திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது தொடர்பை தாம் எப்போதும் போற்றி வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது கலந்துரையாடல்களின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்காக ஷர்மிஸ்தா முகர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ள திரு மோடி, திரு முகர்ஜியின் நுண்ணறிவு, ஞானம் ஆகியவை இணையற்றது என்று பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், ஷர்மிஸ்தா முகர்ஜியின் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“பிரணாப் பாபுவுடனான எனது உரையாடல்களின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஷர்மிஸ்தா அவர்களுக்கு நன்றி. பிரணாப் அவர்களுடனான எனது தொடர்பை நான் எப்போதும் போற்றுவேன். அவரது நுண்ணறிவும் ஞானமும் இணையற்றவை. @Sharmistha_GK“
***
(Release ID: 2083519)
TS/PKV/RR/KR
Thank you Sharmistha Ji for bringing back several memories of my interactions with Pranab Babu. I will always cherish my association with him. His insights and wisdom remain unparalleled.@Sharmistha_GK https://t.co/sFPS7ODpyu
— Narendra Modi (@narendramodi) December 11, 2024