्य को संगठित रूप देने में हमारे किसान उत्पाद संगठनों- FPO’s की बड़ी भूमिका है।
— PMO India (@PMOIndia) January 1, 2022
जो छोटा किसान पहले अलग-थलग रहता था, उसके पास अब FPO के रूप में पाँच बड़ी शक्तियाँ हैं।
पहली शक्ति है- बेहतर बार्गेनिंग, यानी मोलभाव की शक्ति: PM @narendramodi
FPOs से जो दूसरी शक्ति किसानों को मिली है, वो है- बड़े स्तर पर व्यापार की।
— PMO India (@PMOIndia) January 1, 2022
एक FPO के रूप में किसान संगठित होकर काम करते हैं, लिहाजा उनके लिए संभावनाएं भी बड़ी होती हैं: PM @narendramodi
तीसरी ताकत है- इनोवेशन की।
— PMO India (@PMOIndia) January 1, 2022
एक साथ कई किसान मिलते हैं, तो उनके अनुभव भी साथ में जुड़ते हैं। जानकारी बढ़ती है। नए नए इनोवेशन्स के लिए रास्ता खुलता है: PM @narendramodi
FPO में चौथी शक्ति है- रिस्क मैनेजमेंट की।
— PMO India (@PMOIndia) January 1, 2022
एक साथ मिलकर आप चुनौतियों का बेहतर आकलन भी कर सकते हैं, उससे निपटने के रास्ते भी बना सकते हैं।
और पांचवीं शक्ति है- बाज़ार के हिसाब से बदलने की क्षमता: PM @narendramodi
हमारी धरती को बंजर होने के बचाने का एक बड़ा तरीका है- केमिकल मुक्त खेती।
— PMO India (@PMOIndia) January 1, 2022
इसलिए बीते वर्ष में देश ने एक और दूरदर्शी प्रयास शुरू किया है।
ये प्रयास है- नैचुरल फ़ार्मिंग यानि प्राकृतिक खेती का: PM @narendramodi
हरिद्वार के जसवीर सिंह जी का एफपीओ ऑर्गेनिक फार्मिंग करने वालों के लिए एक मिसाल है। उनसे जानने को मिला कि संगठन से जुड़े किसानों ने किस प्रकार जीवामृत से ऑर्गेनिक फार्मिंग को आगे बढ़ाया। pic.twitter.com/s19r2bFuEx
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
रविंदर सिंह जी ने पराली प्रबंधन के लिए जो कार्य किया, वो देशभर के किसानों को प्रेरित करने वाला है। वे एफपीओ के जरिए न केवल किसानों को आधुनिक मशीन मुहैया कराते हैं, बल्कि उन्हें पराली प्रबंधन की ट्रेनिंग भी देते हैं। pic.twitter.com/wjmYB1Uvma
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
भरतपुर के इंद्रपाल सिंह जी ने जिस प्रकार छोटे-छोटे मधुमक्खी पालकों को आपस में जोड़ा और उन्हें सशक्त बनाया, वो हर किसी का उत्साह बढ़ाने वाला है। उन्होंने ये भी बताया कि अगले पांच सालों में अपने एफपीओ के जरिए वे क्या कुछ करने वाले हैं। pic.twitter.com/5r6J9mGHD3
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
धर्मचंद्र जी का आत्मविश्वास नए वर्ष में अन्नदाताओं को नई ऊर्जा देने वाला है। उन्होंने अपने परिश्रम से न केवल सैकड़ों किसानों को जोड़ा, बल्कि अपनी संस्था के टर्नओवर के साथ-साथ किसान भाई-बहनों की आय बढ़ाने का भी कार्य किया। pic.twitter.com/G76IOpLfzr
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
Memorable interaction with a FPO based in Tamil Nadu, which is furthering prosperity and women empowerment. pic.twitter.com/fhhdVfJ4mM
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
साबरकांठा के दीक्षित पटेल जी ने बताया कि नेचुरल फार्मिंग करने से किस प्रकार उनके एफपीओ से जुड़े किसानों का न केवल खर्च कम हुआ है, बल्कि उनकी आमदनी में भी वृद्धि हुई है। pic.twitter.com/zcRVMkuvzq
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
बीते साल के अपने प्रयासों से प्रेरणा लेकर हमें नव वर्ष में नए संकल्पों की तरफ बढ़ना है। ये समय देश के संकल्पों की एक नई जीवंत यात्रा शुरू करने का है, नए हौसले से आगे बढ़ने का है। pic.twitter.com/FgR1MinJKB
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
देश के लिए अच्छा करने वाले जब एकजुट होते हैं, बिखरे हुए मोतियों की माला बनती है, तो भारत माता दैदीप्यमान हो जाती है। हर भारतीय की शक्ति आज सामूहिक रूप में परिवर्तित होकर देश के विकास को नई गति और नई ऊर्जा दे रही है। pic.twitter.com/Z7T8Pxv891
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
आज हमारा देश अपनी विविधता और विशालता के अनुरूप हर क्षेत्र में विकास का विशाल कार्तिमान बना रहा है। pic.twitter.com/O0iCjClS7r
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
देश के छोटे किसानों के बढ़ते सामर्थ्य को संगठित रूप देने में हमारे किसान उत्पाद संगठन यानि FPO की बड़ी भूमिका है।
— Narendra Modi (@narendramodi) January 1, 2022
जो छोटा किसान पहले अलग-थलग रहता था, उसके पास अब FPO के रूप में पांच बड़ी शक्तियां हैं… pic.twitter.com/kfCwDRKUNi