நாடு முழுவதிலும் உள்ள என் விவசாய சகோதர, சகோதரிகளுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், எல்லா கிராமங்களிலும் விவசாயிகளுடன் அமர்ந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் வணக்கம்.
விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பது நமது மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. இன்றைய நாள் மிகவும் புனிதமான நாளாகும். விவசாயிகளுக்கு சம்மான் நிதி வழங்கியதைத் தவிர, வேறு பல கூடல்களின் நிகழ்வு நாளாகவும் இது இருக்கிறது. கிறிஸ்துமஸ் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் அன்பு, அமைதி, நல்லிணக்கத்தை கிறிஸ்துமஸ் பெருவிழா பரப்ப வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே!
இன்றைக்கு மோட்ச ஏகாதசி, கீதை ஜெயந்தி நாளாகவும் உள்ளது. பாரத ரத்னா மஹமனா மதன்மோகன் மாளவியா அவர்களின் பிறந்த நாளாகவும் உள்ளது. நாட்டின் தலைசிறந்த கர்மயோகியும், நமக்கு உந்துதலை அளித்தவருமான காலஞ்சென்ற அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளாகவும் உள்ளது. அவருடைய நினைவைப் போற்றும் வகையில், சிறந்த நிர்வாக நாளாக இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
நண்பர்களே!
கீதையின் போதனைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொள்வதில் அடல் அவர்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். கீதையில் स्वे स्वे कर्मणि अभिरत: संसिद्धिम् लभते नरः என்று கூறப்பட்டுள்ளது; அதாவது தங்கள் கடமைகளை சரியாகச் செய்பவர்கள் மோட்சம் பெறுகிறார்கள் என அர்த்தம். தனது செயல்பாடுகளை மிகுந்த ஒழுக்கத்துடன் நிறைவேற்றி தேசத்துக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அட்டல் அவர்கள் அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்திய அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறந்த நிர்வாகத்தை ஓர் அங்கமாக அவர் ஆக்கிக் காட்டினார். கிராமங்கள் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டுக்கு அவர் உயர் முன்னுரிமை அளித்தார். பிரதமரின் கிராம சதக் திட்டமாக இருந்தாலும் அல்லது தங்க நாற்கரச் சாலை திட்டமாக இருந்தாலும், அந்த்யோதயா அன்ன யோஜ்னாவாக இருந்தாலும் அல்லது சர்வசிக்சா அபியானாக இருந்தாலும், தேசிய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அட்டல் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இன்றைக்கு ஒட்டு மொத்த நாடும் அவரை நினைவுகூர்ந்து, அவருக்குத் தலை வணங்குகிறது. ஒரு வகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வேளாண்மைச் சீர்திருத்தங்களை வடிவமைத்தவராகவும் அட்டல் பிகாரி வாஜ்பாய் இருக்கிறார்.
நண்பர்களே,
ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் மலிந்திருப்பதை ஒரு நோய் என்று அட்டல் அவர்கள் கருதினார். “ஒரு ரூபாய் செலவழிப்பதாக இருந்தால், அது தேய்ந்து தேய்ந்து பல பேரின் பைகளுக்குப் போய்ச் சேருகிறது” என்று முந்தைய அரசுகளில் ஒரு முந்தைய பிரதமரின் பேச்சை அட்டல் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது ரூபாய் தேயவும் இல்லை, தவறானவர்கள் கைகளுக்குப் போய்ச் சேரவும் இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏழைகளுக்காக டெல்லியில் இருந்து வழங்கப்படும் நிதி, நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் சென்று சேருகிறது. இப்போது தான் வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர டோமர் அவர்கள் அந்த விவரங்களைத் தெரிவித்தார். இதற்குப் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் ஒரு பெரிய உதாரணமாக உள்ளது.
இன்றைக்கு 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேலான தொகை செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதுதான் நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நல்ல நிர்வாகம் அளிக்கப்பட்டுகிறது. ஒரு நொடி நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.18 ஆயிரம் கோடி தொகை செலுத்தப்பட்டுள்ளது. கமிஷன் கிடையாது, கட்டிங் கிடையாது, மோசடி கிடையாது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால், பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் பணம் வெளியில் வீணாகாமல் தவிர்க்கப்படுகிறது. விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்தல், அவர்களுடைய ஆதார் எண் சரிபார்த்தல், வங்கிக்கணக்குகளை மாநில அரசு மூலம் சரிபார்த்தல் மூலமான ஒரு நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒட்டுமொத்த நாட்டின் இதர விவசாயிகளுக்குக் கிடைக்கும் இந்தத் திட்டத்தின் பயன்கள் மேற்குவங்கத்தில் உள்ள 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லையே என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது. மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசுகள் இதற்குக் காரணமாக உள்ளன. மேற்குவங்க அரசின் அரசியல் காரணங்களால் அந்த விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கவில்லை. மாநில அரசு ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். இந்தப் பணம் மத்திய அரசிடம் இருந்து செல்கிறது. இருந்தாலும், அவர்களால் இந்தப் பணத்தைப் பெற முடியவில்லை. பல விவசாயிகள் மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர். இலட்சக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தும், மாநில அரசு அதைத் தடுப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகிறதா?
சகோதர, சகோதரிகளே!
மேற்குவங்கத்தை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர்கள், தங்கள் அரசியல் கொள்கைகள் காரணமாக இந்த நிலையை உருவாக்கியுள்ளார்கள் என்பதை மிகுந்த வலி மற்றும் வருத்தத்துடன் தெரிவித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். கடந்த 15 ஆண்டுகளில் மம்தா அவர்களின் உரைகளைக் கேட்டால், அரசியல் கொள்கைகள் எந்த அளவுக்கு மேற்குவங்கத்தைச் சீரழித்துள்ளன என்பதை நீங்கள் அறிய முடியும். இப்போது, இவர்கள் என்ன மாதிரியானவர்கள்? மேற்குவங்கத்தில் அவர்களுடைய கட்சி இருக்கிறது, அமைப்பு இருக்கிறது, 30 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள், எவ்வளவு பேருக்கு நல்லது செய்திருக்கிறார்கள்? விவாயிகளுக்கு ரூ.2,000 தந்திருக்கும் வகையிலான எந்த ஒரு திட்டத்துக்காகவும், ஒரு முறை கூட அவர்கள் போராடியது கிடையாது. விவசாயிகள் மீது உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், மேற்குவங்க விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க, பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பணம் கிடைக்க ஏன் போராடவில்லை? ஏன் குரல் எழுப்பவில்லை? அங்கிருந்து பஞ்சாப்புக்கு சென்றால் கேள்வி கேட்பார்கள். மேற்குவங்கத்தில் இருக்கும் அரசைப் பாருங்கள். தங்கள் மாநிலத்தின் 70 இலட்சம் விவசாயிகள் பல ஆயிரம் கோடி ரூபாயைப் பெறுவதில் அரசியல் குறுக்கே நிற்கிறது. பஞ்சாப்புக்கு செல்பவர்கள் குறித்து மௌனம் காப்பவர்கள், மேற்குவங்கத்தில் எதிரிகளாக இருக்கிறார்கள். இந்த விளையாட்டை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? நாட்டு மக்களுக்கு இது தெரியாதா? எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் ஏன் வாய்மூடி, மௌனமாக இருக்கிறார்கள்?
