Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் உலக காசநோய் நாள் செய்தி


உலக காசநோய் நாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திரமோடி வெளியிட்ட செய்தி பின்வருமாறு:

இந்த ஆண்டின் உலக காசநோய் நாள் மையக்கருத்தான, ‘காசநோய் இல்லா உலகிற்கான தலைவர்கள் தேவை’ என்ற உணர்வுக்கேற்ற வகையில், காசநோயை ஒழிக்கும் இயக்கத்திற்கு தலைமையேற்கும்படி குடிமக்களையும், அமைப்புகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன். காசநோய் இல்லாத உலகம் தான் மனிதகுலத்திற்கு செய்யப்படும் அற்புதமான சேவையாகும்.

இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. காசநோயை 2030-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க உலகம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற நாம் விரும்புகிறோம்.