பாலாசாஹேப் தாக்கரே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பொது நலனுக்காகவும், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகவும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்காக திரு தாக்கரே பரவலாக மதிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“பாலாசாகேப் தாக்கரே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பொது நலனுக்காகவும், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகவும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார். தனது முக்கிய நம்பிக்கைகள் என்று வரும்போது அவர் சமரசமற்றவராக இருந்தார். இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையை மேம்படுத்துவதற்கு அவர் எப்போதும் பங்களிப்பு செய்தார்.”
***
(Release ID: 2095317)
TS/SMB/KR
I pay homage to Balasaheb Thackeray Ji on his birth anniversary. He is widely respected and remembered for his commitment to public welfare and towards Maharashtra’s development. He was uncompromising when it came to his core beliefs and always contributed towards enhancing the…
— Narendra Modi (@narendramodi) January 23, 2025