நண்பர்களே!
மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொது நிகழ்ச்சிகளில் சொல்லி வைத்து ஏற்பாடு செய்து செல்பி அல்லது புகைப்படங்கள் எடுத்து வெளியிடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் முன் அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சுயநல அரசியலின் தாழ்ந்த நிலைமையை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். மேற்குவங்கத்தில் விவசாயிகள் நலனுக்காகக் குரல் எழுப்பாதவர்கள், இங்கே டெல்லி குடிமக்களைத் துன்புறுத்துவதற்காக கூடி இருக்கிறார்கள். அவர்கள் தேசத்தின் பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் விவசாயிகள் பெயரால் அப்படி செய்கிறார்கள். மண்டிகள் பற்றி உரக்கக் குரல் எழுப்பும், ஏ.பி.எம்.சி.கள் பற்றிப் பேசும் இவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கும் நோக்கில் பேசி வருவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதே கொள்கைகள் மற்றும் கொடிகளுடன் இருப்பவர்கள் தான் மேற்குவங்கத்தை சீரழித்தவர்கள். அவர்களுடைய அரசு கேரளாவிலும் இருக்கிறது. இதற்கு முன்பு இந்த நாட்டை 50 – 60 ஆண்டுகள் ஆண்டவர்கள் அங்கும் அரசாங்கம் நடத்தி வந்தனர். கேரளாவில் ஏ.பி.எம்.சி. மற்றும் மண்டிகள் கிடையாது. கேரளாவில் ஏ.பி.எம்.சி.க்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்துபவர்கள் யார் என்று கேள்வி கேட்க நான் விரும்புகிறேன். பஞ்சாப் விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்த உங்களுக்கு நேரம் இருக்கிறது. ஆனால் கேரளாவில் இந்த நடைமுறையை ஏன் உருவாக்கவில்லை? இது நல்ல நடைமுறையாக இருந்தால், கேரளத்தில் ஏன் அமல் செய்யவில்லை? எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறீர்கள்? வாதத்துக்கும், உண்மைக்கும் இடம் இல்லாத விஷயங்களில் என்ன மாதிரியான அரசியலை செய்கிறார்கள். பொய்யான புகார்களைக் கூறுவது, வதந்திகளைப் பரப்புவது, எளிதில் வசப்படும் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி தவறாக வழிநடத்துகிறீர்கள்.
சகோதர சகோதரிகளே!
ஜனநாயகத்தின் எந்த அளவுகோலையும் ஏற்க இவர்கள் தயாராக இல்லை. தங்களுடைய ஆதாயங்கள், சுயநலன் பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்படுகிறார்கள். உங்களிடம் நான் சொல்வது விவசாயிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதது. விவசாயிகள் என்ற போர்வையில் தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடிப்பவர்கள், உண்மையைக் காது கொடுத்து கேட்க வேண்டும். விவசாயிகளை அவமானப்படுத்தியவர்களும், அத்துமீறல் செய்தவர்களும் தப்பித்துச் செல்ல முடியாது. பத்திரிகைகள் மற்றும் ஊடகச் செய்திகளில் இடம் பிடித்து, அரசியல் அரங்கில் தொடர்ந்து நீடிப்பதற்கான மூலிகையை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி நாட்டின் விவசாயிகள் அறிந்து கொண்டுள்ளனர். அந்தக் கட்சிகள் உயிர்வாழ்வதற்கான மூலிகையை அவர்கள் தரப்போவதில்லை. ஜனநாயகத்தில் அரசியல் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள், அவர்களுடைய எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள், அவர்களைத் தவறாக வழி நடத்தாதீர்கள், அவர்களைக் குழப்பாதீர்கள்.
நண்பர்களே!
இவர்கள் தான் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். வேளாண்மை அதன் திறனுக்கேற்ற முழு வளர்ச்சியைக் காணவில்லை. ஆட்சியில் இருந்தவர்களின் கொள்கைகளே அதற்குக் காரணம். அதிக நிலம் அல்லது ஆதாரவளம் இல்லாத விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். முந்தைய அரசுகளின் கொள்கைகள் தான் அதற்குக் காரணம். வங்கிக்கணக்கு இல்லாத காரணத்தால், சிறு விவசாயி வங்கிக்கடன் பெற முடியவில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் முன்னர் மிகச் சில சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்தது. சிறு விவசாயிக்கு தண்ணீர் அல்லது பாசனத்துக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து தன் நிலத்தில் விளைவித்த பொருள்களை விற்க சிறு விவசாயிகள் சிரமப்பட்டனர். சிறு விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்க யாருமே கிடையாது. இன்றைக்கு அநீதி இழைக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை சிறியது கிடையாது என்று நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். அவர்கள் 80 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். எண்ணிக்கையில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள். அவ்வளவு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், இந்த விவசாயிகளை அவர்களே சிரமப்பட்டு பிரச்சினைகளைக் கையாளும் நிலையில் வைத்திருந்தனர். தேர்தல்கள் நடந்து, அரசுகள் உருவாகி, அறிக்கைகள் வந்து, ஆணையங்கள் அமைக்கப்பட்டு, தரப்பட்ட வாக்குறுதிகள் மறந்து போய்விட்டன. இவை எல்லாமே நடந்தன. ஆனால் விவசாயிகளின் வாழ்க்கை நிலை மாறவில்லை. என்ன பயன் கிடைத்தது? ஏழை விவசாயி பரம ஏழையாக மாறிப் போனார். நாட்டில் இந்தச் சூழ்நிலையை மாற்ற வேண்டியது அவசியமில்லையா?
