Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்


பிப்ரவரி 17 அன்று தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இரவு மணி 7.40-க்கு நடைபெறும் எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

     மீள்திறன், செல்வாக்கு, ஆதிக்கம் என்ற கருப்பொருள் கொண்டு உலக வர்த்தக மாநாடு 2023 நடைபெறவுள்ளது.   பிப்ரவரி 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறுகிறது.

     டைம்ஸ் குழுமம் மூலம் ஆண்டுதோறும் உலக வர்த்தக மாநாடு நடத்தப்படுகிறது. முக்கியப் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண சிந்தனைத் தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்களை பொதுவான தளத்தில் இம்மாநாடு ஒன்றிணைக்கும். 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள் மாநாட்டின் 40 அமர்வுகளில் பேசவுள்ளனர்.

*******

(Release ID: 1899908)

SG/IR/UM/KRS