Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் உஜ்வாலா திட்டம் – பிரதமர் துவக்கி வைத்தார்; மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்

பிரதமரின் உஜ்வாலா திட்டம் – பிரதமர் துவக்கி வைத்தார்; மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி பயனாளிகளுக்கு  சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்

பிரதமரின் உஜ்வாலா திட்டம் – பிரதமர் துவக்கி வைத்தார்; மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி பயனாளிகளுக்கு  சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்


பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை பாலியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஐந்து கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மே முதலாம் நாள் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுவதை குறிப்பிட்ட பிரதமர், இந்நூற்றாண்டு அனைத்து உழைப்பாளர்களும் உலகை ஒருங்கிணைப்பதை தங்களின் இலட்சியமாக கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஏழைகளின் நலனில் மத்திய அரசு முக்கியக் கவனம் செலுத்தி வருவதை நினைவு கூர்ந்த பிரதமர், கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு உழைப்பாளர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார்.

ஷ்ரம் சுவிதா இணைய தளத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழிலாளர் அடையாள எண் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாலியா, மங்கள் பாண்டேவின் புரட்சி நிலம் என்பதை நினைவு கூறிய பிரதமர், பலகாலங்களாக உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதிகள் வளர்ச்சி இன்றி இருந்தது. இப்போது இப்பகுதியின் இணைப்பு வலுப்படுத்தப் பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியையும் பிரதமர் குறிப்பிட்டார். வறுமைக்கு எதிராக நாம் போராடுவதற்கு இந்தியாவின் கிழக்குப் பகுதியும் வளர்ச்சியின் பழங்களை ருசிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

ஏழைகளின் நலனைக் கருதி திட்டங்கள் அமைக்கப்பட வேண்டுமே தவிர வெறும் தேர்தல் லாபத்திற்காக இருக்கக் கூடாது என்று பிரதமர் கூறினார். பிரதமரின் உஜ்வாலா திட்டம் ஏழைகளுக்கு, முக்கியமாகப் பெண்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

***