எனது விவசாய சகோதர சகோதரிகளே,
கடந்த 2014ஆம் ஆண்டு எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும் புதிய உத்தியை நாங்கள் பின்பற்றினோம். விவசாயிகளின் சிறிய பிரச்சினைகளிலும், அதே வேளையில் வேளாண்துறையை நவீன மயமாக்கி எதிர்காலத் தேவைக்கு அவர்களைத் தயார்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். எந்த நாட்டில் விளைச்சல் மிகவும் நவீனமாக உள்ளதோ, அதன் காரணமாக அங்கு விவசாயிகள் செழிப்புடன் இருக்கின்றனர் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உதாரணமாக இஸ்ரேல் நாட்டைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதுண்டு. உலக அளவில் விவசாயத்துறையில் நடைபெற்ற புரட்சிகள், மாற்றங்கள், புதிய முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய அம்சங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். பிறகு நாங்கள் அதற்கேற்றவாறு இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கிப் பணிபுரிந்தோம். வேளாண் துறையில் நாட்டில் விவசாயிகள் குறைந்த செலவை மேற்கொள்ள வேண்டும், உள்ளீட்டுச் செலவு குறைவாக இருக்க வேண்டும். விவசாயிகளின் ஒட்டுமொத்தச் செலவு குறைந்த அளவில் இருக்கவேண்டும் என்ற இலக்குகளை நோக்கி நாங்கள் பணியாற்றினோம். விவசாயிகளின் உள்ளீட்டுத் தொகையைக் குறைக்கும் வகையில் மண்வள அட்டை, யூரியா மீது வேப்பெண்ணெய்ப் பூச்சு, சூரிய ஒளியின் சக்தியில் இயங்கும் இலட்சக்கணக்கான குழாய்கள் போன்ற திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் அறிமுகப்படுத்தினோம். விவசாயிகளுக்குத் தரமான பயிர்க்காப்பீடு கிடைப்பதற்கான முயற்சிகளை எங்கள் அரசு மேற்கொண்டது. இன்று பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் நாடு முழுவதும் பயனடைந்து வருகிறார்கள்.
மேலும் எனது அருமை விவசாய சகோதர சகோதரிகளே!
தற்போது எனது விவசாய சகோதரர்களுடன் நான் உரையாடுகையில் மகாராஷ்டிராவின் லட்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கணேஷ் அவர்கள் ரூ.2500-ஐ காப்பீட்டுத் தொகையாகச் செலுத்தி, அதன் மூலம் ரூ.54,000-ஐ திரும்பப் பெற்றதாகக் குறிப்பிட்டார். கடந்த ஓராண்டில் குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகை மூலம் ரூ.87,000 கோடி வரையிலான தொகையை விவசாயிகள் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இது ஏறத்தாழ ரூ.90,000 கோடி ஆகும். விவசாயிகள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையைச் செலுத்தி அதன் மூலம் பேரிடர் காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் பயிர்க்காப்பீடு கிடைத்துள்ளது. விவசாயிகளுக்குப் போதிய நீர்ப்பாசன வசதிகளை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடும் நாங்கள் செயல் புரிந்தோம். சொட்டு நீர்ப்பாசன முறையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் அவர்கள் பேசும் போது சொட்டு நீர்ப்பாசனம் இன்றி ஒரு ஏக்கர் நிலத்தில் அவர் பணியாற்றியதாகவும், சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் மூன்று ஏக்கர்களாக அதிகரித்ததோடு அவர் முன்பை விட ரூ.1இலட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே!
நம் நாட்டு விவசாயிகள் அவர்களது பயிர்களுக்கு நியாயமான விலைகளைப் பெற வேண்டும் என்பதில் நமது அரசு தீவிரமாக உள்ளது. வெகுநாட்களாக அமல்படுத்தப்படாமல் இருந்த சுவாமிநாதன் குழுவின் அறிக்கையின் படி நாங்கள் விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு விலையை அளித்துள்ளோம். ஒரு சில பயிர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்பட்டது, நாங்கள் பயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம். முன்னதாக குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த அறிவிப்பு பத்திரிகைகளில் சிறிய செய்தியாக வெளிவந்தது. இதன் காரணமாக அதன் பலன்கள் விவசாயிகளைச் சென்று அடையவில்லை, அதனால் விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்வதில் சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் விவசாயிகளுக்குப் பெரும் தொகை சென்றடைகிறது. விவசாயிகளின் பெயரில் இன்று போராட்டம் நடத்துபவர்கள், அவர்களது ஆட்சிக் காலத்தின் போது அமைதியாக அமர்ந்திருந்தார்கள். போராட்டத்திற்குப் பின்னணியாகச் செயல்படும் அனைவரும், ஆட்சியில் பங்கேற்றதோடு சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை பல காலங்கள் நிலுவையில் வைத்திருந்தனர். விவசாயிகளுக்கு சிறப்பான வாழ்வாதாரத்தை வழங்க நாங்கள் விரும்பியதால் அந்த அறிக்கையை தேடி வெளிக்கொண்டு வந்தோம். இது தான் எங்களது தாரக மந்திரம். எனவே நாங்கள் இதனைச் செயல்படுத்துகிறோம்.
நண்பர்களே!
விவசாயிகள் ஒரே ஒரு மண்டியை மட்டும் நம்பி இருக்கக்கூடாது, அவர் தனது பயிரை சந்தைப்படுத்துவதற்குக் கூடுதல் வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் நாங்கள் பணியாற்றினோம். நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் சந்தைகளை இணையதளம் வாயிலாக நாங்கள் இணைத்தோம். இதன் வாயிலாக விவசாயிகள் ரூ.1இலட்சம் கோடிக்கும் அதிகமான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் தங்களது பயிர்களை இணையதளம் வாயிலாகச் சந்தைப்படுத்தத் துவங்கி விட்டார்கள்.
நண்பர்களே!
விவசாயிகளை உள்ளடக்கிய சிறு குழுக்களை உருவாக்கி அதன்மூலம் அவர்களது பகுதியில் அவர்கள் இணைந்து செயல்படும் நோக்கத்துடன் நாங்கள் மற்றொரு இலக்கை நிர்ணயித்தோம். 10,000 விவசாய உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவது தொடர்பான பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இவற்றிற்கான நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மகாராஜ்கஞ்-ஐ சேர்ந்த திரு ராம்குலாப் அவர்கள் பேசுகையில், 300 விவசாயிகளைக் கொண்ட குழுவை தாம் அமைத்திருப்பதையும், முன்பை விட ஒன்றரை மடங்கு அதிக அளவில் தங்கள் பொருள்களை விநியோகிப்பதையும் நாம் கேட்டோம். விவசாய உற்பத்தி நிறுவனத்தை அவர்கள் உருவாக்கினார்கள், வேளாண்துறையில் அறிவியல் சார்ந்த உதவிகளைப் பெற்று தற்போது பலனடைந்து வருகிறார்கள்.
நண்பர்களே!
