Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிஎஸ்எல்வி-சி54 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்எஸ்ஐஎல்-க்கு பிரதமர் வாழ்த்து


பிஎஸ்எல்வி-சி54 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்எஸ்ஐஎல்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவுத்துள்ளார். இதில் பங்கு கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் திரு. மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர் ட்வீட்களில் பிரதமர் கூறியதாவது;

“பிஎஸ்எல்வி-சி54 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்எஸ்ஐஎல்-க்கு வாழ்த்துக்கள். இஒஎஸ்-06 செயற்கைக்கோள் நமது கடல் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும்.”

“இந்திய நிறுவனங்களான பிக்ஸல் ஸ்பேஸ் (@PixxelSpace) மற்றும் துருவா ஸ்பேஸ் (@DhruvaSpace) ஆகிய நிறுவனங்களின் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்திய திறமைகளை இது எடுத்துரைக்கிறது.  இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.”

**************

PKV / SRI  / DL