Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி அமைப்பு மூலம் பிரதமரின் கலந்துரையாடல்


துடிப்பான ஆளுகைக்கும் உரிய கால நேர அமலாக்கத்திற்குமான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பல ஊடக மேடையான பிரகதி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது 25-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்.
பிரகதியின் 25-வது கூட்டத்தில் 227 திட்டங்கள் மொத்தமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்தத் திட்டங்கள் ரூபாய் 10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டிலானவை. பல்வேறு துறைகள் சார்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு பற்றியும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

25-வது பிரகதி கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றதற்கு அக்கறையுள்ள அனைவருக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். பிரகதி அமைப்பு காரணமாக மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரித்திருக்கிறது என்றார். பிரகதி திட்டம் நமது கூட்டாட்சி அமைப்புக்கு ஒரு பெரிய ஆக்கப்பூர்வ சக்தி என்று அவர் கூறினார். நின்று போன திட்டங்களை ஆய்வுச் செய்ததுடன் இந்த முறையினால் பல்வேறு சமூகத் துறை திட்டங்களின் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்ய முடிகிறது என்றார்.

இன்று (25.04.2018) 25-வது கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலன் குறித்த குறை தீர்ப்பு முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். குறை தீர்ப்பு நடைமுறையை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அப்போதுதான் முன்னாள் படை வீரர்களின் பிரச்சனைகளை மிகக் குறுகிய காலத்தில் நல்ல முறையில் தீர்க்க முடியும் என்றார் அவர்.

ரயில்வே, சாலை, பெட்ரோலியம், மின்சாரம், நிலக்கரி, நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம், குடும்ப நலத்துறைகள் சார்ந்த 10 அடிப்படை வசதித் திட்டங்களின் முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்தார். இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, அசாம், சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்ட அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் உயர் கல்விக்கான தேசிய ஆய்வுக் கல்வி உதவித் திட்டம் கல்வி உதவித் தொகைத் திட்டம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

***