கிராமங்களுக்கு அருகிலேயே சேமிப்புக் கிடங்குகள் அமைவதும், நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதிகள் குறைந்த விலையில் நமது விவசாயிகளுக்குக் கிடைப்பதும் மற்றொரு மிகப் பெரிய தேவை. இதற்கும் எங்கள் அரசு முக்கியத்துவம் வழங்கியது. இன்று குளிர்ப் பதன வசதியை நாடெங்கிலும் ஏற்படுத்துவதற்காக அரசு கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து வருகிறது. விளைச்சலைத் தவிர விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டுவதற்கு கூடுதல் வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் தேனீக்கள் வளர்ப்பையும் எங்கள் அரசு ஊக்குவித்து வருகிறது. வங்கிகளின் பணம், நமது விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என்பதை எங்கள் அரசு உறுதி செய்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நாங்கள் முதன் முறை ஆட்சி அமைத்த போது ரூ.7 இலட்சம் கோடி வரை விவசாயிகள் கடன் பெறும் வசதி இருந்தது. இது தற்போது ரூ.14 இலட்சமாக இரட்டிப்பாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் சுமார் 2.5 கோடி சிறு விவசாயிகள் விவசாயக்கடன் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு இந்தப் பிரச்சாரம் வேகமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயக் கடன் அட்டையின் பலன்களை மீன்வள மற்றும் கால்நடை விவசாயிகளுக்கும் நாங்கள் வழங்குகிறோம்.
நண்பர்களே!
உலகளவில் வேளாண் துறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை நாங்கள் ஆய்வு செய்து நவீன விவசாய நிறுவனங்களை நாட்டில் உருவாக்கும் இலட்சியத்தோடு செயலாற்றினோம். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய வேளாண் நிறுவனங்கள் நாட்டில் நிறுவப்பட்டுள்ளன. வேளாண் கல்விக்கான இடங்களும் அதிகரித்துள்ளன.
மேலும் நண்பர்களே!
விவசாயம் சார்ந்த இந்தப் பணிகளோடு நாங்கள் மற்றொரு மிகப்பெரும் இலட்சியத்தோடு பணியாற்றினோம். கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எளிமையாக்குவது தான் அந்த இலட்சியம்.
நண்பர்களே!
விவசாயிகளுக்காக தற்போது நீலிக்கண்ணீர் வடித்து நீண்ட அறிக்கைகளை இன்று வெளியிடுவோர் முன்பு அவர்களின் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் இன்னல்களைக் களைய என்ன முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பது நம் நாட்டின் விவசாயிகளுக்கு நன்கு தெரியும். விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்காக எங்களது அரசு அவர்களின் வீடுகளுக்கே சென்று விட்டது. இன்று சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பக்கா வீடுகள், கழிவறைகள் மற்றும் சுகாதாரமான தண்ணீர் இணைப்புகளைப் பெற்று வருகின்றனர். இலவச மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளின் வாயிலாக விவசாயிகள் தான் பலனடைந்துள்ளார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ரூ.5 இலட்சம் வரையில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதன் வாயிலாக சிறிய விவசாயிகளின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியமும் விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது.
நண்பர்களே!
தற்போது, விவசாயிகளின் நிலம் குறித்துக் கவலைப்படுவதாக சிலர் பாசாங்கு செய்கின்றனர். விவசாயிகளின் நிலத்தைப் பறித்தவர்களின் பெயர் நமக்குத் தெரியும். அவர்களது பெயர்கள், செய்தித்தாள்களில் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத போது, விவசாயிகளின் வீடுகள் மற்றும் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட போது இவர்கள் எங்கே சென்றார்கள்? பல்வேறு ஆண்டுகளாக சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்த உரிமையை வழங்காமல் இருந்தது யார்? இதற்கு அவர்களிடம் பதில் ஏதும் இல்லை. தற்போது கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு அவர்களது வீடுகள், நில வரைபடங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்வமித்வா திட்டத்தைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு அவர்களது நிலம் மற்றும் வீடுகளின் பேரில் தொழில்நுட்பத்தின் உதவியால், வங்கிகளிடமிருந்து கடன் பெற முடிகிறது. கிராமங்களில் வசிக்கும் நமது சகோதர, சகோதரிகளுக்காக இன்று நாம் இதனைச் செய்துள்ளோம்.
நண்பர்களே!
கால மாற்றத்துக்கு ஏற்ப நமது செயல்பாடுகளிலும் மாற்றம் தேவை. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வேளாண்மைத் துறையை நாம் நவீனமாக்க வேண்டும். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள், இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுடன் முன்னோக்கிச் செல்ல அரசும் உறுதி பூண்டுள்ளது. இன்று, ஒவ்வொரு விவசாயியும், தங்களது விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்னதாக, மண்டிகளில் உரிய விலை கிடைக்காவிட்டால் அல்லது விளைபொருள்கள் குறைவான தரத்தில் இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டால், தனது விளைபொருளை மிகவும் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலையில் விவசாயிகள் இருந்தனர். இந்த வேளாண் சீர்திருத்தங்கள் மூலம், விவசாயிகளுக்கு நாங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, உங்களது விளைபொருள்களை நீங்கள் விரும்பும் இடத்தில் அல்லது நீங்கள் விரும்பும் யாரிடமும் விற்றுக் கொள்ளலாம்.
எனது அருமை விவசாய சகோதர, சகோதரிகளே!
இந்த வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள். நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். உங்களது விளைபொருளை உங்களது முடிவுக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் இடத்தில் விற்றுக் கொள்ளலாம். உரிய விலை கிடைக்கும் இடத்தில் நீங்கள் விற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? அதன்படி நீங்கள் விற்றுக் கொள்ளலாம். மண்டிகளில் நீங்கள் விற்க விரும்புகிறீர்களா? அதன்படியே விற்றுக் கொள்ளலாம். நீங்கள் உங்களது விளைபொருளை ஏற்றுமதி செய்ய விரும்பினால், ஏற்றுமதி செய்யலாம். வியாபாரியிடம் விற்க விரும்பினால், அதன்படியே விற்கலாம். மற்றொரு மாநிலத்தில் விற்பனை செய்ய விரும்புகிறீர்களா? அதன்படியே உங்களால் விற்க முடியும். கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் விளைபொருள்களையும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் விற்க விரும்புகிறீர்களா? அவ்வாறே விற்பனை செய்யலாம். பிஸ்கட்டுகள், நொறுக்குத்தீனிகள், ஜாம் மற்றும் பிற நுகர்வோர் பொருள்கள் உற்பத்தியில் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அதனையும் நீங்கள் செய்யலாம். பல்வேறு உரிமைகளையும் நாட்டில் உள்ள விவசாயிகள் பெறுகிறார்கள் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது? விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இணையத்தின் மூலம் ஆண்டு முழுவதும், எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெற்றால், அதில் என்ன தவறு உள்ளது?
நண்பர்களே!
