பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சுமார் 4 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுகிறார்.
பிப்ரவரி 14 முதல் 17 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஒரு மெகா உலகளாவிய நிகழ்வான பாரத் டெக்ஸ் 2025 தனித்துவமானது. ஏனெனில் இது மூலப்பொருட்கள் முதல் முடிக்கப்பட்ட பொருட்கள் வரை முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருகிறது.
பாரத் டெக்ஸ் தளம் என்பது ஜவுளித் துறையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான நிகழ்வாகும், இது இரண்டு இடங்களில் பரவி முழு ஜவுளி சுற்றுச்சூழல் அமைப்பையும் காட்சிப்படுத்துகிறது. இது 70- க்கும் மேற்பட்ட மாநாட்டு அமர்வுகள், வட்டமேசைகள், குழு விவாதங்கள் மற்றும் மாஸ்டர் வகுப்புகள் ஆகியவற்றைக் கொண்ட உலகளாவிய மாநாட்டையும் கொண்டிருக்கும். இதில் சிறப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப் அரங்குகள் இடம்பெறும் கண்காட்சியும் அடங்கும்.
பாரத் டெக்ஸ் 2025 கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 5000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6000 சர்வதேச வாங்குபவர்கள் உட்பட பல்வேறு பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு , சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு , ஈரோடெக்ஸ், ஜவுளி பரிமாற்றம், அமெரிக்க ஃபேஷன் தொழில் சங்கம் உள்ளிட்ட உலகெங்கிலும் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய ஜவுளி அமைப்புகள் மற்றும் சங்கங்களும் பங்கேற்கும்.
***
PKV/KV