Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான, செயலூக்கம் உள்ள நிர்வாகம் மற்றும் குறித்த நேர செயல்பாட்டுக்கான பன்முனை தளமாக உள்ள பிரகதி (PRAGATI) – மூலம் அதன் 20வது கலந்துரையாடல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தினாலும் மற்ற இயற்கை சீற்றங்களாலும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்து பிரதமர் இந்த கூட்டத்தை துவக்கினார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.

அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. கோட்பாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்துள்ளதை அனைத்து தலைமை செயலர்களும் உறுதி செய்ய வேண்டும். மேலும் இதனை ஆகஸ்ட் 15-க்குள் முடிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மத்திய பொது பணித் துறை மற்றும் இயக்குநரகம் குறித்த குறைகள் கையாளப் படும் முறை மற்றும் தீர்வுகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இதனை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபாட்டுடனும் கவனத்தோடும் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனைத்து விற்பனையாளர்களும் அரசின் இணைய-வணிக முறைக்கு வருவதற்கு மத்திய பொது பணித் துறை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ரயில்வே, சாலை மற்றும் பெட்ரோலிய துறைகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள முக்கிய திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை மூன்றாவது வழித்தடம் மற்றும் சென்னை கடற்கரை – அத்திப்பட்டு நான்காவது வழித்தடம்; ஹவுரா-அம்டா-சம்படங்கா புதிய அகல ரயில் பாதை; மற்றும் வாரணாசி புறவழிச் சாலையை நான்கு வழிப்பாதை ஆக்குதல்; தேசிய நெடுஞ்சாலை – 58ன் முசாபர்நகர் – ஹரித்வார் வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் சில திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் அதில் ஒரு திட்டம் 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் திட்ட செலவினை அதிகரிக்கூடிய தாமதங்களை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் தலைமை செயலர்களை கேட்டுக்கொண்டார். இதுபோன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் துரிதமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை விரைவில் செயல் முறைக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.

***