புதிய வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து அளவிட முடியாத அளவுக்கு இன்று பொய்கள் பரப்பப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும் என்று சிலரும், மண்டிகள் மூடப்படும் என்று மற்றொரு தரப்பினரும் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டம் அமலுக்கு வந்து பல்வேறு மாதங்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் எந்தப் பகுதியிலும் ஏதாவது ஒரு மண்டி மூடப்பட்டதாக செய்திகளைக் கேள்விப்பட்டீர்களா? குறைந்தபட்ச ஆதார விலையைப் பொறுத்தவரை, அண்மைக் காலத்தில் பல்வேறு விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டது. வேளாண் சீர்திருத்தங்களுக்குப் பிறகும், புதிய வேளாண் சட்டங்களுக்குப் பிறகும் ஆதார விலை அதிகரிக்கப்பட்டது. விவசாயிகளின் பெயரில் நடத்தப்படும் போராட்டத்தில், பல்வேறு அப்பாவி மற்றும் உண்மையான விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் கண்ணோட்டத்துடன் உள்ள சில தலைவர்களைத் தவிர, பெரும்பாலான விவசாயிகள் நல்லவர்கள் மற்றும் அப்பாவிகள். அவர்களிடம், உங்களிடம் எவ்வளவு நிலம் உள்ளது, என்ன விளைவித்தீர்கள், இந்த முறை உங்களது விளைபொருட்களை விற்பனை செய்தீர்களா அல்லது இல்லையா? என்று இரகசியமாக கேள்வி கேட்டீர்கள் என்றால், குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருள்களை விற்பனை செய்ததாக அவர்கள் தெரிவிப்பார்கள். குறைந்தபட்ச ஆதார விலையில் பொருள்கள் கொள்முதல் செய்யப்படும் போது, அவர்கள் போராடாமல் அமைதியாக இருந்தார்கள். ஏனெனில், தங்களது விளைபொருள்களை மண்டிகளில் விற்பனை செய்ததை விவசாயிகள் உணர்ந்திருந்தனர். அனைத்துமே விற்பனை செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த பிறகு, அவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நண்பர்களே!
விவசாயிகளின் விளைபொருள்களை அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில், இதுவரை இல்லாத சாதனை அளவுக்கு அரசு கொள்முதல் செய்தது என்பதே உண்மை. அதுவும், புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு, கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வேளாண் சீர்திருத்தங்கள் மூலமாக, தனது பொறுப்புகளை மட்டுமே அரசு அதிகரித்துள்ளது! உதாரணமாக, ஒப்பந்தப் பண்ணையத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த வழிமுறைகள், பல ஆண்டுகளாக அமலில் உள்ளன. அங்கு, ஒப்பந்தம் மூலமாக விவசாயப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே இருந்த சட்டங்களில், உடன்பாட்டை மீறினால், விவசாயிகள் மீது அபராதம் விதிக்கும் வழிமுறைகள் இருந்ததை நீங்கள் அறிவீர்களா? இதனை எனது விவசாய சகோதரர்களுக்கு யாரும் எடுத்துரைக்கவில்லை. எனினும், நமது அரசு இந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், எனது விவசாய சகோதரர்களுக்கு எந்தவொரு அபராதமும் விதிக்கப்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
நண்பர்களே!
சில காரணங்களால், விவசாயியால் மண்டிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அவர் என்ன செய்வார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தனது விளைபொருளை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வார். விவசாயி பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சட்ட நடவடிக்கைகளையும் கூட நமது அரசு எடுத்துள்ளது. விளைபொருளை வாங்குபவர், அதற்கான தொகையை உங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. அவர் ரசீதை அளிப்பதுடன் மூன்று நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதிகார வட்டாரங்களில் புகார் அளித்து, சட்ட நடவடிக்கைகள் மூலம், பணத்தைப் பெற விவசாயியிக்கு சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. இந்த அனைத்துச் செயல்களும் நிறைவேற்றப்பட்டு, இந்தச் சட்டங்கள் மூலம், நமது நாட்டில் உள்ள விவசாய சகோதரர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்ற செய்தி படிப்படியாக பரவியது. ஒவ்வொரு நடவடிக்கையிலும் விவசாயிக்கு ஆதரவாக அரசு உள்ளது. அரசு நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், விவசாயி தனது விளைபொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய விரும்பினால், அதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், வலுவான சட்ட முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நண்பர்களே!
ஒவ்வொருவரும் வேளாண் சீர்திருத்தங்களின் மற்றொரு முக்கிய அம்சத்தையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தற்போது, விவசாயியுடன் ஒருவர் ஒப்பந்தத்தை மேற்கொண்டால், அவரும் கூட சிறந்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றே விரும்புவார். எனவே, தரமான விதைகள், நவீன தொழில்நுட்பம், உயர்தரமான உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவத்தை விவசாயிகள் பெறுவதற்கு ஒப்பந்ததாரர் உதவுவார். ஏனெனில், இதுதான் அவருக்கு முக்கிய வருவாய் ஆதாரமாகும். நல்ல விளைச்சல் கிடைப்பதற்குத் தேவையான வசதிகளை, விவசாயியின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பார். சந்தை நிலவரத்தை ஒப்பந்ததாரர் முழுமையாக அறிந்திருப்பார். சந்தையின் தேவைக்கு ஏற்ப, நமது விவசாயிகளுக்கு அவர் உதவுவார். தற்போது மற்றொரு சூழ்நிலையை உங்களுக்கு நான் விளக்குகிறேன். சில காரணங்களால், விவசாயியின் விளைபொருள் நல்லதாக இல்லாமலோ, சேதமடைந்ததாகவோ இருந்தாலும் கூட, ஒப்பந்தத்தின்படி, விவசாயியிக்கு விலையைக் கொடுக்க வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமை. ஒப்பந்ததாரர் தனது விருப்பப்படி, ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட முடியாது. அதே நேரம், மறுமுனையில், ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒப்பந்தத்தை ரத்து செய்ய விவசாயி விரும்பினால், அவரால் அதனைச் செய்ய முடியும். ஆனால், மற்றவர்களால் ரத்து செய்ய முடியாது. இதுபோன்ற சூழல், விவசாயிகளுக்கு பலனளிக்காதா? இது விவசாயிகளுக்கு மிகவும் வலுவான உத்தரவாதம் இல்லையா? இது விவசாயியிக்கு பலன் அளிக்கும் என்பதற்கான உத்தரவாதமா, இல்லையா? மற்றொரு கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். இதுவும் கூட உங்களது மனதில் எழலாம். விளைச்சல் மிகவும் சிறப்பாக இருந்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கும் போது, ஒப்பந்தத்தில் ஏற்பட்டதை விட அதிக இலாபத்தை ஒப்பந்ததாரர் பெறுவார். இது போன்ற சூழலில், விவசாயிகளுக்கு தான் ஒப்புக் கொண்ட தொகையை மட்டுமல்லாமல், கூடுதல் வருவாய் காரணமாக, ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும். இது விவசாயிகளுக்கான சிறந்த பாதுகாப்பு இல்லையா? இது போன்ற சூழலில், ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையுடன், நான் கூறியதைப் போன்று, ஊக்கத்தொகையைப் பெறவும் விவசாயி தகுதி பெறுகிறார். இதற்கு முன்னதாக என்ன நடந்தது என்பதை நீங்கள் நினைவில் வைத்துள்ளீர்களா? ஒட்டுமொத்த அபாயத்தையும் விவசாயி எதிர்கொள்ளும் நிலையில், அதன் பலன்களை வேறு யாரோ பெற்றுவந்தனர். தற்போது, புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயியிக்கு முற்றிலும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஒட்டு மொத்த ஆபத்தையும் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நபரோ அல்லது நிறுவனமோ எதிர்கொள்வார்கள். பலன்கள் விவசாயியிக்கு கிடைக்கும்.
