Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்

பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்


பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிற ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் ‘டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்’ என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் செய்து பார்வையிட்டார்.

மாங்குரோவ் தாவரங்கள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஜி-20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்துள்ளது.

இந்தியாவின் 5000 சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 50-க்கும் அதிகமாக மாங்குரோவ் வகைகள் இருப்பதை காணலாம். காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சும் திறனும், செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் தன்மையும் கொண்ட மாங்குரோவ் காடுகளை பாதுகாத்து, மறுசீரமைப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

                              **********

(Release ID: 1876310)

PKV/KG/RR