Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான, செயலூக்கம் உள்ள நிர்வாகம் மற்றும் குறித்த நேர செயல்பாட்டுக்கான பன்முனை தளமாக உள்ள பிரகதி (PRAGATI) – மூலம் அதன் பத்தொன்பதாவது கலந்துரையாடல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

அஞ்சல் சேவை தொடர்பான குறைபாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். அஞ்சல் சேவைக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார். அஞ்சல் சேவைமுறைகளில் எவ்விதமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலைக் கேட்டறிந்த பிரதமர், குறைபாடுகளுக்கு காரணமான அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேட்டறிந்தார். அஞ்சல் துறையின் மனிதவள மேலாண்மை, முறை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு வலுவாக்குதல் ஆகிய துறைகளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

இமாசலப் பிரதேசம், அரியானா, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ரயில்வேத்துறை சாலை மற்றும் மின்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

“குற்றம் மற்றும் குற்றநடவடிக்கைகளை கண்டறியும் பிணையம் மற்றும் முறை”-ஐ (கிரைம் & கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் & சிஸ்ட்டம்ஸ்) பிரதமர் ஆய்வு செய்தார். அனைத்து மாநிலங்களும் இந்த பிணையத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிணையம் நீதித்துறைக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன், குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டணையை வழங்க உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.