நண்பர்களே!
ஒப்பந்த சாகுபடி முறை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடு எது என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்த நாடு, நமது இந்தியா தானே தவிர, வேறு நாடல்ல! கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளால் தான் இது சாத்தியமாயிற்று. தற்போது பால்வளத் துறையில் உள்ள ஏராளமான கூட்டுறவுச் சங்கங்களும், தனியார் நிறுனங்களும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, பாலைக் கொள்முதல் செய்து சந்தையில் விற்பனை செய்கின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதே நடைமுறை தொடர்வது? ஒரு நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கம், ஒட்டு மொத்த சந்தையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அத்தகைய விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வெற்றி மூலம் பால்வளத்துறையில் பயனடைந்தது யார் என்பது நீங்கள் அறியாததா? மற்றொரு துறையிலும் நம் நாடு முன்னணியில் இருப்பது தெரியுமா- அது கோழி வளர்ப்புத் தொழில் தான். தற்போது, முட்டை உற்பத்தியிலும் இந்தியா தான் முன்னோடியாக உள்ளது. பல பெரிய நிறுவனங்கள் தான் கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளன; அதே வேளையில் சில சிறிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களது உற்பத்திப் பொருள்களை யாரிடமும், எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் சுதந்திரம் உள்ளது. அவர்களுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு முட்டைகளை விற்பனை செய்யலாம். கோழி வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் உள்ளவர்களைப் போன்று, வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நமது விவசாயிகளும் முன்னேற வேண்டும் என்பது தான் நமது விருப்பம். ஒரு தொழிலில் ஏராளமான நிறுவனங்களும், பல்வேறு போட்டியாளர்களும் இருக்கத்தான் செய்வார்கள், அது போல விவசாயிகளும், தங்களது விளைபொருள்களுக்குக் கூடுதல் விலை பெறுவதுடன், சந்தைகளையும் எளிதில் அணுக முடியும்.
நண்பர்களே!
புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மூலம், இந்திய வேளாண் துறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம், நமது விவசாயிகளும் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதோடு, பல்வேறு தரப்பட்ட பயிர்களைச் சாகுபடி செய்வது, விளைபொருள்களை நல்ல முறையில் அடைத்து விற்பனைக்கு அனுப்புதல் மற்றும் விளைபொருள்களுக்கு மதிப்புக் கூட்டும் பணிகளையும் மேற்கொள்ளலாம். இது சாத்தியமானால், நமது விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைப்பதுடன், தேவையும் அதிகரிக்கும். நமது விவசாயிகள், உற்பத்தியாளராக மட்டும் இருந்து விடாமல், ஏற்றுமதியாளர்களாகவும் திகழ முடியும். உலகில் உள்ள யாராவது, வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொண்ட சந்தையை ஏற்படுத்த விரும்பினால், அவர்கள் இந்தியாவிற்கு வரவேண்டும். உலகின் எந்தப் பகுதியிலும், தரமான, சரியான எடை அளவுள்ள பொருள்களுக்கான தேவை ஏற்பட்டால், அவர்கள் இந்திய விவசாயிகளுடன் பங்குதாரராகச் சேரக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். பிற துறைகளிலும் முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளை அதிகரிப்போமேயானால், அது கூடுதல் வருவாய்க்கு வழிவகுப்பதுடன், மற்ற துறைகளிலும் இந்தியாவின் முத்திரையைப் பதிக்க முடியும். உலகிலுள்ள வேளாண் சந்தைகளில், இந்தியப் பொருள்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய காலம் வரும்.
நண்பர்களே!
அரசுத் தரப்பில், அடக்கத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் போதிலும், ஜனநாயக ரீதியாக நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கட்சிகள், அரசியல் காரணங்கள் அல்லது தங்களது அரசியல் சித்தாந்தம் காரணமாக, இது போன்ற விவாதங்கள் நடைபெற விடாமல் தடுப்பதோடு, விவசாயிகளில் சிலரைத் தவறாக வழி நடத்துகின்றனர். வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை, இந்த அரசியல் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், விவசாயிகளின் முதுகில் ஏறித் தாக்குதல் நடத்துவதோடு, விவாதிக்க சரியான பிரச்சினை ஏதும் இல்லாததால், விவசாயிகளின் பெயரால் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்புகின்றனர். போராட்டங்கள் ஆரம்பித்த போது, நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம், ஏனெனில் அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி மட்டும் தான் கோரிக்கை விடுத்தனர்; அவர்கள் விவசாயிகள் என்பதால், சில நியாயமான தயக்கங்கள் அவர்களது மனதில் இருந்தது. ஆனால், குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், இதுவரை காணப்படாத நிலையை உருவாக்கியதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை புறந்தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தனர். வன்முறையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோருகின்றனர். முந்தைய அரசுகள் நவீன நெடுஞ்சாலைகளை அமைத்த போது, இவர்கள் அரசுக்கு ஆதரவாக இருந்தனர், ஏனெனில் இவர்களும் அத்தொழிலில் பங்குதாரர்களாக இருந்தனர். ஆனால், தற்போது அவர்களே, சுங்கக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், சங்கச் சாவடிகளே இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர். விவசாயிகளின் பிரச்சினைகளை விட்டுவிட்டு, புதிய கோரிக்கைகளை வலியுறுத்துவது ஏன்? தற்போது அவர்கள் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர், அது தான் தற்போது நடக்கிறது, விவசாயிகளின் போராட்டம் என்ற பெயரில், சுங்கக் கட்டணத்தை எதிர்க்கின்றனர்.
நண்பர்களே!
