Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாலி மற்றும் மராத்தி மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதற்காக பிக்கு சங்க உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

பாலி மற்றும் மராத்தி மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதற்காக பிக்கு சங்க உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்


பாலி மற்றும் மராத்தி மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவிற்கு  மும்பை பிக்கு சங்க உறுப்பினர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் தெரிவித்ததாவது:

“மும்பை பிக்கு சங்க உறுப்பினர்கள் என்னைச் சந்தித்து, பாலி மற்றும் மராத்திக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்குவதற்கான அமைச்சரவையின் முடிவு குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பௌத்தத்துடன் பாலி மொழிக்கு உள்ள வலுவான தொடர்பை நினைவு கூர்ந்த அவர்கள், வரும் காலங்களில் அதிகமான இளைஞர்கள் பாலி மொழியைப் பற்றி அறிந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.”

*************** 

BR/KV