Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவானி லெகராவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து


பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல்,  ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப்  பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை அவானி லெகராவிற்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பாராலிம்பிக் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதலாவது பெண் வீராங்கணை என்ற வரலாற்று சாதனையையும் அவானி லெகரா படைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.  

பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் வலைதளப் பதிவில்; 

“#பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் இந்தியா பதக்க கணக்கைத் தொடங்கியுள்ளது! 

ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள @அவானி லெகராவிற்கு வாழ்த்துகள்.   பாராலிம்பிக் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதலாவது பெண் வீராங்கணை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்!. அவரது அர்ப்பணிப்பு, இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமிதம் அளிக்கும்.

#Cheer4Bharat”  என்று குறிப்பிட்டுள்ளார்.  

********

MM/DL