இதுபோன்ற சூழலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், வேளாண் சீர்திருத்தங்களுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர், அவர்களை வரவேற்கிறோம். அனைத்து விவசாயிகளுக்கும் எனது நன்றியை உரித்தாக்குவதோடு, நாட்டை முன்னெடுத்துக்ச செல்வதற்கான அரசின் முடிவுகளின் பக்கம் நிற்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தலைவணங்குவதோடு, உங்களது நம்பிக்கை வீண்போக விடமாட்டோம் என்பதை, எனதருமை விவசாய சகோதார, சகோதரிகளுக்கு உறுதி கூறுகிறேன். பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து, கடந்த சில நாட்களாக இதனை உணரமுடிகிறது. விவசாயிகள் எந்த அளவிற்கு வாக்களிப்பார்களோ, அதே விதத்தில் தான் கிராமப்புற மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராட்டத்திற்குப் பின்னணியில் உள்ளவர்களை நிராகரித்துள்ளனர், தோற்கடித்துள்ளனர். தவறாக வழிநடத்தும் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே, கூக்குரல்களைப் புறக்கணித்துள்ளனர். வாக்குச்சீட்டுகள் மூலம் , புதிய சட்டங்களுக்கு அவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நண்பர்களே!
யதார்த்தம் மற்றும் நியாயத்தின் அடிப்படையிலேயே, ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களது முடிவுகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதனைச் சுட்டிக்காட்டலாம். ஜனநாயகம் உள்ளது, எங்களுக்கு எல்லா அறிவையும் ஆண்டவன் கொடுத்துவிட்டார் என்று நாங்கள் கூறவில்லை, ஆனால், விவாதம் நடத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையிலும், விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு எப்போதும் தயாராகவே உள்ளது, ஏனெனில், நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருப்பதுடன், விவசாயிகள் மீது நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் தான் அதற்குக் காரணம். இந்த வேளாண் சீர்திருத்தங்களுக்குப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன, இது குறித்த அவர்களது எழுத்துப்பூர்வமான அறிக்கைகளையும் பார்க்கிறோம், அவர்களது வார்த்தைகளிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருப்பதோடு, அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் மாறியுள்ளது. விவசாயிகளைத் தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, ஜனநாயகத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் கிடையாது. அவர்களை உலகிலுள்ள அனைவரும் அறிவார்கள். இது போன்ற நபர்கள் அண்மைக் காலமாக என்ன பேசி வருகிறார்கள் என்பதைப் பற்றியோ, அவர்கள் எத்தகைய குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவோ, அவர்களது விருப்பங்களை எந்த விதத்தில் வெளிப்படுத்துகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டவோ நான் விரும்பவில்லை, ஆனால், இவற்றுக்கு இடையேயும், எங்களை எதிர்ப்போருக்கு, அடக்கத்துடன் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், விவசாயிகளின் நலன் கருதி, எங்களது அரசு அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது, ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை , பிரச்சினைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது தான்.
நண்பர்களே!
நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நீங்கள் முன்னேறினால், ஒட்டுமொத்த நாடும் முன்னேறும். ஒரு விவசாயி சுயசார்பு அடைந்தால் தான், அவர் சுயசார்பு இந்தியாவிற்கு அடித்தளமிட முடியும். நான் இந்த நாட்டு விவசாயிகளைக் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் விரக்தி அடைந்து விடாதீர்கள், யாராவது கூறும் பொய்யை நம்பிவிடாதீர்கள், யதார்த்தம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மட்டும் சிந்திக்க வேண்டும் என்பது தான். நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்ட நிதியைப் பெறும் இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களை நான் பாராட்டுகிறேன். உங்களது மற்றும் உங்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திப்பதோடு, உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
**********************
Working for the welfare of our hardworking farmers. #PMKisan https://t.co/sqBuBM1png
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
आज देश के 9 करोड़ से ज्यादा किसान परिवारों के बैंक खाते में सीधे, एक क्लिक पर 18 हज़ार करोड़ रुपए जमा हुए हैं।
— PMO India (@PMOIndia) December 25, 2020
जब से ये योजना शुरू हुई है, तब से 1 लाख 10 हजार करोड़ रुपए से ज्यादा किसानों के खाते में पहुंच चुके हैं: PM#PMKisan
मुझे आज इस बात का अफसोस है कि मेरे पश्चिम बंगाल के 70 लाख से अधिक किसान भाई-बहनों को इसका लाभ नहीं मिल पाया है।
— PMO India (@PMOIndia) December 25, 2020
बंगाल के 23 लाख से अधिक किसान इस योजना का लाभ लेने के लिए ऑनलाइन आवेदन कर चुके हैं।
लेकिन राज्य सरकार ने वेरिफिकेशन की प्रक्रिया को इतने लंबे समय से रोक रखा है: PM
जो दल पश्चिम बंगाल में किसानों के अहित पर कुछ नहीं बोलते, वो यहां दिल्ली में आकर किसान की बात करते हैं।
— PMO India (@PMOIndia) December 25, 2020
इन दलों को आजकल APMC- मंडियों की बहुत याद आ रही है।
लेकिन ये दल बार-बार भूल जाते हैं कि केरला में APMC- मंडियां हैं ही नहीं।
केरला में ये लोग कभी आंदोलन नहीं करते: PM
हमने लक्ष्य बनाकर काम किया कि देश के किसानों का Input Cost कम हो।
— PMO India (@PMOIndia) December 25, 2020
सॉयल हेल्थ कार्ड, यूरिया की नीम कोटिंग, लाखों सोलर पंप की योजना, इसीलिए शुरू हुई।
सरकार ने प्रयास किया कि किसान के पास एक बेहतर फसल बीमा कवच हो।
आज करोड़ों किसानों को पीएम फसल बीमा योजना का लाभ हो रहा है: PM
हमारी सरकार ने प्रयास किया कि देश के किसान को फसल की उचित कीमत मिले
— PMO India (@PMOIndia) December 25, 2020
हमने लंबे समय से लटकी स्वामीनाथन कमेटी की रिपोर्ट के अनुसार, लागत का डेढ़ गुना MSP किसानों को दिया।
