Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தனது 12வது பிரகதி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஐ.சி.டி. அடிப்படையிலான, சீரிய நிர்வாகத்துக்கு தேவையான பல்முனை தளம் கொண்ட மற்றும் சரியான நேரத்திலான அமலாக்கத்துக்கு உதவும் நடவடிக்கை பிரகதி ஆகும்.

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை/கல்வி உதவி ஆகியவற்றை வழங்குவது தொடர்பான குறைபாடுகளை கையாள்வது மற்றும் அவற்றை தீர்ப்பது தொடர்பாக பிரதமர் சீராய்வு செய்தார். தாமதத்துக்கான காரணம், மாணவர்களுக்கான பலன்களை வழங்கும் திட்டத்தில் ஆதாரை இணைப்பது தொடர்பான திட்டத்தின் மேம்பாடு ஆகியவை குறித்து பிரதமர் விவரம் கேட்டார். குறைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உதவி ஆகியவை தொடர்பான பிரச்சினைகளுக்கு சீரிய தீர்வு காண்பது தொடர்பாக இலக்கு வைத்து செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

திரிபுரா, மிஜோரம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கான, சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு வரும் சாலை, ரயில்வே, எஃகு மற்றும் மின்துறையில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலைகள் குறித்து பிரதமர் சீராய்வு செய்தார். இந்தியா – வங்கதேசம் இடையே முக்கிய இணைப்பான அகாவ்ரா – அகர்தலா பாதை உள்ளிட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து சீராய்வு செய்தார்.

பிலாய் எஃகு ஆலையின் நவீனமயம் மற்றும் விரிவா’கப் பணிகளின் முன்னேற்றங்களையும் பிரதமர் சீராய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் தாமதத்தை முக்கியமாக எடுத்து கொண்ட பிரதமர், பிரச்சினைகளை தீர்க்க, திட்டத்தை விரைவாக முடிக்கவும் மத்திய எஃகு மற்றும் கனரக பொறியியல் அமைச்சகங்களை கேட்டுக் கொண்டார்.
சுவச் பாரத் இயக்கத்தின் கீழ் அமைந்த புதிய நடவடிக்கையான ‘கழிவில் இருந்து வளம்’ திட்டத்தின் முன்னேற்றங்கள் குறத்து பிரதமர் சீராய்வு செய்தார். ‘கழிவை உரமாக்குதல்’ மற்றும் ‘கழிவை மின்சாரமாக மாற்றுதல்’ ஆகிய இரு திட்டங்களை அவர் ஆராய்ந்தார். இந்த புதிய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பல்வேறு மாநிலங்கள் விரிவாக விவரங்களை அனுப்பி இருந்தன.

பின்னர் சுகாதாரத்துறையில், காசநோயை மேலும் கட்டுப்படுத்தவும், இதனால் ஏற்படும் இறப்புகளை குறைக்கவும் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை பிரதமர் சீராய்வு செய்தார். காசநோய் எதிர்ப்பு கூட்டு மருந்தை கண்டுபிடிப்பதற்கான அத்தியாவசிய கருவிகளை மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் பொருத்தவும் அவர் உத்தரவிட்டார். மாவட்ட அளவில் இந்த நோய்க்கு எதிராக போராட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் சீராய்வு செய்தார்.

பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவக் கால இறப்பு விகிதம் (ஐ.எம்.ஆர். மற்றும் எம்.எம்.ஆர்.) ஆகியவற்றை குறைத்தல், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் சீராய்வு செய்தார்.