Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமரின் கலந்துரையாடல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் தகவல், தொடர்பு, தொழில்நுட்பம் அடிப்படையிலான, செயல்திறன் சார் ஆளுமை மற்றும் உரிய நேரம் செயலாக்கத்திற்கான பல்-மாதிரி தளமான-26வது பிரகதி கலந்துரையாடல் நடைபெற்றது.

இது வரை 25 பிரகதி சந்திப்புகளில் ரூ பத்து லட்ச கோடி முதலீட்டை கொண்ட 227 திட்டங்களின் மொத்த ஆய்வு நடைபெற்று உள்ளது. பல்வேறு துறைகளுக்கான பொது மக்கள் குறை தீர்ப்பும் ஆய்வு செய்யப்பட்டது.

26வது சந்திப்பில் இன்று பிரதமர் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ரயில்வே தொடர்பான கையாளுதல் மற்றும் குறை தீர்ப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அஞ்சல் மற்றும் ரயில்வேத் துறைகளில் கணினி முறையிலான பரிமாற்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் குறிப்பாக பீம் செயலி பயன்பாட்டின் மூலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ரயில்வே, சாலை, பெட்ரோலியம், எரிசக்தித் துறைகளில் உள்ள ஒன்பது உள்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சியை பிரதமர் ஆய்வு செய்தார். ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரேதசம், ஒடிசா, பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்களில் மேற்கு மாநிலப் பிரத்யேக சரக்குப் பாதை மற்றும் சார் தாம் மஹாமார்க் விகாஸ் பரியோஜனா திட்டமும் அடங்கும்.

அம்ருத் இயக்கத்தின் செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் முழுமையான கணினி மையமாக்கல் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

***