ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின், மூன்றாவது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதமர் பதவியை வகிக்கவுள்ளதற்காக நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் இந்தியா-ரஷ்யா இடையே சிறப்பான மற்றும் முன்னுரிமை மிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
2024-ம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ரஷ்ய அதிபர் திரு புதினுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
***
(Release ID: 2022970)
PKV/AG/RR