Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் முன்மொழிந்துள்ளார்


தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை  உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். பிம்ஸ்டெக் நாடுகள் முழுவதும் வணிகத்தை ஊக்கப்படுத்துவது பற்றி குறிப்பிட்டுள்ள அவர், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளமான திறனை பயன்படுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார். அண்மையில் மியான்மரையும், தாய்லாந்தையும் பாதித்த நிலநடுக்க பின்னணியில் இயற்கை சீற்ற மேலாண்மை துறையில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். விண்வெளி உலகத்தில் பணியாற்றுவது குறித்தும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்தும் திரு மோடி எடுத்துரைத்துள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பை கூட்டாக ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தலைமை ஏற்பதில் இளைஞர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். கலாச்சார பிணைப்புகள் பிம்ஸ்டெக் நாடுகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

“உலகளாவிய நன்மைக்கு மிகமுக்கியமான அமைப்பாக பிம்ஸ்டெக் உள்ளது. அதனை வலுப்படுத்துவதும் நமது ஈடுபாட்டை அதிகரிப்பதும் அவசியமானதாகும். இந்தச் சூழலில் நமது ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 20 அம்ச செயல் திட்டம் ஒன்றை நான் முன்மொழிந்துள்ளேன்.”

“பிம்ஸ்டெக் நாடுகள் முழுவதும் வணிகத்தை ஊக்கப்படுத்துவதற்கான தருணம் இதுவாகும்.”

“தகவல் தொழில்நுட்ப துறையின் வளமான திறனை பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக பிம்ஸ்டெக் அமைப்பை வலுப்படுத்துவோம்.”

“அண்மையில் மியான்மரையும், தாய்லாந்தையும் பாதித்த நிலநடுக்கம், இயற்கைச் சீற்ற மேலாண்மை துறையில் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தைக் கோடிட்டு காட்டுகிறது.”

“விண்வெளி உலகத்திற்கு நமது ஒத்துழைப்பை கொண்டுசெல்வோம். பாதுகாப்பு அம்சங்களையும் வலுப்படுத்துவோம்.”

“திறன் கட்டமைப்பில் ஒளிரும் உதாரணமாக இருக்கும் திறனை பிம்ஸ்டெக் பெற்றுள்ளது. ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் அனைவரும் கற்றுகொள்வோம், வளர்வோம்!”

“பிம்ஸ்டெக் அமைப்பை கூட்டாக ஊக்கப்படுத்துவோம். நமது இளைஞர்கள் தலைமை ஏற்கவுள்ளனர்.”

“கலாச்சாரம் போன்ற சில விஷயங்கள் இணைப்பை ஏற்படுத்துகின்றன! கலாச்சார இணைப்புகள் பிம்ஸ்டெக்  நாடுகளை மேலும் நெருக்கமாக கொண்டுவரட்டும்.”

***

(Release ID: 2118661)

TS/SMB/AG/SG