Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரீஸில் நடந்த சி.ஓ.பி 21 தொடக்க மாநாட்டில் பிரதமரின் உரை


அதிபர் ஹோலண்டே அவர்களே, மேதகு அதிபர்களே,

பாரீஸின் வலி இன்னும் ஆறவில்லை. ஆகையால் நான் பேசுகையில் உங்களின் தீரத்தையும், உறுதியையும் வியந்தே பேசத் தொடங்குகிறேன். பிரான்ஸ் மற்றும் பாரீஸோடு இத்தருணத்தில் இணைந்து நின்ற உலகத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

அடுத்த சில நாட்களில் நாம் இந்த கோளத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளோம். படிம எரிபொருட்களினாலும், தொழில்மயமான உலகினாலும் ஏற்படும் விளைவுகள் வெளிப்படையாக தெரியும் நிலையில், குறிப்பாக ஏழைகள் வாழ்வில் தெரியும் நிலையில் நாம் இது குறித்து விவாதிக்க உள்ளோம். வசதி படைத்தவர்களுக்கு இன்னமும் அழுத்தமான கார்பன் பதிவுகள் உள்ளன. வளர்ச்சியின் கடைசி படியில் உள்ள ஏழைகள் தாங்களும் வளர இடம் வேண்டும் என்று கோருகின்றனர்.

ஆகையால் இது தொடர்பான முடிவுகள் எளிதானவை அல்ல. ஆனால் நம்மிடம் விழிப்புணர்வும், தொழில்நுட்பமும் உள்ளது. நாம் இதற்கான ஒரு தேசிய விருப்பத்தையும், உலகத்தின் கூட்டுறவையும் எதிர்பார்க்கிறோம்.

இந்தியக் குடியரசு 1.25 பில்லியன் மக்களின் தேவைகளுக்கேற்ப வளர வேண்டும். அவர்களுள் 300 மில்லியன் பேர் இன்னமும் மின்சக்தி இல்லாமல் இருக்கிறார்கள். மக்களும் கோளமும் பிரிக்க முடியாதது போலவே மனித நலனும் இயற்கையும் பிரிக்க முடியாதது என்ற எங்களின் பழங்கால நம்பிக்கைக்கு ஏற்ப இந்த வளர்ச்சியை அடைய இருக்கிறோம்.

உத்வேகமிக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். 2030ம் ஆண்டுக்குள் எரிபொருள் உமிழ்வின் தாக்கத்தை ஒரு யூனிட் ஜி.டி.பி. என்ற அளவில் 2005ம் ஆண்டு அளவுக்கு குறைப்பது என்றும், எங்களது மொத்த எரிசக்தி கொள்ளளவில் 40 சதவிகிதத்தை படிமமில்லா எரிபொருள்களில் இருந்து தயாரிப்பது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வது என்றும் திட்டமிட்டுள்ளோம். குறைந்தது 2.5 பில்லியன் டன் அளவிலான கார்பன் டைஆக்சைட் வெளியேற்றத்தை எங்கள் காடுகள் உறிஞ்சிக் கொள்ளும் வகையில் காடுகளை விரிவாக்க உத்தேசித்துள்ளோம். வரி விதிப்பதன் மூலமும், மான்யங்களை குறைப்பதன் மூலமும், படிம எரிபொருட்களின் பயன்பாடுகளை குறைப்பதற்கும், எரிசக்திக்கான இதர வாய்ப்புகளை ஆராயவும், நகரங்களையும், பொது போக்குவரத்தையும் மாற்றுவதன் மூலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

வளர்ந்த நாடுகள் இன்னும் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை சிரத்தையோடு பின்பற்றும் என்று நம்புகிறோம். இது அந்நாடுகளின் வரலாற்று கடமை மட்டுமல்ல. வளர்ந்த நாடுகள் இவ்வகையில் அதிகம் செயல்பட்டால்தான், அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நம்மிடம் உள்ள குறைந்த கார்பன் இடத்தை கருத்தில் கொண்டு, பருவநிலை மாற்றத்துக்கு நியாயம் செய்ய வேண்டுமென்றால் வளர்ந்த நாடுகள் போதுமான கார்பன் வெளியை வைத்திருக்க வேண்டும்.

கியோட்டோ உடன்படிக்கையில் உள்ள இரண்டாவது காலகட்டத்தினை அங்கீகரிப்பதன் மூலமும், அதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்துவதன் மூலமும், இலக்குகளை பரிசீலனை செய்வதன் மூலமும் வளர்ந்த நாடுகள் இதற்கான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தணிக்கும் தன்மை, ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் செயல்படுத்தும் தன்மை ஆகியவற்றை செயல்படுத்துவதில் உள்ள வேறுபாடுகளையும், அதன் கொள்கைகளில் உள்ள ஒருங்கிணைவையும் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும். இதில் வேறுபாடுகள் எழுவது நல்லதல்ல.

இதில் ஒவ்வொரு நாட்டின் பங்கு என்பது, அந்நாடு எத்தனை கார்பன் வெளியை ஆக்கிரமித்துள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.

ஏற்றுக் கொள்ளும் தன்மை, இழப்பு மற்றும் சேதம் குறித்தும் ஒரு வலுவான ஒப்பந்தம் நமக்குத் தேவை. வளரும் நாடுகளில் உள்ள அனைவருக்கும் சுத்தமான எரிசக்தி கிடைப்பதற்கு வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். இது நமது பொதுவான நலனுக்காகவே

வளரும் நாடுகளில் வாயு உமிழ்வினை தணிப்பதற்காகவும், புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதற்காகவும், வளர்ந்த நாடுகள் 2020ம் ஆண்டுக்கு முன்னதாக, 100 பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் செலவிட வேண்டும். அவர்களின் பொறுப்பை நம்பகத்தன்மையுடனும், வெளிப்படையான முறையிலும், அர்த்தபூர்வமாகவும் நிறைவேற்ற வேண்டும்.

எரிசக்தி என்பது மனிதனின் அடிப்படை தேவை. ஆகையால் நமக்கு மக்களின் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்ப உந்துசக்தி தேவை. இதன் பொருட்டு நாம் க்ரீன் க்ளைமேட் நிதியை வளர்த்து, அதற்கு தொழில்நுட்பமும், அறிவுசார் காப்புரிமை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நமக்கு பழமையான எரிசக்தியின் தேவையும் இருக்கிறது. அதன் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தாமல், அதை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாட்டின் தன்னிச்சையான நடவடிக்கையின் காரணமாக இதர நாடுகளக்கு தடை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.

இது தொடர்பான ஆதரவு, உறுதி மற்றும் வேறுபாடுகளின் அடிப்படையில் வெளிப்படையான கணக்கெடுப்பதை வரவேற்கிறோம். இறுதியாக நமது வெற்றிக்கு நாம் நமது வாழ்க்கை முறையை குறைந்த கார்பன் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியளிப்பது அவசியமாகும்.

மேதகு அதிபர்களே,

196 நாடுகளின் பங்கேற்பு, ஒரு பொது நோக்கத்துக்காக நாம் அனைவரும் இணைய முடியும் என்பதை நிரூபிக்கிறது. ஒவ்வொரு நாடுகளின் பொறுப்புகளையும், அதன் திறமை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் ஒரு ஒட்டுமொத்த கூட்டணியை உருவாக்க நம்மிடம் திறனும் துணிவும் இருந்தால் நாம் வெற்றி பெற முடியும்.

நிச்சயம் நாம் இதை செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நன்றி.

*******