Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலமாக பிரதமரின் கலந்துரையாடல்

பிரகதி மூலமாக பிரதமரின் கலந்துரையாடல்


தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான, செயலூக்கம் உள்ள நிர்வாகம் மற்றும் குறித்த நேர செயல்பாட்டுக்கான பன்முனை தளமாக உள்ள பிரகதி (PRAGATI) – மூலம் அதன் பதினெட்டாவது கலந்துரையாடல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

ரயில்வே தொடர்பான குறைகளை கையாளுதல் மற்றும் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் ஆய்வு செய்தார். பெருமளவிலான புகார்கள் அதிகாரிகளின் ஊழல் செயல்பாடுகள் தொடர்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊழல் குற்றம் நிரூபிக்கப்படும் ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக அதிகபட்ச கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். விபத்து நேரிட்டால் உதவி கோருவது உள்பட, அனைத்து குறைகள் மற்றும் விசாரணைகளுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை உருவாக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ரயில்வே, சாலை மற்றும் மின்சாரத் துறைகளில் முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றங்களை பிரதமர் ஆய்வு செய்தார். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், அசாம், மணிப்பூர், மேகலாயா, மிசோரம், திரிபுரா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார்.

இன்று ஆய்வு செய்த திட்டங்களில் அடங்குபவை : மும்பை மெட்ரோ, திருப்பதி – சென்னை நெடுஞ்சாலை, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மணிப்பூரில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சாலைத் திட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதியில் முக்கியமான மின்சார பகிர்மான வழித்தடம் உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள்.

குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த நோய்த் தடுப்புக்கான இந்திரதனுஷ் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், இதுதொடர்பாக மிக மோசமான செயல்பாடு உள்ள 100 மாவட்டங்களில், உரிய கால அவகாசத்துக்குள் உறுதியாக திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நோய்த்தடுப்பு மருந்து போடுவதால் கிடைக்கும் ஆதாயத்தை எல்லா குழந்தைகளும் பெறுவதை உறுதி செய்வதற்கு என்.சி.சி. மற்றும் நேரு யுவ கேந்திரா போன்ற இளைஞர் அமைப்புகளை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

ஸ்வச்சத்தா செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்த பிரதமர், ஸ்வச்சத்தா இருவார நிகழ்ச்சிகள் நிரந்தர தீர்வுகளுக்கான இயக்கங்களாக மாற்றப்பட வேண்டும் என்று கூறினார். அம்ரூத் (AMRUT) திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், எல்.இ.டி. (LED) பல்புகள் போன்ற அண்மைக்கால தொழில் நுட்பங்களை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த ஆதாயங்களை அளவிட்டு, ஆவணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் எல்லோரும் இந்த ஆதாயங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

75வது சுதந்திர ஆண்டான 2022க்குள் எட்டப்படக் கூடிய வகையில் உறுதியான திட்டங்கள் மற்றும் மாறுதலுக்கான நோக்கங்களை முன்வைக்குமாறு அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், இந்திய அரசின் அனைத்து செயலாளர்கள் ஆகியோரை பிரதமர் வலியுறுத்தினார். தூய்மையைப் பொருத்த வரையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டான 2019-க்கு முன்னதாக அதிகபட்ச முயற்சிகளும் எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

******