Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிஎஸ்எஃப் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி நாளில், நமது எல்லைகளின் பாதுகாவலராக முத்திரை பதித்த சிறந்த படையை நாம் பாராட்டுகிறோம். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரமும் அசைக்க முடியாத மனப்பான்மையும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இயற்கைப் பேரழிவுகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பங்கையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”

***

ANU/SMB/BS/AG