Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரீஸ் ஒப்பந்தம் குறித்து பிரதமர் : பருவநிலைக்கான நீதிக்கு வெற்றி. இந்த ஒப்பந்தம் உலகத் தலைவர்களின் ஞானத்துக்கான அடையாளம் என்கிறார் பிரதமர்.


பாரீசில் சமீபத்தில் நடந்து முடிந்த பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில், பருவநிலைக்கான நீதி வென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். காப் 21 மாநாடு மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உலக நாடுகளின் தலைவர்களின் ஞானத்தை வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். தனது கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்ட பிரதமர், பாரீஸ் ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றவர்களும் இல்லை, தோல்வியடைந்தவர்களும் இல்லை என்று குறிப்பிட்டார்.

“சி.ஓ.பி. 21 மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் பாரீஸ் ஒப்பந்தம், பருவ நிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற உலக நாடுகளின் தலைவர்களின் ஞானத்தைக் காட்டுவதோடு, ஒவ்வொரு நாடும் இந்த சவாலை எதிர்கொண்டு இதற்கான தீர்வினை அடைய தயாராக இருந்தன.

பாரீஸ் ஒப்பந்தத்தின் முடிவில் வெற்றி பெற்றவர்களும் இல்லை. தோல்வியடைந்தவர்களும் இல்லை. பருவநிலைக்கான நீதி வெற்றி பெற்றுள்ளது. நாம் அனைவரும் பசுமையான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறோம்” என்று பிரதமர் தனது ட்வீட்களில் குறிப்பிட்டார்.