पहले कुछ ही फसलों पर MSP मिलती थी, हमने उनकी भी संख्या बढ़ाई: PM
हम इस दिशा में भी बढ़े कि फसल बेचने के लिए किसान के पास सिर्फ एक मंडी नहीं बल्कि नए बाजार हो।
— PMO India (@PMOIndia) December 25, 2020
हमने देश की एक हजार से ज्यादा कृषि मंडियों को ऑनलाइन जोड़ा। इनमें भी एक लाख करोड़ रुपए से ज्यादा का कारोबार हो चुका है: PM
हमने एक और लक्ष्य बनाया कि छोटे किसानों के समूह बनें ताकि वो अपने क्षेत्र में एक सामूहिक ताकत बनकर काम कर सकें।
— PMO India (@PMOIndia) December 25, 2020
आज देश में 10 हजार से ज्यादा किसान उत्पादक संघ- FPO बनाने का अभियान चल रहा है, उन्हें आर्थिक मदद दी जा रही है: PM
आज देश के किसान को अपना पक्का घर मिल रहा है, शौचालय मिल रहा है, साफ पानी का नल मिल रहा है।
— PMO India (@PMOIndia) December 25, 2020
यही किसान है जिसे बिजली के मुफ्त कनेक्शन, गैस के मुफ्त कनेक्शन से बहुत लाभ हुआ है।
आयुष्मान भारत योजना के तहत 5 लाख रुपए तक के मुफ्त इलाज ने उनके जीवन की बड़ी चिंता कम की है: PM
आप अपनी उपज दूसरे राज्य में बेचना चाहते हैं? आप बेच सकते हैं।
— PMO India (@PMOIndia) December 25, 2020
आप एफपीओ के माध्यम से उपज को एक साथ बेचना चाहते हैं? आप बेच सकते हैं।
आप बिस्किट, चिप्स, जैम, दूसरे कंज्यूमर उत्पादों की वैल्यू चेन का हिस्सा बनना चाहते हैं? आप ये भी कर सकते हैं: PM
आप न्यूनतम समर्थन मूल्य यानी एमएसपी पर अपनी उपज बेचना चाहते हैं? आप उसे बेच सकते हैं।
— PMO India (@PMOIndia) December 25, 2020
आप मंडी में अपनी उपज बेचना चाहते हैं? आप बेच सकते हैं।
आप अपनी उपज का निर्यात करना चाहते हैं ? आप निर्यात कर सकते हैं।
आप उसे व्यापारी को बेचना चाहते हैं? आप बेच सकते हैं: PM
इन कृषि सुधार के जरिए हमने किसानों को बेहतर विकल्प दिए हैं।
— PMO India (@PMOIndia) December 25, 2020
इन कानूनों के बाद आप जहां चाहें जिसे चाहें अपनी उपज बेच सकते हैं।
आपको जहां सही दाम मिले आप वहां पर उपज बेच सकते हैं: PM#PMKisan
जब हमने दूसरे सेक्टर में इनवेस्टमेंट और इनोवेशन बढ़ाया तो हमने आय बढ़ाने के साथ ही उस सेक्टर में ब्रांड इंडिया को भी स्थापित किया।
— PMO India (@PMOIndia) December 25, 2020
अब समय आ गया है कि ब्रांड इंडिया दुनिया के कृषि बाजारों में भी खुद को उतनी ही प्रतिष्ठा के साथ स्थापित करे: PM#PMKisan
ऐसी परिस्थिति में भी देशभर के किसानों ने कृषि सुधारों का भरपूर समर्थन किया है, स्वागत किया है।
— PMO India (@PMOIndia) December 25, 2020
मैं सभी किसानों का आभार व्यक्त करता हूं।
मैं भरोसा दिलाता हूं कि आपके विश्वास पर हम कोई आंच नहीं आने देंगे: PM
पिछले दिनों अनेक राज्य़ों, चाहे असम हो, राजस्थान हो, जम्मू-कश्मीर हो, इनमें पंचायतों के चुनाव हुए।
— PMO India (@PMOIndia) December 25, 2020
इनमें प्रमुखत ग्रामीण क्षेत्र के लोगों ने, किसानों ने ही भाग लिया।
उन्होंने एक प्रकार से किसानों को गुमराह करने वाले सभी दलों को नकार दिया है: PM
आज देश के 9 करोड़ से ज्यादा किसान परिवारों के बैंक खातों में सीधे एक क्लिक पर 18 हजार करोड़ रुपये से ज्यादा जमा हुए हैं।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
कोई कमीशन नहीं, कोई हेराफेरी नहीं। यह गुड गवर्नेंस की मिसाल है। #PMKisan pic.twitter.com/Qd6gAU5qEt
स्वार्थ की राजनीति का एक भद्दा उदाहरण हम इन दिनों देख रहे हैं।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
जो दल पश्चिम बंगाल में किसानों के अहित पर कुछ नहीं बोलते, वे दिल्ली में आकर किसान की बात करते हैं।
इन्हें APMC मंडियों की बहुत याद आ रही है। लेकिन ये केरल में कभी आंदोलन नहीं करते, जहां APMC मंडियां हैं ही नहीं। pic.twitter.com/Q4T0mQdIdn
2014 में हमारी सरकार ने नई अप्रोच के साथ काम करना शुरू किया।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
हमने देश के किसान की छोटी-छोटी दिक्कतों, कृषि के आधुनिकीकरण और उसे भविष्य की जरूरतों के लिए तैयार करने पर एक साथ ध्यान दिया।
इस लक्ष्य के साथ काम किया कि किसानों का खेती पर होने वाला खर्च कम हो। #PMKisan pic.twitter.com/hxr37pinwf
हमारी सरकार ने प्रयास किया कि देश के किसान को फसल की उचित कीमत मिले।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
हमने लंबे समय से लटकी स्वामीनाथन कमेटी की रिपोर्ट के अनुसार लागत का डेढ़ गुना MSP किसानों को दिया।
हम आज MSP पर रिकॉर्ड सरकारी खरीद कर रहे हैं, किसानों की जेब में MSP का रिकॉर्ड पैसा पहुंच रहा है। #PMKisan pic.twitter.com/PLxm4jTOnn
कृषि सुधार कानूनों के बाद किसान जहां चाहें, जिसे चाहें अपनी उपज बेच सकते हैं।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
जहां सही दाम मिले, वहां बेच सकते हैं। मंडी में बेच सकते हैं, व्यापारी को बेच सकते हैं, दूसरे राज्य में बेच सकते हैं और निर्यात भी कर सकते हैं।
किसान को इतने अधिकार मिल रहे हें तो इसमें गलत क्या है? pic.twitter.com/Sl5YLHQAE9
आज नए कृषि सुधारों के बारे में असंख्य झूठ फैलाए जा रहे हैं।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
लेकिन खबरें आ रही हैं कि कैसे एक-एक कर के हमारे देश के किसान इन कानूनों का फायदा उठा रहे हैं।
सरकार किसान के साथ हर कदम पर खड़ी है। ऐसी व्यवस्था की गई है कि एक मजबूत कानून और लीगल सिस्टम किसानों के पक्ष में खड़ा रहे। pic.twitter.com/uqrJv0U0es
पहले क्या होता था, याद है?
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
सारा रिस्क किसान का होता था और रिटर्न किसी और का होता था।
अब नए कृषि कानूनों और सुधार के बाद स्थिति बदल गई है। #PMKisan pic.twitter.com/ZCKPChBlpU
हम देश के अन्नदाता को उन्नत करने के लिए हर संभव प्रयास कर रहे हैं। जब किसानों की उन्नति होगी, तो पूरे राष्ट्र की उन्नति तय है।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
मेरा आग्रह है- किसान किसी के बहकावे में न आएं, किसी के झूठ को न स्वीकारें। #PMKisan pic.twitter.com/AoaDjUMIxD