Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் எதிர்வரவுள்ள இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி விஜயம்


பிரதமர் திரு.நரேந்திர மோடி 2017, ஜுலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்ல உள்ளார், மேலும் பிரதமர், 12வது ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக 2017, ஜுலை 6 முதல் 8 வரை ஜெர்மனியில் உள்ள ஹம்பெர்க்  நகருக்கு செல்லவும் உள்ளார்.

பேஸ்புக்கில்  பிரதமர் தனது பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்:

“நான் இஸ்ரேல் பிரதமர் திரு.பெஞ்சமின் நெதன்யாஹூவின் அழைப்பினை ஏற்று 2017, ஜுலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்ல உள்ளேன்.

இவ்வாறு செல்லும் முதல் பிரதமரான நான் இரு நாடுகளும் மற்றும் மக்களும் நெருக்கமாகும் வகையிலான இந்த எதிர்பாராத பயணத்தை நான் பெரிதும் எதிர்நோக்குகிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும், இஸ்ரேலும் தூதரக உறவுகளைத் துவங்கி 25வது ஆண்டினை குறிக்கிறது.

நான் இரு தரப்பிற்கும் பயனளிக்கும் வகையிலும், பல்வேறு துறைகளிலான கூட்டை வலுப்படுத்தும் வகையிலும் பிரதமர் திரு.நெதன்யாஹூ உடன் ஆழ்ந்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். எங்களுக்கு பயங்கரவாதம் போன்ற மிக முக்கிய பொதுவான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு, நவம்பரில் புதுதில்லிக்கு வருகை தந்தபோது வரவேற்கும் வாய்ப்பு கிடைத்த ஜனாதிபதி திரு.ரியூவன் ருவி ரிவ்லின் அவர்களையும் மற்ற பிற மூத்த தலைவர்களையும் நான் சந்திக்க உள்ளேன்.

இந்த விஜயத்தின்போது எனது பயணத்திட்டத்தில், இஸ்ரேல் சமூகத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையேயான நிரந்தர உறவை பிரதிபலிக்கும் வகையில் இஸ்ரேலில் வாழும் வலிமையான இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாட இருப்பதை எதிர்பார்த்துள்ளேன்.

பொருளாதாரத் துறையில், நான் மூத்த இந்திய மற்றும் இஸ்ரேல் தலைமைச் செயல் அலுவலர்கள் மற்றும் துவக்க நிலை நிறுவனங்களுடன் வியாபாரம் மற்றும் முதலீடு கூட்டுறவு   விரிவாக்கம் குறித்து முதன்மையாக விவாதிக்க உள்ளேன். இது தவிர, நேரடி பயணம் மூலம் இஸ்ரேல் அடைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் சாதனைகளை கண்டறிய இயலும் என நம்புகிறேன்.

அங்கு தங்கியிருக்கும்போது, நான் மனித வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களுள் ஒன்று எனக் கருதப்படுகின்ற ஹோலோகாஸ்ட்டினால் பாதிக்கப்பட்டுவர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள யாத் வாஷ் நினைவு அருங்காட்சியகத்திற்கு செல்ல உள்ளேன். பின்னர், 1918-ம் ஆண்டு ஹைபா விடுதலைக்கான தங்களது இன்னுயிரை நீத்த வீரமிக்க இந்திய வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்த உள்ளேன்.

ஜுலை 6 அன்று மாலை, நான் ஜெர்மனி நடத்தும் 12வது ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ளவதற்காக ஹம்பெர்க் செல்வதற்கான பயணத்தை துவங்க உள்ளேன். ஜுலை 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களிலும், நான் பொருளாதார வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜி-20 நாடுகளை சேர்ந்த பிற தலைவர்களுடன் பேச உள்ளதை எதிர்நோக்கியுள்ளேன்.

கடந்த ஆண்டு ஹாங்சூ உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்ய உள்ளதுடன், பயங்கரவாதம், பருவகாலம், நிலையான வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வியாபாரம், டிஜிட்டல்மயமாக்கல், உடல்நலம், வேலைவாய்ப்பு, குடிபெயர்தல், மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஆப்பிரிக்கா உடனான கூட்டு போன்ற பிரச்சினைகள் குறித்தும் விரிவான உரையாட உள்ளோம். இந்த ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ஒரு இணைக்கப்பட்ட உலகத்தை உருவாக்கல்”,

முன்பு போலவே, உச்சிமாநாட்டையொட்டி இரு தரப்பும் பயன்பெறும் வகையிலான இருநாடுகளுக்கு இடையான விஷயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பினை எதிர்நோக்கியுள்ளேன்

 

***