Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிங்கலி வெங்கய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை


பிங்கலி வெங்கய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்கு மூவர்ணக் கொடியை வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றி, harghartiranga.com  இணைய தளத்தில் தங்கள் செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு  நாட்டு மக்களை திரு மோடி கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

பிங்கலி வெங்கய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். மூவண்ணக் கொடியை நமக்கு வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சி எப்போதும் நினைவுகூரப்படும்.

ஆகஸ்ட் 9 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை ஆதரித்து மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள்! உங்கள் செல்ஃபியை harghartiranga.comஇல் பகிர்ந்து கொள்ள மறவாதீர்”

***

MM/AG/KV